கோலியுடன் வாக்குவாதம் செய்த நடுவர் மீது விசாரணை!

Updated: 07 May 2019 16:28 IST

50 வயதான இங்கிலாந்து நடுவரான இவர் சன்ரைசர்ஸ் பேட்டிங்கின் போது உமேஷ் யாதவுக்கு தொடர்ந்து நோபால் வழங்கினார். இதனை கேட்ட கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

Umpire Nigel Llong Could Face Cricket Board Enquiry Over Alleged Misconduct
50 வயதான இங்கிலாந்து நடுவரான நீகல் லாங்க், சன்ரைசர்ஸ் பேட்டிங்கின் போது உமேஷ் யாதவுக்கு தொடர்ந்து நோபால் வழங்கினார். © BCCI/IPL

ஆர்சிபி, சன்ரைசர்ஸ் இடையேயான ஆட்டத்தின் போது ஆர்சிபி கேப்டன் விராட் கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நீகல் லாங்க் மீது விசாரணை நடத்தப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. 50 வயதான இங்கிலாந்து நடுவரான இவர் சன்ரைசர்ஸ் பேட்டிங்கின் போது உமேஷ் யாதவுக்கு தொடர்ந்து நோபால் வழங்கினார். இதனை கேட்ட கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவர் அறிவித்த நோபால் சரியான பந்துதான் என்று டிவி ரீப்ளேயில் தெரிந்தது.

"லாங்க் மீது விசாரணை மேற்கொள்ளப்படும். அவர் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும். ஆனால் இது அவர் ஐபிஎல் இறுதி போட்டியில் நடுவராக இருப்பதை எங்கும் பாதிக்காது" என்று ஐபிஎல் நிர்வாகம் கூறியுள்ளது. 

கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க செயலாளர் சுதாகர் ராவ் லாங்க் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த முடிவில் உள்நோக்கம் இருப்பதாக சந்தேகிப்பதாகவும் கூறியுள்ளார்.

இதனை பிசிசிஐயின் நிர்வாக கமிட்டிக்கும் பரிந்துரைத்துள்ளதாகவும், கண்டிப்பாக லாங்க் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறிய அவர், வீரர்கள் தவறுகளுக்காக தண்டிக்கப்படும் போது ஏன் நடுவர்கள் தண்டிக்கப்படக்கூடாது என்றார்.

மேலும், "தான் லாங்கை தொடர்பு கொள்ளவில்லை. மேட்ச் ரெஃப்ரி நாராயண் குட்டியிடம் பேசினேன். நிர்வாக குழு நடவடிக்கை எடுக்கும்" என்றார்.

லாங்க் 56 டெஸ்ட்கள், 123 ஒருநாள் போட்டிகள் மற்றும் 32 டி20 போட்டிகளுக்கு நடுவராக பணியாற்றியுள்ளார். உலகக் கோப்பை தொடர் நடுவர் குழுவிலும் இடம்பெற்றுள்ளார்.

Comments
ஹைலைட்ஸ்
  • உலகக் கோப்பை தொடர் நடுவர் குழுவிலும் இடம்பெற்றுள்ளார் லாங்க்
  • நீகல் லாங்க் கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்
  • நீகல் லாங்க்கிற்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
முதல் டி20 போட்டியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா!
முதல் டி20 போட்டியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா!
இந்தியா vs நியூசிலாந்து முதல் டி20: நேரலையை எங்கு, எப்போது காணலாம்?
இந்தியா vs நியூசிலாந்து முதல் டி20: நேரலையை எங்கு, எப்போது காணலாம்?
உள்நாட்டு தொடர் வெற்றிக்கு பிறகு நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை தொடங்கியது இந்தியா!
உள்நாட்டு தொடர் வெற்றிக்கு பிறகு நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை தொடங்கியது இந்தியா!
உடற்பயிற்சிக்கு பிறகு "நல்ல உணவு" உண்டு மகிழ்ந்த இந்திய அணி வீரர்கள்!
உடற்பயிற்சிக்கு பிறகு "நல்ல உணவு" உண்டு மகிழ்ந்த இந்திய அணி வீரர்கள்!
இந்தியா vs ஆஸ்திரேலியா: 29வது ஒருநாள் சதத்தை நிறைவு செய்தார் ரோஹித் ஷர்மா!
இந்தியா vs ஆஸ்திரேலியா: 29வது ஒருநாள் சதத்தை நிறைவு செய்தார் ரோஹித் ஷர்மா!
Advertisement