ஐபிஎல்லில் அதிக ரன்கள்: சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த கோலி!

Updated: 06 April 2019 12:08 IST

இந்திய பேட்ஸ்மேனகளில் டி20 போட்டிகளில் 8000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் கோலி.

Virat Kohli Overtakes Suresh Raina To Become Leading Run-Scorer In IPL
பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் விராட் கோலி 84 ரன்கள் எடுத்தார். © AFP

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி நேற்று நடந்த போட்டியில், ஐபிஎல்லில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார். 61 ரன்கள் எடுத்திருந்த போது ஏற்கெனவே முதலிடத்தில் இருந்த ரெய்னாவின் சாதனையை முறியடித்துள்ளார். இந்த போட்டியில் கோலி 84 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் 160 இன்னிங்க்ஸில் 38.24 சராசரியுடன் மொத்த ரன்களாக 5,110 எடுத்துள்ளார்.

இந்திய பேட்ஸ்மேன்களில் டி20 போட்டிகளில் 8000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் கோலி, முதலில் கடந்தவர் சுரேஷ் ரெய்னா. உலக அளவில் இதை செய்த ஏழாவது வீரர் கோலி.

2008 ஆண்டு முதல் விராட் கோலி ஆர்சிபி அணிக்காக ஆடி வருகிறார். நேற்றைய போட்டியில் ஏபிடி வில்லியர்ஸ், கோலி  இணைந்து 108 ரன்கள் எடுத்தனர், இதனால் ஆர்சிபி 20 ஓவர்களில் 205 ரன்களை எடுத்தது. 

ஐபிஎல் போட்டிகளில் தனது  35வது அரைசதத்தை நிறைவு செய்தார். 2016ம் ஆண்டு  நடந்த ஐபிஎல்லில் 16 போட்டிகளில் ஆடி 973 ரன்கள் எடுத்து ஆர்சிபி அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார். ஐபிஎல் போட்டியில் ஒரு சீசனில் யாரும் இதுவரை கடக்காத ரன்களாக 973 உள்ளது. 4000 ரன்களை கடந்த முதல் வீரரும் இவர்தான்.

விராட் கோலி, கடந்த 6 வருடங்களாக ஆர்சிபி அணிக்கு தலைமை தாங்கி வருகிறார். ஆனால், இதுவரை ஒரு சீசனிலும் பட்டத்தை வெல்லவில்லை. 

ஐபிஎல் போட்டிகளில் வெற்றி பெறாவிட்டாலும், இந்திய அணியை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் வெற்றி பெற செய்துள்ளார் கோலி.

Comments
ஹைலைட்ஸ்
  • 160 இன்னிங்க்ஸில் 5,110 ரன்களை கடந்துள்ளார் விராட் கோலி
  • 2008 ஆண்டு முதல் விராட் கோலி ஆர்சிபி அணிக்காக ஆடி வருகிறார்
  • 2019 ஐபிஎல்லின் முதல் அரைசதத்தை நேற்று நிறைவு செய்தால் கோலி
தொடர்புடைய கட்டுரைகள்
"ஸ்மித் மிக மோசமாக சதமடிக்கக் கூடியவர்" - கோலியுடன் ஒப்பிட்ட ஜாண்டி ரோட்ஸ்
"ஸ்மித் மிக மோசமாக சதமடிக்கக் கூடியவர்" - கோலியுடன் ஒப்பிட்ட ஜாண்டி ரோட்ஸ்
"விராட் கோலியைப் போலவே ஷிகர் தவானின் ஆட்டமும் முக்கியமானது" - ஹர்பஜன் சிங்
"விராட் கோலியைப் போலவே ஷிகர் தவானின் ஆட்டமும் முக்கியமானது" - ஹர்பஜன் சிங்
Narendra Modi Birthday: வாழ்த்து தெரிவித்த கிரிக்கெட் வீரர்கள்!
Narendra Modi Birthday: வாழ்த்து தெரிவித்த கிரிக்கெட் வீரர்கள்!
"தோனியின் ஓய்வு குறித்து தேர்வுக்குழு, கோலி முடிவெடுக்க வேண்டும்": கங்குலி!
"தோனியின் ஓய்வு குறித்து தேர்வுக்குழு, கோலி முடிவெடுக்க வேண்டும்": கங்குலி!
"
"'A' ஃபார் அனுஷ்கா" - கோலி வெளியிட்ட புகைப்படத்தை ஆராய்ந்த ரசிகர்கள்!
Advertisement