"இம்ரான் தாஹிரின் கொண்டாட்டத்தின் போது அருகில் செல்லமாட்டோம்" - தோனி

Updated: 02 May 2019 23:40 IST

இம்ரான் தாஹிர் 4 விக்கெட்டுகளும், ஜடேஜா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். 81 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்திருந்த டெல்லி, 17 ஓவரில் எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 99 ரன்கள் மட்டுமே எடுத்தது.

MS Dhoni Reveals How He Keeps Up With Imran Tahir
இம்ரான் தாஹிர், விக்கெட் வீழ்த்துவதில் சிஎஸ்கே அணியின் முன்னணி வீரராக விளங்குபவர். © BCCI/IPL

சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி, மைதானத்துக்குள் இருந்தாலும், இல்லையென்றாலும் தன்னுடைய எமோஷன்ஸை வெளிகாட்டிக் கொள்ள மாட்டார். ஆனால், சிஎஸ்கே அணியின் முன்னணி பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர் தன்னுடைய எமோஷனை அப்போதே வெளிகாட்டுபவர். எப்போதெல்லாம் அவர் விக்கெட்டை வீழ்த்துகிறாரோ அப்போதெல்லாம், மைதானத்தில் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு தன் இரு கைகளையும் நீட்டி வேகமாக ஓடி கொண்டாடக் கூடியவர். அவருக்கு 'பராசக்தி எக்ஸ்பிரஸ்' என்ற பட்ட பெயரும் உண்டு. நேற்று டெல்லிக்கு எதிராக ஆடிய போட்டியில் சில முறை அவருடைய ஸ்டைலில் மைதானத்தை வலம் வந்தார். காரணம், டெல்லிக்கு எதிராக நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி, 80 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வெற்றி பெற வைத்தார்.

போட்டி முடிந்து பரிசளிப்பு விழாவில், தோனியிடம் தாஹிரின் கொண்டாட்டத்தை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு தோனி, புதுவிதமான பதிலைக் கூறினார். "தாஹிர் சந்தோஷத்தை கொண்டாடுவதை பார்க்கும் போது, மகழ்ச்சியாக இருக்கும். தாஹிர் விக்கெட் எடுத்தவுடன் நானும் வாட்சனும் அவர் அருகில் செல்ல கூடாது என்பதில் மிக தெளிவாக இருந்தோம். ஏனெனில், அவர் பெரும்பாலும் மைதானத்தின் மறுபக்கத்துக்கு தான் ஓடுவார்" ஹர்ஷா போக்லேயிடன் தோனி கூறினார்.

மேலும், "100 சதவிகிதம் ஃபிட்டாக இல்லாத எனக்கும் வாட்சனுக்கு அது மிகவும் கடினமான ஒன்று. எதற்காக அங்கு சென்று வாழ்த்து தெரிவிக்க வேண்டும். ஓடி முடித்து அவர் இடத்துக்கு திரும்பிய பிறகு  சென்று, 'நன்றாக பந்துவீனாய்... வெல் டன்' என்று கூறிவிட்டு நாங்கள் எங்கள் இடத்துக்கு சென்று விடுவோம்" என்று பதிலளித்தார் தோனி.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் 22 பந்தில் 44 ரன்கள் குவித்தார். ஜடேஜா 10 பந்தில் 25 ரன்கள் எடுத்தார். கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து, 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது சென்னை அணி.
போட்டி தொடங்கும் போது, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த டெல்லி அணி, 99 ரன்களில் ஆட்டம் இழந்து 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

கடிமான பிட்ச்சிலும் 44 ரன்கள் குவித்த ஷ்ரேயாஸ், சென்னை அணியின் பந்துவீச்சாளர்களின் அதிரடியால் வெற்றி பெற முடியாமல் போனது. இம்ரான் தாஹிர் 4 விக்கெட்டுகளும், ஜடேஜா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.
81 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்திருந்த டெல்லி, 17 ஓவரில் எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 99 ரன்கள் மட்டுமே எடுத்தது.

டெல்லி மற்றும் சென்னை அணிகள் ஃப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. ஃப்ளேஆஃப் சுற்று அடுத்த வாரம் துவங்குகிறது

Comments
ஹைலைட்ஸ்
  • தோனி, தன்னுடைய எமோஷன்ஸை பெரும்பாலும் வெளிகாட்டிக் கொள்ளாதவர்
  • இம்ரான் தாஹிர் தன்னுடைய எமோஷனை அப்போதே வெளிகாட்டுபவர்
  • டெல்லிக்கு எதிராக நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார் இம்ரான் தாஹிர்
தொடர்புடைய கட்டுரைகள்
சர்ச்சையை கிளப்பிய தோனி கிளவுஸ்; முத்திரையை அகற்ற வேண்டும் என ஐசிசி திட்டவட்டம்!
சர்ச்சையை கிளப்பிய தோனி கிளவுஸ்; முத்திரையை அகற்ற வேண்டும் என ஐசிசி திட்டவட்டம்!
“ஐசிசி-யிடம் பர்மிஷன் வாங்கியாச்சு… தோனி முத்திரியை நீக்கமாட்டார்!”- பிசிசிஐ பதிலடி
“ஐசிசி-யிடம் பர்மிஷன் வாங்கியாச்சு… தோனி முத்திரியை நீக்கமாட்டார்!”- பிசிசிஐ பதிலடி
"தோனி கணினியை விட வேகமானவர்" - சோயிப் அக்தர்!
"தோனி கணினியை விட வேகமானவர்" - சோயிப் அக்தர்!
"தோல்வி ஏமாற்றத்தையும், கோவத்தையும் தருகிறது" - தென்னாப்பிரிக்க வீரர் மோரிஸ்
"தோல்வி ஏமாற்றத்தையும், கோவத்தையும் தருகிறது" - தென்னாப்பிரிக்க வீரர் மோரிஸ்
ரணுவத்துக்கு மரியாதை தந்த தோனி... சல்யூட் அடித்த ட்விட்டர்!
ரணுவத்துக்கு மரியாதை தந்த தோனி... சல்யூட் அடித்த ட்விட்டர்!
Advertisement