ஐபிஎல் 2019: அதிகம் ஏலம் போன ஐந்து வீரர்கள்!

Updated: 19 March 2019 17:20 IST

ஐபிஎல் போட்டிகளின் 2019ம் ஆண்டு தொடர் வரும் மார்ச் 23ம் தேதி துவங்கவுள்ளது. முதல் போட்டியில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகின்றன.

Top Five IPL Buys Who Made Franchises Break The Bank
ஜெயதேவ் உனக்டட் 8.4 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார் © AFP

ஐபிஎல் போட்டிகளின் 2019ம் ஆண்டு தொடர் வரும் மார்ச் 23ம் தேதி துவங்கவுள்ளது. அதிரடி வீரர் யுவராஜ் அடிப்படை விலைக்கு ஏலம் போனார். மெக்குலம் எந்த அணியிலும் ஏலம் எடுக்கப்படவில்லை என்று சீனியர்களின் மார்க்கெட் சரிய, இளம் வீரர்கள் கோடிக்கணக்கில் ஏலத்துக்கு எடுக்கப்பட்டனர். இந்த ஐபிஎல் தொடரில் அதிக விலைக்கு ஏலம் போன ஐந்து வீரர்கள் யார் என்பது இதோ...

ஜெயதேவ் உனக்டட் - 8.4 கோடி

சென்ற சீசனிலும் அதிக தொகையான 11.5 கோடிக்கு ஏலம் போன உனக்டட், இந்த சீசனிலும் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இந்த சீசனில் 8.4 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 

வருண் சக்கரவர்த்தி - 8.4 கோடி

டி20 தொடர்களில் அவ்வளவாக பரிட்சயமில்லாத பெயர். ஆனால் தமிழ்நாடு ப்ரீமியர் லீக்கில் மதுரை அணிக்காக ஆடி அசத்தியவர். இந்த தொடரில் 10 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக 8.4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

சாம் குரான் - 7.2 கோடி

இங்கிலாந்து ஆல் ரவுண்டர் இந்தியாவுடனான தொடரில் சிறப்பாக ஆடினார். 20 வயதான இவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக 7.2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

காலின் இங்ராம் - 6.4 கோடி

2011 டெல்லி அணியில் இடம்பிடித்திருந்த காலின் இங்ராம் தற்போது மீண்டும் டெல்லி கேப்பிட்டல் என பெயர் மாற்றப்பட்டுள்ள அணிக்கு திரும்பியுள்ளார். மேக்ஸ்வெல் இல்லாத குறையை இவர் சரிகட்டுவார் என்று கூறப்படுகிறது. இவர் 6.2 கோடி ரூபாய்க்கு எலம் எடுக்கப்பட்டுள்ளார். 

ஷிவம் டுபே - 5 கோடி

மும்பை - பரோடா இடையேயான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் 5 பந்தில் 5 சிக்ஸர் அடித்து அசத்தினார் ஷிவம் டுபே. 25 வயதான இவர் வலது கை மிதவேகப்பந்துவீச்சாளராக உள்ளார். ஆர்சிபி அணி இவரை 5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • ஐபிஎல் முதல் போட்டி வரும் மார்ச் 23ம் தேதி துவங்கவுள்ளது
  • ஜெயதேவ் உனக்டட், வருண் சக்கரவர்த்தி 8.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டனர்
  • கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக 7.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார் சாம்
தொடர்புடைய கட்டுரைகள்
இணையத்தில் வைரலான கைஃப்போடு கைஃப் எடுத்த புகைப்படம்
இணையத்தில் வைரலான கைஃப்போடு கைஃப் எடுத்த புகைப்படம்
"அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி" - வாட்சனின் இன்ஸ்டாகிராம் பதிவு!
"அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி" - வாட்சனின் இன்ஸ்டாகிராம் பதிவு!
"என்னுடைய ஆட்டத்தை மேம்படுத்திக்கொள்ள ஐபிஎல் உதவியது" - ஜானி பாரிஸ்ட்டோ
"என்னுடைய ஆட்டத்தை மேம்படுத்திக்கொள்ள ஐபிஎல் உதவியது" - ஜானி பாரிஸ்ட்டோ
ஆறு தையல்... ரத்தம் சொட்ட ஆடிய வாட்சனுக்காக உருகிய ஹர்பஜன்!
ஆறு தையல்... ரத்தம் சொட்ட ஆடிய வாட்சனுக்காக உருகிய ஹர்பஜன்!
'' தோனி தவறாக முடிவெடுப்பார். ஆனால், அவரிடம் சொல்ல முடியாது'' சர்ச்சையை ஏற்படுத்தும் குல்தீப் கருத்து!!
Advertisement