ரெய்னாவை டக் அவுட் ஆக்கிய ஸ்டெயின் யார்க்கருக்கு நெஹ்ராவின் ரியாக்‌ஷன்!

Updated: 22 April 2019 11:37 IST

சென்னைக்கு எதிரான ஆட்டத்தை நேற்று ஆர்சிபி ஒரு ரன் வித்தியாசத்தில் வென்று அசத்தியது. இதில் முதல் ஓவரிலேயே வாட்சன் மற்றும் ரெய்னாவை வீழ்த்து அணியின் வெற்றியை துவக்கி வைத்தார்.

RCB vs CSK: Ashish Nehras Reaction To Dale Steyns Ferocious Yorker Is Not To Be Missed - Watch
ஆர்சிபியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா ஸ்டெயினின் யார்க்கரை கண்டு செய்த ரீயாக்‌ஷன் வைரலானது.  © Screengrab: www.iplt20.com

டேல் ஸ்டெயின், ஆர்சிபி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும் நபராக மாறியுள்ளார். சென்னைக்கு எதிரான ஆட்டத்தை நேற்று ஆர்சிபி ஒரு ரன் வித்தியாசத்தில் வென்று அசத்தியது. இதில் முதல் ஓவரிலேயே வாட்சன் மற்றும் ரெய்னாவை வீழ்த்து அணியின் வெற்றியை துவக்கி வைத்தார். முதலில் 5வது பந்தில் வாட்சனை முதல் ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த ஸ்டானின்ஸ் கேட்ச் செய்து வெளியேற்றினார். முதல் ஓவரின் கடைசி பந்தில் அருமையான யார்க்கர் மூலம் ரெய்னாவை போல்டாக்கினார். இந்த இரு அபாயகரமான வீரர்களையும் வீழ்த்திய சந்தோஷத்தில் கேப்டன் விராட் துள்ளி குதித்து ஆர்ப்பரித்தார். அதேநேரத்தில் ஆர்சிபியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா ஸ்டெயினின் யார்க்கரை கண்டு செய்த ரீயாக்‌ஷன் வைரலானது. 

ஸ்டெயின், காயமடந்தை கோல்டர் நைலுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டார். ஐபிஎல் 2019ல் இணைந்த போட்டியிலேயே முதல் ஓவரில் கொல்கத்தாவின் கிறிஸ் லின்னை வெளியேற்றி ஆச்சர்யப்படுத்தினார்.

கொல்கத்தாவுடன் 2/40 என்ற பந்துவீச்சை பதிவு செய்தார் ஸ்டெயின். இந்த போட்டியை ஆர்சிபி 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

2008 முதல் 2010 வரை ஆர்சிபிக்கு ஆடிய ஸ்டெயின் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஸ்டெயின் பின்னர் குஜராத் லயன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணிகளிலும் ஆடியுள்ளார். 

தொடர்ந்து 6 தோல்விகளை சந்தித்த ஆர்சிபிக்கு ஸ்டெயின் வருகை ஆறுதல் அளித்துள்ளது. 

Comments
ஹைலைட்ஸ்
  • டேல் ஸ்டெயின் ஆர்சிபி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்கிறார்
  • அருமையான யார்க்கர் மூலம் ரெய்னாவை போல்டாக்கினார் ஸ்டெயின்
  • 2 வீரர்களையும் ஸ்டெயின் வீழ்த்திய சந்தோஷத்தில் விராட் துள்ளி குதித்தார்
தொடர்புடைய கட்டுரைகள்
பிக் பாஷ் லீக்: ஜேக் வீதரால்ட்டை வெளியேற்றிய டேல் ஸ்டெய்ன்!
பிக் பாஷ் லீக்: ஜேக் வீதரால்ட்டை வெளியேற்றிய டேல் ஸ்டெய்ன்!
"இதனால் தான் ஸ்டெயினுக்கு அணியில் இடமில்லை" - விளக்கமளித்த சிஎஸ்ஏ!
"இதனால் தான் ஸ்டெயினுக்கு அணியில் இடமில்லை" - விளக்கமளித்த சிஎஸ்ஏ!
ட்விட்டரில் ஏற்பட்ட குழப்பம்... விராட் கோலியிடம் மன்னிப்பு கேட்ட ஸ்டெயின்!
ட்விட்டரில் ஏற்பட்ட குழப்பம்... விராட் கோலியிடம் மன்னிப்பு கேட்ட ஸ்டெயின்!
"உண்மையான சேம்பியன்" - டேல் ஸ்டெயினுக்கு வாழ்த்து சொன்ன விராட் கோலி!
"உண்மையான சேம்பியன்" - டேல் ஸ்டெயினுக்கு வாழ்த்து சொன்ன விராட் கோலி!
"டெஸ்ட் போட்டிகளில் இனி ஆடப்போவதில்லை" - ஓய்வை அறிவித்த டேல் ஸ்டெயின்!
"டெஸ்ட் போட்டிகளில் இனி ஆடப்போவதில்லை" - ஓய்வை அறிவித்த டேல் ஸ்டெயின்!
Advertisement