சுனில் நரேனை மான்கடிங் செய்ய சொல்லி ஏமாற்றிய விராட் கோலி

Updated: 20 April 2019 11:55 IST

ஈடன் கார்டன்ஸில் நடந்த போட்டியில் 58 பந்தில் சதம் அடித்தார் கோலி. ஐபிஎல் போட்டியில் அதிக சதம் அடித்த வீரர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

Virat Kohli Foils Sunil Narine
கீரிஸுக்கு வெளியில் இருந்து உள்ளே செல்வது போல் பாவனை செய்தார் கோலி. © Screengrab: www.iplt20.com

விராட் கோலி, போட்டி எந்த வடிவில் இருந்தாலும், தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர். ஐபிஎல் தொடரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ஆடிய விராட் கோலி, சுனில் நரேன் 18வது ஓவரின் கடைசி பந்தை எதிர்முனையில் இருக்கும் ஸ்டோனிஸுக்கு வீசாமல் நின்று விட்டார். மான்கடிங் குறித்து அவர் கண்டுகொள்ளாமல் இருந்த போது, விராட் கோலி அவரை கிண்டல் செய்யும் விதமாக, கிரீஸுக்கு வெளியில் இருந்து உள்ளே செல்வது போல் பாவனை செய்தார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் கேப்டன் அஷ்வின், ஐபிஎல் 12வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜாஸ் பட்லரை மான்கடிங் முறையில் அவுட் செய்தார். 

விராட் கோலி, ஐபில் போட்டிகளில் தன்னுடைய ஐந்தாவது சதத்தை நிறைவு செய்தார். ஈடன் கார்டன்ஸில் நடந்த போட்டியில் 58 பந்தில் சதம் அடித்தார் கோலி. ஐபிஎல் போட்டியில் அதிக சதம் அடித்த வீரர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஆறு சதங்களுடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கிறிஸ் கெயில் முதல் இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் வாட்சன் இருவரும் தலா நான்கு சதங்கள் அடித்துள்ளனர்.

முதல் ஐந்து ஓவர்களில் ஆர்சிபி 91 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது, பிறகு சிறப்பாக ஆடி நான்கு விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது. இந்த சீசனில் இதுவே ஆர்சிபியின் அதிகபடியான ஸ்கோராக உள்ளது.

இந்த போட்டியில், மொயின் அலி சிறப்பாக ஆடி ரன்கள் குவித்தார். ஆறு சிக்ஸர்களும்,  ஐந்து பவுண்ரிகளும் அடித்து ஆர்சிபியின் ஸ்கோரை அதிகமாக்கினார். கோலி மற்றும் அலி இணைந்து 43 பந்தில் 90 ரன்கள் எடுத்தனர். 

கோலி, அரைசதத்தை 40 பந்தில் அடித்தார். இரண்டாவது அரைசதத்தை 17 பந்தில் அடித்தார். இந்த போட்டியில், கொல்கத்தாவை வீழ்த்தி ஆர்சிபி அணி வெற்றி பெற்றது.

Comments
ஹைலைட்ஸ்
  • சுனில் நரேன் எதிர்முனையில் இருக்கும் ஸ்டோனிஸுக்கு வீசாமல் நின்று விட்டார்
  • விராட் கோலி கிரீஸுக்கு வெளியில் இருப்பது போல் பாவனை செய்தார்
  • விராட் கோலி, ஐபில் போட்டிகளில் தன்னுடைய ஐந்தாவது சதத்தை நிறைவு செய்தார்
தொடர்புடைய கட்டுரைகள்
மனைவி, குழந்தையுடன் விடுமுறையை கொண்டாடும் ரோஹித் ஷர்மா!
மனைவி, குழந்தையுடன் விடுமுறையை கொண்டாடும் ரோஹித் ஷர்மா!
புது விளம்பரத்தில் ராப் பாடிய கோலி மற்றும் பன்ட்... கலாய்த்த நெட்டிசன்கள்!
புது விளம்பரத்தில் ராப் பாடிய கோலி மற்றும் பன்ட்... கலாய்த்த நெட்டிசன்கள்!
மற்ற அணிகளுக்கு இந்திய பந்துவீச்சு சவாலாக அமையும் - புவனேஷ்வர் குமார்
மற்ற அணிகளுக்கு இந்திய பந்துவீச்சு சவாலாக அமையும் - புவனேஷ்வர் குமார்
"ரிஷப் பன்ட்டுக்கு பதில் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்தது ஏன்" - காரணம் சொல்லும் கோலி
"ரிஷப் பன்ட்டுக்கு பதில் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்தது ஏன்" - காரணம் சொல்லும் கோலி
"தோனியின் அனுபவம் விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு உதவும்" - ரவி சாஸ்திரி
"தோனியின் அனுபவம் விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு உதவும்" - ரவி சாஸ்திரி
Advertisement