ஐபிஎல்லில் 5வது சதமடித்து அசத்தினார் விராட் கோலி!

Updated: 20 April 2019 14:00 IST

ஐபிஎல் தொடரில் தனது ஐந்தாவது சதத்தை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் நிறைவு செய்தார் விராட் கோலி. 58 பந்தில் சதத்தை அவர் நிறைவு செய்துள்ளார்.

Virat Kohli Scores His 5th IPL Century
விராட் கோலி, கொல்கத்தாவுக்கு எதிராக சிறப்பாக ஆடி சதமடித்தார். © BCCI/IPL

ஐபிஎல் தொடரில் தனது ஐந்தாவது சதத்தை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் நிறைவு செய்தார் விராட் கோலி. 58 பந்தில் சதத்தை அவர் நிறைவு செய்துள்ளார்.  ஐபிஎல் போட்டியில் அதிக சதம் அடித்த வீரர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஆறு சதங்களுடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கிறிஸ் கெயில் முதல் இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் வாட்சன் இருவரும் தலா நான்கு சதங்கள் அடித்துள்ளனர்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சிறப்பாக அடி சதம் அடித்து, போட்டியின் கடைசி பந்தில் ஆட்டம் இழந்தார். 

கடைசி 5 ஓவரில் 91 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது ஆர்சிபி. இந்த சீசனில் இதுவே, ஆர்சிபியின் அதிகபடியான ரன்களாக உள்ளது.

இந்த போட்டியில், மொயின் அலி சிறப்பாக ஆடி ரன்கள் குவித்தார். ஆறு சிக்ஸர்களும்,  ஐந்து பவுண்ரிகளும் அடித்து ஆர்சிபியின் ஸ்கோரை அதிகமாக்கினார். கோலி மற்றும் அலி இணைந்து 43 பந்தில் 90 ரன்கள் எடுத்தனர். 

கோலி, அரைசதத்தை 40 பந்தில் அடித்தார். இரண்டாவது அரைசதத்தை 17 பந்தில் அடித்தார். பவர்ப்ளேயில் ஆர்சிபி 42 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த போட்டியில், கொல்கத்தாவை வீழ்த்தி ஆர்சிபி அணி வெற்றி பெற்றது.

Comments
ஹைலைட்ஸ்
  • ஐபிஎல்லில் 5வது சதத்தை நிறைவு செய்தார் விராட் கோலி
  • டேவிட் வார்னர் மற்றும் வாட்சன் இருவரும் தலா நான்கு சதங்கள் அடித்துள்ளனர்
  • கடைசி 5 ஓவரில் 91 ரன்கள் எடுத்து, 213 ரன்கள் குவித்தது ஆர்சிபி
தொடர்புடைய கட்டுரைகள்
"ஈகோவை கைவிடுங்கள்" - டெஸ்ட் போட்டியின் போது கோலி படிக்கும் புத்தகம்!
"ஈகோவை கைவிடுங்கள்" - டெஸ்ட் போட்டியின் போது கோலி படிக்கும் புத்தகம்!
"டெண்டுல்கரின் ஒரு சாதனையை கோலியாலும் முறியடிக்க முடியாது" - சேவாக்!
"டெண்டுல்கரின் ஒரு சாதனையை கோலியாலும் முறியடிக்க முடியாது" - சேவாக்!
"என் வாழ்க்கையில் கிடைத்த வரம் அனுஷ்கா" - காதலை வெளிப்படுத்திய கோலி!
"என் வாழ்க்கையில் கிடைத்த வரம் அனுஷ்கா" - காதலை வெளிப்படுத்திய கோலி!
"நான் சுயநலவாதியல்ல" - சதமடிக்காதது குறித்து ரஹானே!
"நான் சுயநலவாதியல்ல" - சதமடிக்காதது குறித்து ரஹானே!
பிசிசிஐ வெளியிட்டுள்ள ரிச்சர்ட்ஸ் கோலியின் சிறப்பு உரையாடல் டீசர்!
பிசிசிஐ வெளியிட்டுள்ள ரிச்சர்ட்ஸ் கோலியின் சிறப்பு உரையாடல் டீசர்!
Advertisement