தோனி முன்பே ஹெலிகாப்டர் ஷாட் ஆடி அசத்திய ஹர்திக் பாண்ட்யா!

Updated: 04 April 2019 13:22 IST

இந்திய முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியின் ட்ரேட்மார்க் ஷாட்டான ஹெலிகாப்டர் ஷாட்டை நேற்று மும்பை இந்தியன்ஸ் வீரர் ஹர்திக் பாண்ட்யா ப்ராவோ வீசிய பந்தில் ஆடினார்.

MS Dhoni Reacts As Hardik Pandya Pulls Off A Perfect
ஆட்டம் முடிந்ததும் பேட்டியளித்த ஹர்திக் பாண்ட்யா, "தோனியின் முன் அந்த ஷாட்டை ஆடுவது மகிழ்ச்சியளிக்கிறது" என்றார். © BCCI/IPL

இந்திய முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியின் ட்ரேட்மார்க் ஷாட்டான ஹெலிகாப்டர் ஷாட்டை நேற்று மும்பை இந்தியன்ஸ் வீரர் ஹர்திக் பாண்ட்யா ப்ராவோ வீசிய பந்தில் ஆடினார். அது மைதானத்தின் மேற்கூரை வரை பறந்தது. தோனி அதனை கண்டு ரசித்தார். அந்த வீடியோ வைரலாகியுள்ளது.

ஆட்டம் முடிந்ததும் பேட்டியளித்த ஹர்திக் பாண்ட்யா, தோனியின் முன் அந்த ஷாட்டை ஆடுவது மகிழ்ச்சியளிக்கிறது. அவர் அதனை பாராட்டுவார் என்ற நம்பிக்கையுள்ளதாக தெரிவித்தார்.

டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் குவித்தது. சூர்யகுமார்யாதவ் அபாரமாக ஆடி அரைசதமடித்தார். 

க்ருணால் பாண்ட்யா 42 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பாண்ட்யா 25, பொலார்ட் 17 ரன்களை கடைசி கட்டத்தில் அதிரடியாக குவிக்க மும்பை இந்தியன்ஸ் 170 ரன்களை கடந்தது.  சென்னை தரப்பில் ப்ராவோ, சஹார், ஜடேஜா, தாஹிர், மோஹித் ஷர்மா தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. கேதர் ஜாதவ் மட்டும் அரைசதமடித்தார். மற்ற யாரும் ரன் குவிக்காததால் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

இது சென்னையின் ஐபிஎல் 2019 தொடரின் முதல் தோல்வி ஆகும். மும்பை தரப்பில் மலிங்கா, ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளையும், பெகண்ட்ராஃப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்

Comments
ஹைலைட்ஸ்
  • தோனி முன்பு ஹெலிகாப்டர் ஷாட் அடித்து அசத்தினார் ஹர்திக் பாண்ட்யா
  • ப்ராவோ வீசிய பந்தில் இந்த ஷாட்டை அடித்தார் பாண்ட்யா
  • ஹர்திக் பாண்ட்யா தோனி விக்கெட்டை சேர்த்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்
தொடர்புடைய கட்டுரைகள்
"தோனி ஓய்வு பெற்றுவிட்டாரா?" - சர்பராஸ் அகமதுவின் மனைவி குஷ்பாத்!
"தோனி ஓய்வு பெற்றுவிட்டாரா?" - சர்பராஸ் அகமதுவின் மனைவி குஷ்பாத்!
"தோனி என்ன விரும்புகிறார் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்" - சவுரவ் கங்குலி!
"தோனி என்ன விரும்புகிறார் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்" - சவுரவ் கங்குலி!
"கங்குலி, தோனியை விட விராட் கோலி தான் சிறந்தவர்" - கவுதம் கம்பீர்
"கங்குலி, தோனியை விட விராட் கோலி தான் சிறந்தவர்" - கவுதம் கம்பீர்
டெஸ்ட் கேப்டனாக சவுரவ் கங்குலியின் சாதனையை முந்தினார் விராட் கோலி!
டெஸ்ட் கேப்டனாக சவுரவ் கங்குலியின் சாதனையை முந்தினார் விராட் கோலி!
"கிரிக்கெட் வீரர்களில் தோனி எப்போதும் சிறந்தவர்" - ரவி சாஸ்திரி
"கிரிக்கெட் வீரர்களில் தோனி எப்போதும் சிறந்தவர்" - ரவி சாஸ்திரி
Advertisement