ஒரே முனையில் வாட்சன், டூப்ளெசிஸ்... ரன் அவுட் செய்ய தவறிய டெல்லி வீரர்கள்!

Updated: 11 May 2019 11:53 IST

டூப்ளெசிஸ் 39 பந்தில் 50 ரன்களையும், வாட்சன் 32 பந்தில் 50 ரன்களையும் குவித்தனர். இந்த 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் மூலம் சி.எஸ்.கே 100 வது வெற்றியை பதிவு செய்தது.

Faf du Plessis, Shane Watson Run To The Same End And Still Survive - Watch
சி.எஸ்.கேவின் துவக்க வீரர்கள் வாட்சன் மற்றும் டூப்ளெசிஸ் இருவரும் சிறப்பாக ஆடி அரைசதமடித்தனர் © Screengrab: www.iplt20.com

சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல் அணியை வென்று ஐபிஎல் தொடரின் இறுதி போட்டிக்கு எட்டாவது முறையாக தகுதி பெற்றுள்ளது. இரண்டாவது குவாலிஃபையரில் முழுமையாக சி.எஸ்.கேவின் கையே ஓங்கியிருந்தது. இதில் சி.எஸ்.கேவின் துவக்க வீரர்கள் வாட்சன் மற்றும் டூப்ளெசிஸ் இருவரும் 148 என்ற இலக்கை துரத்தி ஆடத்துவங்கினர். இருவரும் ஆட்டம் ஆரம்பித்த முதல் ஓவர்களில் ரன் எடுக்க ஓடும்போது இருவரும் தடுமாறி ஒரே முனைக்கு வந்தனர். ஆனால் அவர்களை ரன் அவுட் செய்ய டெல்லி வீரர்கள் தவறினர்.

ஆனால் இந்த தடுமாற்றம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இருவரும் சிறப்பாக ஆடி அரைசதமடித்தனர். டூப்ளெசிஸ் 39 பந்தில் 50 ரன்களையும், வாட்சன் 32 பந்தில் 50 ரன்களையும் குவித்தனர். இந்த 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் மூலம் சி.எஸ்.கே 100 வது வெற்றியை பதிவு செய்தது.

"டூப்ளெசிஸ் சிறப்பாக ஆடி வந்ததால் நான் அதிரடியை ஆரம்பிக்க சில பந்துகளை எடுத்துக்கொண்டேன்" என்றார் வாட்சன்.

தோனி மற்றும் ஃபிளெமிங்கின் அனுபவம் அணிக்கு பெரிய அளவில் கைகொடுப்பதாக வாட்சன் கூறியுள்ளார்.

தோனி தலைமையிலான சென்னை அணி ஞாயிறன்று ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை அணியை ஹைதராபாத்தில் சந்திக்கவுள்ளது.

சென்னை மற்றும் மும்பை ஆகிய இரு அணிகளும் 3 முறை பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments
ஹைலைட்ஸ்
  • முதல் ஓவரில் ரன் எடுக்க ஓடும்போது இருவரும் தடுமாறி ஒரே முனைக்கு வந்தனர்
  • 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது சென்னை
  • ஐபிஎல் இறுதி போட்டிக்கு எட்டாவது முறையாக தகுதி பெற்றுள்ளது சென்னை அணி
தொடர்புடைய கட்டுரைகள்
ஒரே முனையில் வாட்சன், டூப்ளெசிஸ்... ரன் அவுட் செய்ய தவறிய டெல்லி வீரர்கள்!
ஒரே முனையில் வாட்சன், டூப்ளெசிஸ்... ரன் அவுட் செய்ய தவறிய டெல்லி வீரர்கள்!
டெல்லியை வென்று IPL இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது சென்னை!!
டெல்லியை வென்று IPL இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது சென்னை!!
கிங் ஆஃப் ப்ளே ஆஃப் சிஎஸ்கேவை சமாளிக்குமா டெல்லி கேப்பிட்டல்ஸ்!
கிங் ஆஃப் ப்ளே ஆஃப் சிஎஸ்கேவை சமாளிக்குமா டெல்லி கேப்பிட்டல்ஸ்!
Advertisement