வெற்றிக்குப் பின் சேப்பாக்கம் மைதானத்தில் டென்னிஸ் ஆடிய தோனி!

Updated: 02 May 2019 15:11 IST

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.தோனி மைதானத்தில் கால் வைக்கும் போதெல்லாம் சேப்பாக்கம் ஸ்டேடியமே அதிரும்.

MS Dhoni Enthralls Chepauk Crowd With Tennis Skills After CSK vs Delhi Capitals Clash - Watch
தோனி, சென்னை ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். © Twitter

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.தோனி மைதானத்தில் கால் வைக்கும் போதெல்லாம் சேப்பாக்கம் ஸ்டேடியமே அதிரும். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டிதான் சேப்பாக்கத்தில் இந்த வருட ஐபிஎல்லின் கடைசி போட்டி. தோனி, இந்த போட்டியை வென்று மைதனத்தை வலம் வந்தார். அப்போது டென்னிஸ் பேட்டால் பந்துகளை மைதானத்துக்குள் அடித்தார். அதனை ரசிகர்கள் உற்சாகத்தோடு கேட்ச் பிடித்தனர். 

இந்த வருட ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக ஆடி வந்துள்ளது. எனினும் இந்த வருட ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை சென்னை பிடித்துள்ளது. 

சென்னை கேப்டன் தோனி 22 பந்தில் 44 ரன்களையும், ஜடேஜா 10 பந்தில் 25 ரன்களையும் குவித்து சென்னை அணியை 20 ஓவரில் 179 ரன்களை குவிக்க வைத்தனர். 

தோனி ஒரே ஓவரில் இரண்டு லைட்னிங் ஸ்டெம்பிங்கை செய்து ஆட்டத்தை சென்னையின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். 

10 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் எடுத்திருந்த டெல்லின் அணி 99 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 80 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இரு அணிகளும் ஏற்கெனவே ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

Comments
ஹைலைட்ஸ்
  • சிஎஸ்கே அணிக்கு தோனி மிகவும் முக்கியமானவர்
  • தோனி, கையெழுத்திட்ட டென்னிஸ் பந்துகளை ரசிகர்களுக்கு வீசினார்
  • தோனி ஒரே ஓவரில் இரண்டு லைட்னிங் ஸ்டெம்பிங்கை செய்தார்
தொடர்புடைய கட்டுரைகள்
கிரிக்கெட் களத்தின் வெளியிலும் சாதனை படைத்த விராத் கோலி...!
கிரிக்கெட் களத்தின் வெளியிலும் சாதனை படைத்த விராத் கோலி...!
லடாக்கில் சுதந்திர தினத்தை கொண்டாடிய தோனி!
லடாக்கில் சுதந்திர தினத்தை கொண்டாடிய தோனி!
ராணுவத்திலிருந்து வீடு திரும்பும் தோனிக்காக காத்திருக்கும் சர்ப்ரைஸ்!
ராணுவத்திலிருந்து வீடு திரும்பும் தோனிக்காக காத்திருக்கும் சர்ப்ரைஸ்!
டி20 போட்டியில் அதிக ரன்கள்... தோனியின் சாதனையை முந்திய ரிஷப் பன்ட்!
டி20 போட்டியில் அதிக ரன்கள்... தோனியின் சாதனையை முந்திய ரிஷப் பன்ட்!
வைரலாகும் தோனி பாடும் வீடியோ... எங்கே எடுக்கப்பட்டது? #FactChecked
வைரலாகும் தோனி பாடும் வீடியோ... எங்கே எடுக்கப்பட்டது? #FactChecked
Advertisement