கோப்பையை வென்ற மும்பை அணிக்கு உற்சாக வரவேற்பளித்த ரசிகர்கள்!

Updated: 14 May 2019 13:18 IST

மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் அணிகளிலேயே அதிக முறை பட்டம் வென்ற அணி என்ற பெயரை பெற்றுள்ளது.

Mumbai Indians Set Out For Champions Parade Amid Heavy Fanfare
மும்பை ரசிகர்கள் பேருந்தை சுற்றி கோஷங்களுடனும், ட்ரம்ஸ் வாசித்தும் தங்களது அணி வீரர்களுக்கு வரவேற்பு அளித்தனர். © Twitter

மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடும் விதமாக திறந்தவெளி பேருந்தில் மும்பை வீதிகளில் வலம் வந்தனர். மும்பை பயிற்சியாளர் ஜெயவர்த்தனே, வீரர்கள் ரோஹித் ஷர்மா, யுவராஜ்சிங், ஹர்திக் பாண்ட்யா மற்றும் பும்ரா ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்த பயணம் பீட்டர் ரோட்டில் துவங்கி நரிமன் பாயிண்ட் வரை நடைபெற்றது. மும்பை ரசிகர்கள் பேருந்தை சுற்றி கோஷங்களுடனும், ட்ரம்ஸ் வாசித்தும் தங்களது அணி வீரர்களுக்கு வரவேற்பு அளித்தனர். மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் அணிகளிலேயே அதிக முறை பட்டம் வென்ற அணி என்ற பெயரை பெற்றுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஒரு ரன்னில் வீழ்த்தி மும்பை அணி 2019 ஐபிஎல் பட்டத்தை வென்றது.

சி.எஸ்.கேவை மும்பை அணி நான்கு ஃபைனல்களில் சந்தித்து அதில் மூன்றில் வென்றுள்ளது.

150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய சென்னை அணியின் வாட்சன் 80 ரன்கள் குவித்தார். ஆனால் கடைசி பந்தில் 2 ரன்கள் எடுக்க முடியாமல் தாக்கூர் அவுட் ஆனதையடுத்து மும்பை ஒரு ரன்னில் போட்டியை வென்று சாம்பியன் ஆனது. 

முன்னதாக சி.எஸ்.கே வீரர் தீபக் சஹார் சிறப்பாக பந்துவீசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். மும்பை வீரர் பொலார்ட் ஆட்டமிழக்காமல் 25 பந்தில் 41 ரன்களை குவித்தார்.

மும்பை அணிக்காக பும்ரா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆட்டத்தின் மிக முக்கியமான கடைசி ஓவரை மலிங்கா சிறப்பாக வீசினார். 

Comments
ஹைலைட்ஸ்
  • அதிக முறை பட்டம் வென்ற அணி என்ற பெயரை பெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ்
  • மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடினர்
  • மூன்றாவது முறையாக மும்பை அணியிடம் தோற்றது சிஎஸ்கே
தொடர்புடைய கட்டுரைகள்
"நீங்கள் வந்தது மகிழ்ச்சி" - நீதா அம்பானிக்கு நன்றி தெரிவித்த ஹர்திக் பாண்ட்யா!
"நீங்கள் வந்தது மகிழ்ச்சி" - நீதா அம்பானிக்கு நன்றி தெரிவித்த ஹர்திக் பாண்ட்யா!
"கோலி சிறந்த கேப்டனாக ரோஹித் மற்றும் தோனி தான் காரணம்" - கவுதம் கம்பீர்!
"கோலி சிறந்த கேப்டனாக ரோஹித் மற்றும் தோனி தான் காரணம்" - கவுதம் கம்பீர்!
மனைவி, குழந்தையுடன் விடுமுறையை கொண்டாடும் ரோஹித் ஷர்மா!
மனைவி, குழந்தையுடன் விடுமுறையை கொண்டாடும் ரோஹித் ஷர்மா!
"தோனி ரன் அவுட் ட்விட்டை நீக்க இதுதான் காரணம்" - நியூசிலாந்து ஜிம்மி நீஷம் விளக்கம்!
"தோனி ரன் அவுட் ட்விட்டை நீக்க இதுதான் காரணம்" - நியூசிலாந்து ஜிம்மி நீஷம் விளக்கம்!
ஆறு தையல்... ரத்தம் சொட்ட ஆடிய வாட்சனுக்காக உருகிய ஹர்பஜன்!
ஆறு தையல்... ரத்தம் சொட்ட ஆடிய வாட்சனுக்காக உருகிய ஹர்பஜன்!
Advertisement