சென்னையின் ப்ளே ஆஃப் கனவை தாமதப்படுத்துமா ஆர்சிபி?

Updated: 20 April 2019 19:44 IST

சென்னை இன்னும் ஒரு போட்டியை வென்றால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும்.

RCB vs CSK Preview: Virat Kohli
ஆர்சிபி இரண்டு போட்டிகளை மட்டும் தான் வென்றுள்ளது.  © BCCI/IPL

ஆர்சிபி அணி புதிய எழுச்சியடைந்து தோனி தலைமையிலான சென்னை அணியை எதிர்கொள்கிறது. சென்னை இன்னும் ஒரு போட்டியை வென்றால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும். தோனி அணியில் இல்லாததால் முந்தைய போட்டியில் சென்னை தோல்வியை தழுவியது.

ஆர்சிபியுடனான ஆட்டத்தில் தோனி களமிறங்க வாய்ப்புள்ளது என சென்னை அணியின் தற்கலிக கேப்டன் ரெய்னா தெரிவித்திருந்தார். 

இந்த ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகளை மட்டும் சென்னை தோற்றுள்ளது. ஆர்சிபி இரண்டு போட்டிகளை மட்டும் தான் வென்றுள்ளது. 

ஆர்சிபி கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் அபாரமாக ஆடி வென்றது. இனி வரும் அனைத்து போட்டிகளுமே அரையிறுதிதான் என்று ஆர்சிபி கேப்டன் கோலி கூறியுள்ளார்.

ஆர்சிபி 2016ம் ஆண்டு கடைசி 7 போட்டிகளில் 6 போட்டிகளை வென்று ப்ளே ஆஃப் சென்று அசத்தியது. 

சென்ற போட்டியில் ஆடாத டிவில்லியர்ஸ், இந்த போட்டியில் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை அணியில் தாஹிர் அபாரமாக பந்து வீசி 13 விக்கெட்டுகளுடன் அசத்தி வருகிறார்.

அணி விவரம்:

சிஎஸ்கே:

தோனி, ரெய்னா, ஜடேஜா, ஹர்பஜன், வாட்சன், ப்ராவோ, முரளி விஜய், கரண் ஷர்மா, கேதர் ஜாதவ், ராயுடு, வில்லி, தாஹிர், டூப்ளெஸிஸ், சஹார், சாம் பில்லிங்ஸ், மோஹித் ஷர்மா, ஷரதுல் தாக்கூர், ஷோரே, சாண்ட்னர், மோனு குமார், பிஷ்னோய், ஜெகதீசன், ருதுராஜ் , ஆசிப்

ஆர்சிபி:

கோலி, உமேஷ், பார்த்திவ், ஏபி டிவில்லியர்ஸ், சவுத்தி, மொயின் அலி, கோல்டர் நைல், சஹால், க்ராண்தோம், பவன் நஹி, குர்கீரத் சிங், அக்ஷதீப் நாத், மிலிண்ட் குமார், ஸ்டோனின்ஸ்ம் நவ்தீப் சைனி, ஷிம்ரான் ஹெட்மேயர், க்ளாஸன், ஹிம்மட் சிங், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், சிவம் துபே, கெஜ்ரோலியா, தேவ்டட் படிக்கல், பர்மன்

Comments
ஹைலைட்ஸ்
  • புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கே 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது
  • சென்னை, ஒரு போட்டியை வென்றால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும்
  • ஆர்சிபி இரண்டு போட்டிகளை மட்டும் தான் வென்றுள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
"தோனி பேட்டிங்கை கண்டு மிகவும் பயந்தேன்": விராட் கோலி
"தோனி பேட்டிங்கை கண்டு மிகவும் பயந்தேன்": விராட் கோலி
ஐபிஎல் தொடரில் 200 சிக்ஸர்களை கடந்த முதல் இந்தியர் தோனி!
ஐபிஎல் தொடரில் 200 சிக்ஸர்களை கடந்த முதல் இந்தியர் தோனி!
''ராகுல், மோடி வேண்டாம்... தோனி தான் அடுத்த பிரதமர்'' ட்விட்டரில் நெகிழ்ந்த ரசிகர்கள்
ரெய்னாவை டக் அவுட் ஆக்கிய ஸ்டெயின் யார்க்கருக்கு நெஹ்ராவின் ரியாக்‌ஷன்!
ரெய்னாவை டக் அவுட் ஆக்கிய ஸ்டெயின் யார்க்கருக்கு நெஹ்ராவின் ரியாக்‌ஷன்!
சென்னையின் ப்ளே ஆஃப் கனவை தாமதப்படுத்துமா ஆர்சிபி?
சென்னையின் ப்ளே ஆஃப் கனவை தாமதப்படுத்துமா ஆர்சிபி?
Advertisement