மும்பை போட்டியின் போது தோனியுடன் செல்ஃபி எடுத்த பாட்டி

Updated: 04 April 2019 16:21 IST

வயதான அந்த பாட்டி தோனியுடன் பேசி செல்ஃபி எடுத்துக் கொண்டு ஒரு ஜெர்சியில் ஆட்டோகிராப்பும் வாங்கி கொண்டார்.

MS Dhoni Meets Special Fan After CSK vs Mumbai Indians Match - Watch
ஐபிஎல் ட்விட்டர் பக்கம் தோனி தனது ரசிகை ஒருவரை சந்திக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளது. © Screengrab: www.iplt20.com

தோனி களத்துக்கு உள்ளேயும், களத்துக்கு வெளியேயும் பிரபலாமான வீரர். சி.எஸ்.கே அணி இந்திய அளவில் புகழப்படும் அணியாக விளங்குகிறது. ஐபிஎல் ட்விட்டர் பக்கம் தோனி தனது ரசிகை ஒருவரை சந்திக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளது. வயதான பாட்டி ஒருவர் தோனியை பெவிலியனில் சந்தித்தார். அவரை ஒரு இளம்பெண் அழைத்து வந்திருந்தார். வயதான அந்த பாட்டி தோனியுடன் பேசி செல்ஃபி எடுத்துக் கொண்டு ஒரு ஜெர்சியில் ஆட்டோகிராப்பும் வாங்கி கொண்டார்.

முன்னதாக டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் குவித்தது. சூர்யகுமார்யாதவ் அபாரமாக ஆடி அரைசதமடித்தார். 

க்ருணால் பாண்ட்யா 42 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பாண்ட்யா 25, பொலார்ட் 17 ரன்களை கடைசி கட்டத்தில் அதிரடியாக குவிக்க மும்பை இந்தியன்ஸ் 170 ரன்களை கடந்தது.  சென்னை தரப்பில் ப்ராவோ, சஹார், ஜடேஜா, தாஹிர், மோஹித் ஷர்மா தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. கேதர் ஜாதவ் மட்டும் அரைசதமடித்தார். மற்ற யாரும் ரன் குவிக்காததால் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

இது சென்னையின் ஐபிஎல் 2019 தொடரின் முதல் தோல்வி ஆகும். மும்பை தரப்பில் மலிங்கா, ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளையும், பெகண்ட்ராஃப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்

12-13வது ஓவரில் ரன்களை விட்டுக்கொடுத்ததும், சில மிஸ் ஃபீல்டுகளூமே தோற்க காரணம் என்றார் தோனி.

அணி வீரர்கள் ஒவ்வொருவரையும் சந்தித்து களத்தில் எப்படி செயல்படுவது என்பது குறித்து விவாதிக்க உள்ளதாகவும் தோனி கூறினார்.

Comments
ஹைலைட்ஸ்
  • தோனி களத்துக்கு உள்ளேயும், களத்துக்கு வெளியேயும் பிரபலாமான வீரர்
  • சி.எஸ்.கே அணி இந்திய அளவில் புகழப்படும் அணியாக விளங்குகிறது
  • வயதான பாட்டி ஒருவர் தோனியை பெவிலியனில் சந்தித்தார்
தொடர்புடைய கட்டுரைகள்
"தோனி என்ன விரும்புகிறார் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்" - சவுரவ் கங்குலி!
"தோனி என்ன விரும்புகிறார் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்" - சவுரவ் கங்குலி!
"கங்குலி, தோனியை விட விராட் கோலி தான் சிறந்தவர்" - கவுதம் கம்பீர்
"கங்குலி, தோனியை விட விராட் கோலி தான் சிறந்தவர்" - கவுதம் கம்பீர்
டெஸ்ட் கேப்டனாக சவுரவ் கங்குலியின் சாதனையை முந்தினார் விராட் கோலி!
டெஸ்ட் கேப்டனாக சவுரவ் கங்குலியின் சாதனையை முந்தினார் விராட் கோலி!
"கிரிக்கெட் வீரர்களில் தோனி எப்போதும் சிறந்தவர்" - ரவி சாஸ்திரி
"கிரிக்கெட் வீரர்களில் தோனி எப்போதும் சிறந்தவர்" - ரவி சாஸ்திரி
100 டி20 போட்டிகளில் இடம்பெற்ற முதல் இந்தியரானார் ஹர்மன்பிரீத் கவுர்!
100 டி20 போட்டிகளில் இடம்பெற்ற முதல் இந்தியரானார் ஹர்மன்பிரீத் கவுர்!
Advertisement