மும்பையில் ஆர்சிபி அணி வீரர்களுக்கு விருந்தளித்த விராட், அனுஷ்கா!

Updated: 19 April 2019 14:49 IST

கோலி தலைமையிலான ஆர்சிபி அடுத்த போட்டியில் இன்று கொல்கத்தாவை எதிர்கொள்கிறது.

Virat Kohli, Anushka Sharma Host Dinner For RCB Team Members
ஆர்சிபி அணியினருக்கு விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா தங்களது மும்பை வீட்டில் இரவு விருந்து அளித்துள்ளனர். © Instagram @yuzi_chahal23

ஐபிஎல் தொடரில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஆடுவதற்காக மும்பை வந்திருந்த ஆர்சிபி அணியினருக்கு விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா தங்களது மும்பை வீட்டில் இரவு விருந்து அளித்துள்ளனர். இருவரும் கருப்பு மற்றும் நீல நிற உடையணிந்து வீரர்களுக்கு விருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். விருந்தில் கலந்து கொண்ட ஆர்சிபி வீரர்களில் தேவ் படிக்கல், ஹிம்மத் சிங் மற்றும் சஹால் ஆகியோர் சமூக வலைதளங்களில் கோலி மற்றும் அனுஷ்காவை பாராட்டி நன்றி தெரிவித்துள்ளனர்.. 

சஹால், "கோலி மற்றும் அனுஷ்கா இருவருக்கும் அழகான டின்னர் தந்ததற்கு நன்றி" என்று கூறியுள்ளார்.

மும்பைக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பாண்ட்யா 16 பந்தில் 37 ரன்கள் குவித்து ஆர்சிபியின் வெற்றியை பறித்தார். 

Thank you so much @virat.kohli and @anushkasharma for hosting us

A post shared by Dev (@devpadikkal19) on

172 ரன்கள் வெற்றி என்ற இலக்கில் ஆடிய மும்பை அணிக்கு 16வது ஓவர் வரை வெற்றி கிடைக்குமா என்ற சந்தேகம் இருந்தது. அதனை ஹர்திக் பாண்ட்யா தீர்த்து வைத்தார்.

5 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடித்து வான்கடேவின் மும்பையின் வெற்றியை பதிவு செய்தார்.

மும்பை அணிக்கு 2 ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஒரே ஓவரில் அதனை அடித்து மும்பையை 6 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி பெற வைத்தார் பாண்ட்யா.

மும்பை ஆடிய 8 போட்டிகளில் 5 போட்டிகளை வென்று புள்ளிப்பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளது. அதேசமயம் ஆர்சிபி 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. 

கோலி தலைமையிலான ஆர்சிபி அடுத்த போட்டியில் இன்று கொல்கத்தாவை எதிர்கொள்கிறது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"மீண்டும் அணியுடன் இணைந்தது மகிழ்ச்சி" - டெஸ்ட் பயிற்சியில் விராட் கோலி
"மீண்டும் அணியுடன் இணைந்தது மகிழ்ச்சி" - டெஸ்ட் பயிற்சியில் விராட் கோலி
ரசிகர்களின் இதயத்தை வென்ற அனுஷ்கா ஷர்மா பதிவிட்ட கோலியின் புகைப்படம்!
ரசிகர்களின் இதயத்தை வென்ற அனுஷ்கா ஷர்மா பதிவிட்ட கோலியின் புகைப்படம்!
ஓய்வுக்கு பிறகு தான் கற்றுக்கொள்ள நினைப்பது குறித்து பேசினார் கோலி!
ஓய்வுக்கு பிறகு தான் கற்றுக்கொள்ள நினைப்பது குறித்து பேசினார் கோலி!
"ரோஹித் ஷர்மா செய்வதை, கோலியால் கூட செய்ய முடியாது" - வீரேந்தர் சேவாக்
"ரோஹித் ஷர்மா செய்வதை, கோலியால் கூட செய்ய முடியாது" - வீரேந்தர் சேவாக்
விராட் கோலியை மிஞ்சி சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!
விராட் கோலியை மிஞ்சி சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!
Advertisement