பவுண்டரிக்கு சென்ற பந்தை காலால் தடுத்து நிலைதடுமாறிய பொலார்ட்!

Updated: 03 May 2019 17:26 IST

மும்பை வீரர் பொலார்ட், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் அபாயகரமான ஃபீல்டிங் ஒன்றை செய்தார். அவரது ஃபீல்டிங் திறமை ஊரறிந்த விஷயம்.

MI vs SRH: Kieron Pollard Goes Tumbling After Crazy Fielding Fail. Watch Video
மும்பை வீரர் பொலார்ட், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் அபாயகரமான ஃபீல்டிங் ஒன்றை செய்தார். © Twitter

மும்பை வீரர் பொலார்ட், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் அபாயகரமான ஃபீல்டிங் ஒன்றை செய்தார். அவரது ஃபீல்டிங் திறமை ஊரறிந்த விஷயம். உலகின் அனாயசமான ஃபீல்டர்களில் அவரும் ஒருவர். இந்த ஐபிஎல் தொடரிலேயே ஒற்றை கையால் ஒரு அபார கேட்ச்சை பிடித்து அசத்தினார். சி.எஸ்,கேவுக்கு எதிரான போட்டியில் ரெய்னாவை வெளியேற்றிய அந்த கேட்ச் ஐபிஎல் தொடரின் சிறந்த கேட்ச்களின் பட்டியலில் இடம்பெற்றது. அதே போன்றதொரு ஃபீல்டிங் முயற்சியை சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியிலும் செய்தார்.

மும்பை மற்றும் ஹைதராபாத்துக்கு இடையே வான்கடேவில் நடந்த போட்டியில்,  ஷா அடித்த புல் ஷாட்டை துரத்தி சென்ற பொலார்ட் காலால் பவுண்டரி அருகே தடுத்தார். பந்தை தடுத்ததும் நிலை தடுமாறி விளம்பரப்பலகையின் மேல் தாவி கேலரி பக்கம் விழுந்தார். அவரது முயற்சி பவுண்டரியை தடுக்கவில்லை. 

காலால் எட்டி உதத்தை பந்து பின்னால் வந்த பாண்ட்யாவால் தடுக்க முடியவில்லை. அதற்குள் அது எல்லைக்கோட்டை தொட்டுவிட்டது.

விளம்பரப்பலகையை தாவவில்லை எனில் அவருக்கு காயம் ஏற்பட்டிருக்க கூடும். இந்த சம்பவத்தை பார்த்து பாண்ட்யா மற்றும் டிகாக் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

வர்ணனையாளர்கள் சிரித்தேவிட்டனர். "இவ்வளவு பெரிய வீரர் உயரம் தாண்டுதல் ஆடினால் எப்படி இருக்கும் என்பது போல உள்ளது" என்றனர். 

இதனை கெவின் பீட்டர்சன் "பொலார்ட் பந்தை பவுண்டரிக்கு உதைப்பது போல உள்ளது. இது மோதல்களின் மோதலாக உள்ளது" என்றார். 

நல்லவேளை அவருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"ஹர்திக் பாண்ட்யாவின் வளர்ச்சியில் எந்த ஆச்சரியமும் இல்லை" - கீரன் பொல்லார்ட்!
"ஹர்திக் பாண்ட்யாவின் வளர்ச்சியில் எந்த ஆச்சரியமும் இல்லை" - கீரன் பொல்லார்ட்!
இந்தியாவுக்கு எதிரான டி20: மேற்கிந்திய தீவுகள் அணியில் நரைன், பொலார்ட்
இந்தியாவுக்கு எதிரான டி20: மேற்கிந்திய தீவுகள் அணியில் நரைன், பொலார்ட்
ஐபிஎல் இறுதி போட்டி அதிருப்தியை வெளிப்படுத்திய பொலார்டுக்கு அபராதம்!
ஐபிஎல் இறுதி போட்டி அதிருப்தியை வெளிப்படுத்திய பொலார்டுக்கு அபராதம்!
காற்றில் பேட்டை பறக்கவிட்டு அதிருப்தியை வெளிப்படுத்திய பொலார்ட்
காற்றில் பேட்டை பறக்கவிட்டு அதிருப்தியை வெளிப்படுத்திய பொலார்ட்
பவுண்டரிக்கு சென்ற பந்தை காலால் தடுத்து நிலைதடுமாறிய பொலார்ட்!
பவுண்டரிக்கு சென்ற பந்தை காலால் தடுத்து நிலைதடுமாறிய பொலார்ட்!
Advertisement