டி20 போட்டிகளில் விராட் கோலிக்கு காத்திருக்கும் புதிய சாதனை!

Updated: 05 April 2019 16:08 IST

இன்றைய போட்டியில் கோலி 17 ரன்களை குவித்தால் டி20 போட்டிகளில் 8000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.

Virat Kohli Inches Closer To T20 Milestone
ஐபிஎல் 2019ல் கோலி ஆடிய நான்கு ஆடங்களிலும் முறையே 23,3,46,6 ரன்களை குவித்துள்ளார். © BCCI/IPL

ஐபிஎல் தொடரை விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி சிறப்பாக துவங்காவிட்டாலும் கோலி தனிப்பட்ட முறையில் சிறப்பாக ஆடி வருகிறார். அவர் இன்று நடைபெறும் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ஒரு சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது. இன்றைய போட்டியில் அவர் 17 ரன்களை குவித்தால் டி20 போட்டிகளில் 8000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைப்பார். இதன் மூலம் டி20 போட்டிகளில் 8000 ரன்களை கடந்த இரண்டாவது இந்திய‌ வீரர் என்ற பெருமையையும் பெறுவார். ரெய்னா 8110 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

ஐபிஎல் தொடரிலும் இவர்கள் இருவரும் தான் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். ரெய்னா 5086 ரன்களுடனும், கோலி 5026 ரன்களுடனும் உள்ளனர். 

ஐபிஎல் 2019ல் கோலி ஆடிய நான்கு ஆடங்களிலும் முறையே 23,3,46,6 ரன்களை குவித்துள்ளார்.

ஆர்சிபி சரியாக ஆடும் லெவனை தேர்ந்தெடுக்காமல் தடுமாறி வருகிறது. கடைசியாக கொல்கத்தாவை ஆர்சிபி வீழ்த்தியது 2016ல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
ஹைலைட்ஸ்
  • ஐபிஎல் 2019 போட்டிகளை கோலி சரியாக ஆடவில்லை
  • ஐபிஎல் தொடரில் ரெய்னா 5086 ரன்களுடனும், கோலி 5026 ரன்களுடனும் உள்ளனர்
  • கடந்த நான்கு ஆடங்களிலும் 23,3,46,6 ரன்களை குவித்துள்ளார் கோலி
தொடர்புடைய கட்டுரைகள்
"கோபி பிரயன்ட் இறப்பு செய்தியை கேட்டு முற்றிலும் நொறுங்கிப்போனேன்" - விராட் கோலி!
"கோபி பிரயன்ட் இறப்பு செய்தியை கேட்டு முற்றிலும் நொறுங்கிப்போனேன்" - விராட் கோலி!
2வது டி20 வெற்றிக்கு பிறகு விராட் கோலி குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்தார்!
2வது டி20 வெற்றிக்கு பிறகு விராட் கோலி குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்தார்!
New Zealand vs India 2nd T20: 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா
New Zealand vs India 2nd T20: 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா
"போட்டியை முடிக்கும் கலையை ரோஹித் மற்றும் கோலியிடம் கற்றுக்கொண்டேன்" - ஸ்ரேயாஸ்
"போட்டியை முடிக்கும் கலையை ரோஹித் மற்றும் கோலியிடம் கற்றுக்கொண்டேன்" - ஸ்ரேயாஸ்
முதல் டி20 போட்டியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா!
முதல் டி20 போட்டியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா!
Advertisement