''இனிதான் சிறப்பான சம்பவம் காத்திருக்கு'' பும்ராவை புகழ்ந்த சச்சின்!

Updated: 13 May 2019 12:56 IST

பும்ராவின் பந்துவீச்சை பெரிதும் பாராட்டிய சச்சின், உலகக் கோப்பையில் இன்னும் சிறப்பாக செயல்படுவார் என்று கூறினார்.

Sachin Tendulkar Praises Jasprit Bumrah After Mumbai Indians
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஜூன் 5ம் தேதி தென் ஆப்ரிக்காவை எதிர்கொள்கிறது. © AFP

மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி, நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. ஓய்வுக்கு பிறகு, மும்பை அணிக்கு ஆலோசகராக இருக்கும் சச்சின் டெண்டுல்கர், இறுதி போட்டிக்கு பிறகு "நான் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றேன்" என்று கூறினார். மேலும், பும்ராவின் பந்துவீச்சை பெரிதும் பாராட்டிய சச்சின், உலகக் கோப்பையில் இன்னும் சிறப்பாக செயல்படுவார் என்று கூறினார்.

"பும்ரா அருமையாக செயல்பட்டார்" என்று சச்சின் டெண்டுல்கர் யுவராஜிடம் வீடியோ பேட்டியில் கூறினார். இந்த வீடியோ ஐபிஎல் ட்விட்டர் பக்கத்தில் வெளியானது.

"மும்பை அணிக்கு ஐபிஎல் ஏலத்தில் கடைசியாக கொண்டுவரப்பட்ட வீரர் யார், எது அவரை சிறந்த பந்துவீச்சாளர் ஆக்கியது?" என சச்சின் யுவராஜிடம் கேட்டார்.

யுவராஜ் சச்சினிடம், "அவரின் ஃபார்ம் முதலில் மோசமாக இருந்தது என்று நினைக்கிறேன். ஆனால், இப்போது அவரின் பந்துவீச்சு நான் இதுவரை பார்த்திடாத அளவிற்கு உள்ளது" என்றார்.

யுவராஜ் சொன்னத்தை ஏற்றுக்கொண்ட சச்சின், " உலகிலேயே சிறந்த பந்துவீச்சாளர் பும்ரா தான். ஆனால், சிறப்பான சம்பவங்கள் இனிதான் நடக்கவுள்ளது" என்றார்.

மே 30ம் தேதி துவங்கவுள்ள உலகக் கோப்பைக்கு இந்திய அணி தன்னை தயார்படுத்தி கொள்ள வேண்டியுள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஜூன் 5ம் தேதி தென் ஆப்ரிக்காவை எதிர்கொள்கிறது.

உலகக் கோப்பைக்கு முன்னதாக பயிற்சி ஆட்டம் போல் மே 25 மற்றும் மே 28, பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளை எதிர்கொள்கிறது இந்திய அணி.

இந்தியா 1983 மற்றும் 2011 ஆகிய இரண்டு ஆண்டுகள் உலகக் கோப்பையை வென்றுள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • நான்காவது முறையாக மும்பை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது
  • பும்ராவின் பந்துவீச்சை பெரிதும் பாராட்டினார் சச்சின் டெண்டுல்கர்
  • உலகக் கோப்பையில் இந்திய அணி ஜூன் 5ம் தேதி தென் ஆப்ரிக்காவை எதிர்கொள்கிறது
தொடர்புடைய கட்டுரைகள்
இரண்டு நாட்கள் முன்பே ரக்‌ஷாபந்தன் கொண்டாடிய பும்ரா?
இரண்டு நாட்கள் முன்பே ரக்‌ஷாபந்தன் கொண்டாடிய பும்ரா?
"போட்டியின் வெற்றியாளர்" மலிங்காவுக்கு ரோஹித் ஷர்மா செய்த ட்விட்!
"போட்டியின் வெற்றியாளர்" மலிங்காவுக்கு ரோஹித் ஷர்மா செய்த ட்விட்!
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம்: அனைத்து விதமான போட்டிகளுக்கு கோலி தான் கேப்டன்!
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம்: அனைத்து விதமான போட்டிகளுக்கு கோலி தான் கேப்டன்!
வெஸ்ட் இண்டிஸ் எதிரான தொடரின் இந்தியா அணியில் தோனிக்கு இடமுண்டா?
வெஸ்ட் இண்டிஸ் எதிரான தொடரின் இந்தியா அணியில் தோனிக்கு இடமுண்டா?
"எங்களிடம் இருந்த அனைத்தையும் நாங்கள் கொடுத்தோம்" - ரசிகர்களுக்கு ட்விட் செய்த பும்ரா!
"எங்களிடம் இருந்த அனைத்தையும் நாங்கள் கொடுத்தோம்" - ரசிகர்களுக்கு ட்விட் செய்த பும்ரா!
Advertisement