அதிரடி சேஸிங் களத்தில் மோதிய ஹர்திக் மற்றும் வில்ஜோன்

Updated: 11 April 2019 17:14 IST

ல்ஜோன் நேரடியாக ஹர்திக் பாண்ட்யாவின் மிக அருகில் வந்து கண்ணுக்கு நேராக முறைத்தார்.  ஹர்திக் சிறுபுன்னகையுடன் அங்கிருந்து நகர்ந்தார். 

MI vs KXIP: Hardik Pandya, Hardus Viljoen Engage In Epic Staredown Battle - Watch
ஹர்திக் பாண்ட்யா மற்றும் வில்ஜோன் இடையே சிறு மோதல் ஏற்பட்டது. © Screengrab: www.iplt20.com

ஐபிஎல் தொடரில் மும்பை, பஞ்சாப் இடையே நடைபெற்ற ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் வில்ஜோன் இடையே சிறு மோதல் ஏற்பட்டது. மும்பை வீரர் இஷான் கிஷன் 12வது ஓவரில் ஆட்டமிழந்த போது இந்த சம்பவம் அரங்கேறியது. அப்போது மும்பை அணி 8 ஓவர்களில் 104 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆடிக்கொண்டிருந்தது. இந்த நேரத்தில் வில்ஜோன் நேரடியாக ஹர்திக் பாண்ட்யாவின் மிக அருகில் வந்து கண்ணுக்கு நேராக முறைத்தார்.  ஹர்திக் சிறுபுன்னகையுடன் அங்கிருந்து நகர்ந்தார். 

வில்ஜோன் வீசிய அடுத்த ஓவரில் 15 ரன்கள் எடுக்கப்பட்டது. ஹர்திக் பாண்ட்யா 13 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து ஷமி பந்தில் 16வது ஓவரில் ஆட்டமிழந்தார். 

பொலார்டின் அதிரடி ஆட்டத்தால் மும்பை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பொலார்ட் 31 பந்தில் 83 ரன்கள் எடுத்தார். 

முதல் இன்னிங்ஸில் ராகுலின் சதத்தை பொலார்டின் அதிரடி இன்னிங்ஸ் மறக்கடித்தது. மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா காயம் காரணமாக வெளியேரியதால் பொலார்ட் இந்த போட்டிக்கு தலைமை தாங்கினார். 

கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட போது பொலார்ட் சிக்சரடித்து அவுட் ஆனார். 62/3 என்ற நிலையிலிருந்து அதிரடியாக அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார் பொலார்ட்.

Comments
ஹைலைட்ஸ்
  • வில்ஜோன் நேரடியாக ஹர்திக் பாண்ட்யாவை முறைத்தார்
  • இஷான் கிஷன் 12வது ஓவரில் ஆட்டமிழந்த போது இந்த சம்பவம் அரங்கேறியது
  • வில்ஜோன் வீசிய அடுத்த ஓவரில் 15 ரன்கள் எடுக்கப்பட்டது
தொடர்புடைய கட்டுரைகள்
அதிரடி சேஸிங் களத்தில் மோதிய ஹர்திக் மற்றும் வில்ஜோன்
அதிரடி சேஸிங் களத்தில் மோதிய ஹர்திக் மற்றும் வில்ஜோன்
ஐ.பி.எல். 2019: பொலார்ட் அதிரடியால் பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை த்ரில் வெற்றி!! #Highlights
ஐ.பி.எல். 2019: பொலார்ட் அதிரடியால் பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை த்ரில் வெற்றி!! #Highlights
ஐபிஎல் 2019: அதிரடி கிங்ஸ் லெவனை சமாளிக்குமா ஆல்ரவுண்ட் மும்பை!
ஐபிஎல் 2019: அதிரடி கிங்ஸ் லெவனை சமாளிக்குமா ஆல்ரவுண்ட் மும்பை!
Advertisement