படுத்துக் கொண்டே சிக்ஸரடித்த ஜடேஜாவை தலையில் தட்டிய தோனி!

Updated: 12 April 2019 17:53 IST

கடைசி ஓவரின் முதல் பந்தில் ஜடேஜா ஒரு அபாரமான சிக்ஸரை விளாசி சென்னை அணியின் வெற்றியை எளிதாக்கினார்.

MS Dhoni Hits Ravindra Jadeja On The Head With His Bat After Astonishing Six
அபாரமாக ஆடி அரைசதமடித்த தோனி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். © BCCI/IPL

ராஜஸ்தான் ராயலஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின் கடைசி ஓவரில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்றன. கடைசி ஓவரின் நான்காவது பந்தில் நோபால் சர்ச்சைக்கு தோனி களத்துக்குள் வந்து கோபமைடையும் அளவவுக்கான நிகழ்வுகள் நடைபெற்றன. அந்த ஓவரின் முதல் பந்தில் ஜடேஜா ஒரு அபாரமான சிக்ஸரை விளாசி சென்னை அணியின் வெற்றியை எளிதாக்கினார். இது ஐபிஎல் வரலாற்றிலேயே இது போன்ற ஒரு விநோதமான சிக்ஸரை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்.

இந்த ஷாட் அடித்து சிக்சருக்கு சென்றது. தோனி பிட்சில் இருந்த ஜடேஜாவின் ஹெல்மெட்டில் செல்லமாக தனது பேட்டால் தட்டினார்.  

கடைசி ஓவரின் முதல் பந்தை ஸ்டோக்ஸ் நன்றாக ஆஃப் சைடு வொயிடாக  வீசினார். அதை நன்கு விலகி சிக்ஸருக்கு விளாசினார் ஜடேஜா. விளாசிய அடுத்த நொடியே தடுமாறி கீழே விழுந்தார். அதேபோல பந்து வீசிய ஸ்டோக்ஸும் கிழே விழுந்தார். 

இந்த சிக்ஸர் மூலம் சென்னையின் வெற்றி எளிதானது. கடைசி பந்தில் சாண்ட்னர் சிக்ஸரடித்து அணியை வெற்றி பெற வைத்தார். அபாரமாக ஆடி அரைசதமடித்த தோனி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

மேலும், தோனி கேப்டனாக ஐபிஎல் தொடரில் தனது 100வது வெற்றியை பதிவு செய்தார். அதிக போட்டிகளை வெல்லும் முதல் கேப்டன் தோனிதான். இவருக்கு அடுத்த இடத்தில் 71 வெற்றிகளுடன் கம்பீர் உள்ளார். சென்னை அணி இந்த தொடரில் 7 போட்டிகளில் 6 போட்டிகளை வென்று 12  புள்ளிகளை பெற்றுள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • ஜடேஜா அடித்த சிக்ஸரை வித்தியசமாக கொண்டாடினார் தோனி
  • தோனி, ஜடேஜாவை தன்னுடைய பேட்டை கொண்டு செல்லமாக தட்டினார்
  • சிஎஸ்கே ராஜஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது
தொடர்புடைய கட்டுரைகள்
மார்ச் 2ம் தேதி முதல் ஐபிஎல் பயிற்சியை தொடங்கும் எம்.எஸ்.தோனி!
மார்ச் 2ம் தேதி முதல் ஐபிஎல் பயிற்சியை தொடங்கும் எம்.எஸ்.தோனி!
“ஒரு புலி இன்னொரு புலியை சந்தித்தால்...” - தோனி ரசிகரின் வைரல் கமெண்ட்!
“ஒரு புலி இன்னொரு புலியை சந்தித்தால்...” - தோனி ரசிகரின் வைரல் கமெண்ட்!
“இந்திய கேப்டன்களில் சிறந்தவர் தோனி” - சுரேஷ் ரெய்னா
“இந்திய கேப்டன்களில் சிறந்தவர் தோனி” - சுரேஷ் ரெய்னா
ஆர்.பி. சிங் மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோருக்கு பானி பூரி பரிமாறிய தோனி!
ஆர்.பி. சிங் மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோருக்கு பானி பூரி பரிமாறிய தோனி!
“மிக சிறந்த இந்திய கேப்டன் தோனி” - புகழ்ந்த ரோஹித் ஷர்மா!
“மிக சிறந்த இந்திய கேப்டன் தோனி” - புகழ்ந்த ரோஹித் ஷர்மா!
Advertisement