"பெனால்டிக்கெல்லாம் பயமில்லை நீங்கள் செய்தது தவறு" ரெஃப்ரியிடம் பொங்கிய கோலி

Updated: 29 March 2019 20:11 IST

"நான் எல்லைக்கோடை தாண்டி பிறகே இது நோ பால் என அறிந்தேன். பும்ரா வீசிய பந்திலும் தவறாக ஒரு வைடு வழங்கினார்" என குற்றம் சாட்டினார் ரோஹித் ஷர்மா

RCB vs MI: Virat Kohli Abuses Match Referee, Says Don
ஆட்டம் முடிந்து பரிசளிப்புக்கு முன் இயன் பிஷப்பின் பேட்டிக்கு பதிலளித்த கோலி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். © BCCI/IPL

மும்பை மற்றும் பெங்களூரு இடையேயான ஐபிஎல் போட்டியில் கடைசி பந்தை நடுவர் ரவி நோபால் என அறிவிக்காததால் ஆர்சிபி தோல்வியை சந்திக்கும் சூழல் உருவானது. போட்டி  முடிந்து மும்பை வெற்றி என்று அறிவிக்கப்பட்டதும், மலிங்கா வீசிய பந்து தெளிவாக நோபால் என்பது உறுதியானது. 

கோலி மைதானத்தின் பெரிய திரையில் நோபாலை பார்த்து ஆத்திரமடைந்தார். "இது மிகப்பெரிய தவறு" என தனது கோபத்தை வெளிப்படுத்தினார். ஆட்டம் முடிந்து பரிசளிப்புக்கு முன் இயன் பிஷப்பின் பேட்டிக்கு பதிலளித்த கோலி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

"நாங்கள் ஐபிஎல் அள‌வில் போட்டிகளை ஆடுகிறோம். ஏதோ க்ளப் கிரிக்கெட் ஆடவில்லை. கடைசி பந்தில் நோபால் வழங்காதது தவறான விஷயம். நடுவர்கள் தங்கள் கண்களை அதிக விழிப்புடன் வைத்திருக்க வேண்டும். அதுவும் இவ்வளவு பெரிய நோபாலை தவறவிட்டுப்பது ஏற்கமுடியாதது. இது போட்டியை தலைகீழாக மாற்றியது" என்றார் கோலி

ஆட்டம் முடிந்ததும் கோலி மேட்ச் ரெஃப்ரி மனு நாயர் அறைக்கு சென்று அவரிடம் அம்பயர் தவறு குறித்து வாக்குவாதம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் "ஒழுங்கு நடவடிக்கைகள் பற்றி கவலை இல்லை. பெனால்டி விதித்தாலும் பரவாயில்லை" என்று கூறியுள்ளார் கோலி.

ஆர்சிபி சேசிங்கில் கடைசி பந்தை சிவம் துபே எதிர்கொண்டார். அந்த பந்து நோபால் என்றால் அதில் ஒரு ரன் ஓடியதால் ஒரு பந்தில் 5 ரன் அடிக்க வேண்டும் என்ற சூழல் உருவாகியிருக்கும். டிவில்லியர்ஸ் அபாரமாக 41 பந்தில்; 71 ரன் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார் அவர் ப்ரீ ஹிட்டில் ஆர்சிபியை வெற்றி பெற வைத்திருக்க வாய்ப்பு அதிகம். 

நடுவரின் தவறை ரோஹித் ஷர்மாவும் விமர்சித்தார். "நான் எல்லைக்கோடை தாண்டி பிறகே இது நோ பால் என அறிந்தேன். பும்ரா வீசிய பந்திலும் தவறாக ஒரு வைடு வழங்கினார்" என குற்றம் சாட்டினார். ஐபிஎல் தொடரில் ஆர்சிபி தனது இரண்டாவது போட்டியிலும் தோற்றது. 

Comments
ஹைலைட்ஸ்
  • ஆட்டம் முடிந்ததும் ரெஃப்ரி மனு நாயரிடன் வாக்குவாதம் செய்துள்ளார் கோலி
  • பெனால்டி விதித்தாலும் பரவாயில்லை என்று கூறியுள்ளார் கோலி
  • நடுவரின் தவறை ரோஹித் ஷர்மாவும் விமர்சித்தார்
தொடர்புடைய கட்டுரைகள்
"மீண்டும் அணியுடன் இணைந்தது மகிழ்ச்சி" - டெஸ்ட் பயிற்சியில் விராட் கோலி
"மீண்டும் அணியுடன் இணைந்தது மகிழ்ச்சி" - டெஸ்ட் பயிற்சியில் விராட் கோலி
ரசிகர்களின் இதயத்தை வென்ற அனுஷ்கா ஷர்மா பதிவிட்ட கோலியின் புகைப்படம்!
ரசிகர்களின் இதயத்தை வென்ற அனுஷ்கா ஷர்மா பதிவிட்ட கோலியின் புகைப்படம்!
ஓய்வுக்கு பிறகு தான் கற்றுக்கொள்ள நினைப்பது குறித்து பேசினார் கோலி!
ஓய்வுக்கு பிறகு தான் கற்றுக்கொள்ள நினைப்பது குறித்து பேசினார் கோலி!
"ரோஹித் ஷர்மா செய்வதை, கோலியால் கூட செய்ய முடியாது" - வீரேந்தர் சேவாக்
"ரோஹித் ஷர்மா செய்வதை, கோலியால் கூட செய்ய முடியாது" - வீரேந்தர் சேவாக்
விராட் கோலியை மிஞ்சி சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!
விராட் கோலியை மிஞ்சி சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!
Advertisement