"தோனி பேட்டிங்கை கண்டு மிகவும் பயந்தேன்": விராட் கோலி

Updated: 22 April 2019 16:36 IST

சென்னை அணியுடனான வெற்றிக்கு பின் தோனியின் ஆட்டம் ஒரு மிகப்பெரிய பயத்தை ஏற்படுத்தியதாக ஆர்சிபி கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

Virat Kohli Reacts To MS Dhoni
தோனி ஆடியதை பார்க்கும் போது உண்மையிலேயே மிகப்பெரிய பயத்தை ஏற்படுத்தியது: கோலி © BCCI/IPL

சென்னை அணியுடனான வெற்றிக்கு பின் தோனியின் ஆட்டம் ஒரு மிகப்பெரிய பயத்தை ஏற்படுத்தியதாக ஆர்சிபி கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். ஐபிஎல் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஆர்சிபி சென்னை அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆர்சிபி அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஆடிய தோனியின் அதிரடியான ஆட்டம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. கடைசி பந்தில் தக்கூர் ரன் அவுட் ஆகி சென்னை ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்றது. எனினும், தோனியின் ஆட்டம் ஒரு நிமிடம் ஆர்சிபியின் வெற்றியை பறிக்கும் விதமாக மாறியிருந்தது. 48 பந்தில் 84 ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதுதான் ஐபிஎல் போட்டிகளில் தோனியின் அதிகபட்ச ஸ்கோராகும். 

பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேசிய கோலி ''இந்த போட்டி நிறைய உணர்ச்சிகளால் நிறைந்தது. நாங்கள் 19வது ஓவர் வரை சிறப்பாக ஆடினோம். 160 ரன்களை கட்டுப்படுத்துவது என்பது இந்த பிட்ச்சில் கடினமான விஷயம் தான். இருந்தாலும் சிறிய ரன் வித்தியாசத்தில் வென்றது மகிழ்ச்சிதான். நாங்களும் சில போட்டிகளை சிறு ரன் வித்தியாசத்தில் இழந்துள்ளோம். ஆனால் தோனி ஆடியதை பார்க்கும் போது உண்மையிலேயே மிகப்பெரிய பயத்தை ஏற்படுத்தியது" என்றார். 

சென்னை அணி, கடைசி ஓவரில் 26 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலைக்கு வந்தது. உமேஷ் யாதவ் வீசிய பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களை விளாசினார். கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. உமேஷ் அந்த பந்தை ஸ்லோ பாலாக வீசினார்.

கடைசி பந்து நேராக கீப்பரிடம் செல்ல தோனி மறுமுனைக்கு ஓடினார். ஆனால் எதிர் முனையில் இருந்த ஷரதுல் தக்கூர் ரன் அவுட் ஆனார். இதனால் ஆர்சிபி 1 ரன் வித்தியாசத்தில் வென்றது.

இது ஆர்சிபியின் மூன்றாவது ஐபிஎல் வெற்றியாகும். பவர் ப்ளேயின் விக்கெட்டுகளை வீழ்த்துவது அணியின் வெற்றிக்கு உதவுவதாக கோலி கூறினார். 

அடுத்த போட்டியில் ஆர்சிபி வரும் ஏப்ரல் 24ம் தேதி கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை எதிர்கொள்கிறது.

Comments
ஹைலைட்ஸ்
  • தோனி ஆடியதை பார்க்கும் போது உண்மையிலேயே பயத்தை ஏற்படுத்தியது: கோலி
  • 48 பந்தில் 84 ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் தோனி
  • ஆர்சிபி 1 ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வென்றது
தொடர்புடைய கட்டுரைகள்
"கங்குலி, தோனியை விட விராட் கோலி தான் சிறந்தவர்" - கவுதம் கம்பீர்
"கங்குலி, தோனியை விட விராட் கோலி தான் சிறந்தவர்" - கவுதம் கம்பீர்
டெஸ்ட் கேப்டனாக சவுரவ் கங்குலியின் சாதனையை முந்தினார் விராட் கோலி!
டெஸ்ட் கேப்டனாக சவுரவ் கங்குலியின் சாதனையை முந்தினார் விராட் கோலி!
"கிரிக்கெட் வீரர்களில் தோனி எப்போதும் சிறந்தவர்" - ரவி சாஸ்திரி
"கிரிக்கெட் வீரர்களில் தோனி எப்போதும் சிறந்தவர்" - ரவி சாஸ்திரி
100 டி20 போட்டிகளில் இடம்பெற்ற முதல் இந்தியரானார் ஹர்மன்பிரீத் கவுர்!
100 டி20 போட்டிகளில் இடம்பெற்ற முதல் இந்தியரானார் ஹர்மன்பிரீத் கவுர்!
"வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணியின் 4வது இடத்தில் நான் ஆடுவேன்" - சுரேஷ் ரெய்னா!
"வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணியின் 4வது இடத்தில் நான் ஆடுவேன்" - சுரேஷ் ரெய்னா!
Advertisement