கோலியின் ஆக்ரோஷ ரியாக்‌ஷனுக்கு அஷ்வினின் பதில் என்ன?

Updated: 25 April 2019 17:35 IST

கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் அப்படி ஒரு கொண்டாட்டத்தை அவர் வெளிப்படுத்தியது அனைவரையும் ரசிக்க வைத்தது. அஷ்வின் - கோலியின் ரியாக்‌ஷன் சர்ச்சை நேற்றைய போட்டியின் பேசு பொருளானது. 

Virat Kohli Aggressive Send-Off Gets Reaction From Ravichandran Ashwin
அஷ்வின் அடித்த பந்தை அபாரமாக கேட்ச் செய்து கோலி கொடுத்த ரியாக்‌ஷன் வைரலானது. © AFP

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் கோலி ஆக்ரோஷமான கொண்டாட்டங்களுக்கு பெயர் போனவர். கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் அப்படி ஒரு கொண்டாட்டத்தை அவர் வெளிப்படுத்தியது அனைவரையும் ரசிக்க வைத்தது. அஷ்வின் - கோலியின் ரியாக்‌ஷன் சர்ச்சை நேற்றைய போட்டியின் பேசு பொருளானது. 

203 ரன்களை சேஸ் செய்த கிங்ஸ் லெவன் அணிக்கு கடைசி ஓவரில் 27 ரன்கள் தேவைப்பட்டது. கிங்ஸ் லெவன் கேப்டன் அஷ்வின் கடைசி ஓவரின் முதல் பந்தை சிக்ஸர் அடித்தார். இரண்டாவது பந்தையும் சிக்ஸர் அடிக்க முற்பட்டார். அது நேராக கோலியின் கைகளுக்கு சென்றது. அபாரமாக கேட்ச் செய்து கோலி கொடுத்த ரியாக்‌ஷன் வைரலானது.

போட்டி முடிந்த பிறகு அஷ்வினிடம் இது குறித்து கேட்டதற்கு, "இருவருமே ஆட்டத்தில் அதிக ஈடுபாடு உள்ள வீரர்கள். நானும் இது போன்று செய்வதால், இது எனக்கு தவறாக தெரிவில்லை" என்றார். ஆனால், அவுட் ஆகி திரும்பிய அஷ்வின் அணி வீரர்கள் இருக்கும் இடத்தில் கோபமாக க்ளவுஸை வீசியெறிந்துவிட்டு சென்றார்.

இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபியின் ப்ளே ஆஃப் கனவு இன்னும் சாத்தியமாகவே உள்ள சூழல் உருவாகியுள்ளது.

டிவில்லியர்ஸ் 44 பந்தில் 82 ரன்கள் குவித்து அசத்தினார். இதனால் ஆர்சிபி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது.

203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று சேஸ் செய்த கிங்ஸ் லெவன் அணி, 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்தது. இதனால் 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

"கடைசி 5 ஆட்டங்களில் 4 ஐ வென்றுள்ளோம். நாங்கள் மகிழ்ச்சியான கிரிக்கெட்டை ஆடுகிறோம். டிவில்லியர்ஸ், ஸ்டோனின்ஸ் வெற்றியை எளிதாக்கினர். அவர்கள் ஆட்டம் தான் அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியது" என்றார் கோலி. 

முதல் 6 போட்டிகளை தொடர்ந்து தோற்ற பெங்களூரு, தற்போது 8 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. இன்னும் 3 போட்டிகள் மீதமுள்ள நிலையில் மூன்றையும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
பிசிசிஐ வெளியிட்டுள்ள ரிச்சர்ட்ஸ் கோலியின் சிறப்பு உரையாடல் டீசர்!
பிசிசிஐ வெளியிட்டுள்ள ரிச்சர்ட்ஸ் கோலியின் சிறப்பு உரையாடல் டீசர்!
டெஸ்ட் போட்டிகளுக்கு முன்பு பீச்சில் நேரம் கழிக்கும் இந்திய வீரர்கள்!
டெஸ்ட் போட்டிகளுக்கு முன்பு பீச்சில் நேரம் கழிக்கும் இந்திய வீரர்கள்!
பெயர், நம்பர் பொருத்தப்பட்ட ஜெர்ஸி... டீம் இந்தியா பதிவிட்ட புகைப்படம்!
பெயர், நம்பர் பொருத்தப்பட்ட ஜெர்ஸி... டீம் இந்தியா பதிவிட்ட புகைப்படம்!
ரிக்கி பாண்டிங்கின் சத சாதனையை சமன் செய்வாரா கோலி?
ரிக்கி பாண்டிங்கின் சத சாதனையை சமன் செய்வாரா கோலி?
‘சபாஷ், சரியான போட்டி…’- கோலிக்கு செக் வைக்கும் ஸ்மித்!
‘சபாஷ், சரியான போட்டி…’- கோலிக்கு செக் வைக்கும் ஸ்மித்!
Advertisement