சஹார் மீதுள்ள நம்பிக்கையால் கடைசி நொடியில் டி.ஆர்.எஸ் கேட்ட தல தோனி

Updated: 12 April 2019 12:58 IST

சஹார் விரைந்து சென்று தோனியிடம் பேசும் போது தோனி சிரித்துக் கொண்டே ஷ்யூர்? என கேட்க, ஆம் என்றார் சஹார். 

MS Dhoni Convinced By Deepak Chahar To Take DRS "In Nick Of Time" - Watch
சரியாக கடைசி நொடியில் தோனி ரிவியூவை கேட்டார். அதில் அவர் அவுட் ஆனது தெரியவந்தது. © BCCI/IPL

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனிக்கும், சென்னை அணியின் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹாருக்கும் நல்ல புரிதல் உள்ளது. அது நேற்று நடந்த ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்திலும் தொடர்ந்தது.  சஹார், கேப்டன் தோனியிடம் ஒரு எல்பிடபள்யூவுக்காக தனது கருத்தை தெரிவித்தார். முதலில் சந்தேகமாக இருந்த தோனியை சஹார் தெளிவுப்படுத்தினார். இதற்கிடையில் 10 செகண்ட் கவுண்ட் டவுன் துவங்கியது. சரியாக கடைசி நொடியில் தோனி ரிவியூவை கேட்டார். அதில் அவர் அவுட் ஆனது தெரியவந்தது. ரிவியூ மூலம் விக்கெட்டை வீழ்த்தினர் சென்னை அணியினர். 

இது ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் நடந்தது. ரஹானே மற்றும் பட்லர் சிறப்பான துவக்கத்தை அளிக்க முயற்சிக்கையில் இந்த விக்கெட்டை வீழ்த்தியது சென்னைக்கு பலம் சேர்த்தது.

அப்போது ராஜஸ்தானின் ஸ்கோர் 31/0. அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை ஆட முயற்சிக்கையில் அது நேராக காலில் பட்டது. அவரது காலில் பட்டதை தெளிவாக கவனித்த சஹார், ரிவியூவுக்கு தோனியை சம்மதிக்க வைத்தார்.

முதலில் கள நடுவர் ஆக்ஸ்பெர்ட் நாட் அவுட் என கூறினார். அதன் பின் ரிவியூவில் அவுட் என உறுதியானது.

சஹார் விரைந்து சென்று தோனியிடம் பேசும் போது தோனி சிரித்துக் கொண்டே ஷ்யூர்? என கேட்க, ஆம் என்றார் சஹார். 

கடைசி நொடியில் ரிவியூ கேட்டு ரஹானேயின் இன்னிங்ஸை முடிவுக்கு கொண்டு வந்தனர் தோனியும், சஹாரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
ஹைலைட்ஸ்
  • முதலில் சந்தேகமாக இருந்த தோனியை சஹார் தெளிவிபடுத்தினார்
  • ரிவியூ மூலம் ரஹானே விக்கெட்டை வீழ்த்தினர் சென்னை அணியினர்
  • தோனி சிரித்துக் கொண்டே ஷ்யூர்? என கேட்க, "ஆம்" என்றார் சஹார்
தொடர்புடைய கட்டுரைகள்
"தோனியின் ஓய்வு குறித்து தேர்வுக்குழு, கோலி முடிவெடுக்க வேண்டும்": கங்குலி!
"தோனியின் ஓய்வு குறித்து தேர்வுக்குழு, கோலி முடிவெடுக்க வேண்டும்": கங்குலி!
"பாடம் கற்றுக்கொண்டேன்" - தோனி ஓய்வு வதந்திக்கு பின் கோலி!
"பாடம் கற்றுக்கொண்டேன்" - தோனி ஓய்வு வதந்திக்கு பின் கோலி!
#12YearsOfCaptainDhoni - இந்திய ட்ரண்டாக மாறிய தோனி!
#12YearsOfCaptainDhoni - இந்திய ட்ரண்டாக மாறிய தோனி!
தோனியின் ஓய்வு வதந்தி:
தோனியின் ஓய்வு வதந்தி: 'Game of Thrones' வசனம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த சிஎஸ்கே!
"இதை வதந்தி என்பார்கள்" - தோனி ஓய்வு செய்தி குறித்து சாக்‌ஷி!
"இதை வதந்தி என்பார்கள்" - தோனி ஓய்வு செய்தி குறித்து சாக்‌ஷி!
Advertisement