ஆட்டத்தின் தலையெழுத்தை மாற்றியதா தோனி ரன் அவுட்?

Updated: 13 May 2019 12:54 IST

இரண்டாவது ரன்னுக்கு ஓடும் போது மும்பை வீரர் இஷான் கிஷன் நேரடியாக ஸ்டெம்பில் அடித்தார். அந்த த்ரோ அடிக்கும் போது தோனியின் பேட் சரியாக கிரீஸில் இருந்தது.

MI vs CSK IPL Final: MS Dhoni Run Out Causes Stir On Twitter, CSK Fans Fume. Watch Video
பல கோணங்களில் ஆராய்ந்து தோனி அவுட் என மூன்றாவது நடுவர் அறிவித்தார்.  © BCCI/IPL

ஐபிஎல் 2019ம் ஆண்டுக்கான இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பல சர்ச்சையான நிகழ்வுகள் இடம்பெற்றன. அதில் மிகவும் முக்கியமான நிகழ்வாக தோனியின் ரன் அவுட் அமைந்தது. ரன் எடுக்க வாட்சன் மற்றும் தோனி இருவரும் ஓடினர். இரண்டாவது ரன்னுக்கு ஓடும் போது மும்பை வீரர் இஷான் கிஷன் நேரடியாக ஸ்டெம்பில் அடித்தார். அந்த த்ரோ அடிக்கும் போது தோனியின் பேட் சரியாக கிரீஸில் இருந்தது. ஆனால் க்ரீஸை தாண்டி வரவில்லை. பல கோணங்களில் ஆராய்ந்து தோனி அவுட் என மூன்றாவது நடுவர் அறிவித்தார். 

எனினும் பல கோணங்களில் பார்த்தாலும் தோனி க்ரீஸுக்குள் வந்துவிட்டார் என்பது போலவே தோன்றியது. பெரும்பாலும் இது போன்ற நேரங்களில் பேட்ஸ் மேன்களுக்கு சாதகமாக தான் முடிவுகள் இருக்கும். ஆனால் இந்த முறை அப்படி ஒரு முடிவை நடுவர்கள் எடுக்கவில்லை என்று ட்விட்டரில் ரசிகர்கள் கோபப்பட்டு பதிவு செய்தனர்.

இந்த போட்டியில் வாட்சன் 80 ரன்களை குவித்தார். ஆனாலும் கடைசி பந்தில் இரண்டு ரன்கள் தேவை என்ற போது மலிங்கா பந்தில் தாக்கூர் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்திருந்தது.

மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் பொலார்ட் 25 பந்தில் 41 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

Comments
ஹைலைட்ஸ்
  • தோனி ரன் அவுட் குறித்து ட்விட்டரில் ரசிகர்கள் கோபப்பட்டு பதிவு செய்தனர்
  • ரசிகர்கள் தோனியின் ரன் அவுட் குறித்து விவாத்தித்தனர்
  • ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் மும்பை அணி சென்னையை வீழ்த்தி வெற்றி பெற்றது
தொடர்புடைய கட்டுரைகள்
"தோனியின் அறிவுரை தான் எனக்கு இப்போதும் உதவுகிறது" - தீபக் சஹார்
"தோனியின் அறிவுரை தான் எனக்கு இப்போதும் உதவுகிறது" - தீபக் சஹார்
நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் தோனி: தகவல்!
நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் தோனி: தகவல்!
தோனியை குறித்து சிஎஸ்கே வெளியிட்ட பதிவு !!
தோனியை குறித்து சிஎஸ்கே வெளியிட்ட பதிவு !!
ரிஷப் பன்ட்டின் விக்கெட் கீப்பிங்கை விமர்சித்து ரசிகர்கள் பதிவிட்ட மீம்ஸ்!
ரிஷப் பன்ட்டின் விக்கெட் கீப்பிங்கை விமர்சித்து ரசிகர்கள் பதிவிட்ட மீம்ஸ்!
"இரவு-பகல் டெஸ்ட்டில் தோனி வர்ணனையாளராக வாய்ப்பில்லை": தகவல்!
"இரவு-பகல் டெஸ்ட்டில் தோனி வர்ணனையாளராக வாய்ப்பில்லை": தகவல்!
Advertisement