ஐபிஎல் இறுதிப்போட்டி: க்ருணாலை வீட்டுக்கு அனுப்பிய தாக்கூரின் வாவ் கேட்ச்!

Updated: 13 May 2019 18:32 IST

முதல் இன்னிங்ஸில் ஷரதுல் தாக்கூர் க்ருணால் பாண்ட்யாவை அவரே கேட்ச் செய்து அசத்திய காட்சி ரசிகர்களை கவர்ந்தது.

Watch: Shardul Thakur
தாக்கூர் 4 ஓவர்கள் வீசி 37 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். © BCCI/IPL

ஷரதுல் தாக்கூர் கடைசி பந்தில் ரன் எடுக்க முடியாமல் மலிங்கா பந்தில் அவுட் ஆனார் . இதனால் 2019 ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் மும்பை சென்னை அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கடைசி பந்தில் இரண்டு ரன்கள் தேவை என்ற நிலையில் மலிங்கா பந்தை எதிர்கொள்ள முடியாமல் எல்பிடபிள்யூ ஆக, சென்னை தோற்றது. ஆனாலும் ரசிகர்களின் விமர்சனங்களிலிருந்து ஷரதுல் தாக்கூர் தப்பித்தார். காரணம் முதல் இன்னிங்ஸில் அவர் க்ருணால் பாண்ட்யாவை அவரே கேட்ச் செய்து அசத்திய காட்சி ரசிகர்களை கவர்ந்தது.

மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் வலிமையான நிலையில் இருந்தது. டிகாக் சென்னை அணியை சிக்சர்களால் டீல் செய்ய துவங்கினார். ஆனால் அவரை தாக்கூர் வீழ்த்தினார். 

ரோஹித் 15, சூர்யகுமார் 15 என ரன்குவித்தனர். ஆரம்ப அதிரடியை இறுதியில் சென்னை கட்டுப்படுத்தியது. 27 வயதான தாக்கூர், க்ருணால் பாண்ட்யாவுக்கு பவுண்ஸரை வீச அவர் அதை ஓங்கி அடித்தார். பந்து சரியாக அதிக தூரம் செல்லாமல் அதிக உயரம் சென்று தாக்கூரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் க்ருணால் பாண்ட்யா. 

இந்த கேட்ச்சை எளிதாக அல்லாமல் வேகமாக ஓடி, கையில் பட்டு லேசாக மேலெழும்பிய பந்தை லாவகமாக பிடித்தார். 

தாக்கூர் 4 ஓவர்கள் வீசி 37 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் சி.எஸ்.கே, மும்பையை 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது.

ஷேன் வாட்சன் 59 பந்தில் 80 ரன்கள் குவித்தார். ஆனாலும் அது வெற்றிக்கு கைகொடுக்கவில்லை. மும்பை 4வது முறையாக பட்டம் வென்றது.

Comments
ஹைலைட்ஸ்
  • க்ருணால் பாண்ட்யாவை தாக்கூரே கேட்ச் செய்து அசத்தினார்
  • கடைசி பந்தில் ரன் எடுக்க முடியாமல் மலிங்கா பந்தில் அவுட் ஆனார் தாக்கூர்
  • ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் மும்பை அணி சென்னையை வீழ்த்தி வெற்றி பெற்றது
தொடர்புடைய கட்டுரைகள்
ஐபிஎல் இறுதிப்போட்டி: க்ருணாலை வீட்டுக்கு அனுப்பிய தாக்கூரின் வாவ் கேட்ச்!
ஐபிஎல் இறுதிப்போட்டி: க்ருணாலை வீட்டுக்கு அனுப்பிய தாக்கூரின் வாவ் கேட்ச்!
''ராகுல், மோடி வேண்டாம்... தோனி தான் அடுத்த பிரதமர்'' ட்விட்டரில் நெகிழ்ந்த ரசிகர்கள்
ஐபிஎல் கோப்பை வெற்றிக்குப் பிறகு சி.எஸ்.கே-வின் மாஸ் கொண்டாட்டம்!
ஐபிஎல் கோப்பை வெற்றிக்குப் பிறகு சி.எஸ்.கே-வின் மாஸ் கொண்டாட்டம்!
ஐபிஎல் 2018 ப்ளே-ஆஃப்: சென்னை, ஐதராபாத் பலப்பரீட்சை!
ஐபிஎல் 2018 ப்ளே-ஆஃப்: சென்னை, ஐதராபாத் பலப்பரீட்சை!
Advertisement