மான்கடிங் செய்ய வந்த அஷ்வினை வெறுப்பேற்றிய தவான்!

Updated: 22 April 2019 10:19 IST

டெல்லி கேப்பிட்டலுக்கு எதிரான ஆட்டத்தில் ஷிகர் தவானை மான்கடிங் செய்ய முயற்சித்தார். ஆனால் தவான் க்ரீஸை விட்டு வெளியே செல்லாமல் இருந்தார்.

Shikhar Dhawan Mocks Ravichandran Ashwin With Bizarre Dance After
மான்கடிங் செய்ய வந்த அஷ்வினிடம் சிறிய நக்கலான டான்ஸை ஆடி தவான் வெறுப்பேற்றினார்.  © BCCI/IPL

பஞ்சாப் கேப்டன் ரவிச்சந்திரன் அஷ்வின், ஐபிஎல் 2019 சீசனில் மான்கடிங் சர்ச்சையில் சிக்கினார். இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லரை மான்கடிங் செய்ததன் மூலம், இந்த சீசனில் நிறைய மான்கடிங் சீண்டல்கள் அரங்கேறின. இதனை ஒரு ஸ்போட்ஸ்மென்னுக்கான இலக்கணம் அல்ல என்றும் விமர்சித்தனர். அஷ்வின் மீண்டும் இந்த சர்ச்சையை துவங்கியுள்ளார். டெல்லி கேப்பிட்டலுக்கு எதிரான ஆட்டத்தில் ஷிகர் தவானை மான்கடிங் செய்ய முயற்சித்தார். ஆனால் தவான் க்ரீஸை விட்டு வெளியே செல்லாமல் இருந்தார்.

13வது ஓவரில் இந்த காட்சி அரங்கேறியது. அதன் பின் மான்கடிங் செய்ய வந்த அஷ்வினிடம் சிறிய நக்கலான டான்ஸை ஆடி தவான் வெறுப்பேற்றினார். 

இந்த காட்சியை கண்டதும் ரசிகர்கள், வர்ணனையாளர்கள் அனைவரும் உற்சாகமடைந்தனர். அஷ்வின் மீதான வெறுப்பை ரசிகர்களும் காட்டினர்.

தவான் இந்த போட்டியில் 41 பந்தில் 56 ரன்கள் சேர்த்து ஷ்ரேயாஸுடன் இரண்டாவது விக்கெட்டுக்கு 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். ஷ்ரேயாஸ் 49 பந்தில் 58 ரன்கள் எடுத்தார்.

முன்னதாக கெயில் அதிரடியில் பஞ்சாப் 20 ஓவரில் 163 ரன்கள் எடுத்தது. இதனை டெல்லி 19.4 ஓவரில் எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆட்டத்தை வென்றது.

இந்த வெற்றிமூலம் 6 வெற்றிகளுடன் டெல்லி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது

Comments
ஹைலைட்ஸ்
  • அஷ்வின் மீண்டும் மான்கடிங் சர்ச்சையை துவங்கியுள்ளார்
  • அஷ்வினிடம் சிறிய நக்கலான டான்ஸை ஆடி தவான் வெறுப்பேற்றினார்
  • தவான் இந்த போட்டியில் 41 பந்தில் 56 ரன்கள் குவித்தார்
தொடர்புடைய கட்டுரைகள்
ஒருநாள் அணியில் ஷிகர் தவானுக்கு பதிலாக இணையும் மயங்க் அகர்வால்?
ஒருநாள் அணியில் ஷிகர் தவானுக்கு பதிலாக இணையும் மயங்க் அகர்வால்?
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 அணியில் இணைந்தார் சஞ்சு சாம்சன்!
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 அணியில் இணைந்தார் சஞ்சு சாம்சன்!
"பிங்க் பந்து குறித்து கனவு காண்கிறேன்" - ரஹானே பதிவுக்கு பதிலளித்த கோலி, தவான்!
"பிங்க் பந்து குறித்து கனவு காண்கிறேன்" - ரஹானே பதிவுக்கு பதிலளித்த கோலி, தவான்!
T20I Rankings: தரவரிசையில் ரோஹித், கோலி, தவான் முன்னேற்றம்
T20I Rankings: தரவரிசையில் ரோஹித், கோலி, தவான் முன்னேற்றம்
"ஷிகர் தவானை அவமதிக்கவில்லை" - விளக்கமளித்த தப்ரைஸ் ஷம்சி!
"ஷிகர் தவானை அவமதிக்கவில்லை" - விளக்கமளித்த தப்ரைஸ் ஷம்சி!
Advertisement