''ஆர்சிபியை கலாய்ச்சா கொன்றுவோம்''- வர்ணனையாளரை மிரட்டிய ஆர்சிபி ரசிகர்!

Updated: 05 April 2019 12:35 IST

முன்னாள் வீரர் சைமன் டவுல் ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். அவரது ஃபேஸ்புக் பக்கத்துக்கு ஒரு கொலை மிரட்டல் வந்துள்ளது.

Simon Doull Gets
நான்கு ஆட்டங்களில் ஆடி இன்னும் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் உள்ளது ஆர்சிபி. © BCCI/IPL

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஆட்டத்தின் வெற்றி மூலம் அதிக ரசிகர்களை வெல்லவில்லையென்றாலும், அதிக ரசிகர்களை வென்றுள்ளது. முன்னாள் வீரர் சைமன் டவுல் ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். அவரது ஃபேஸ்புக் பக்கத்துக்கு ஒரு கொலை மிரட்டல் வந்துள்ளது. அதில் "ஆர்சிபி பற்றி குறைக் கூறினால் கொன்றுவிடுவேன்" என்று அந்த நபர் மிரட்டியுள்ளார். அதனை டவுல் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தார். 

"நான் இந்த மிரட்டலுக்காக என்ன செய்தேன் என்று தெரியவில்லை. இது வெறும் கிரிக்கெட் நண்பா. அமைதியாக இருங்கள்" என்று பதில் கூறியிருந்தார். 

இதற்கு நியூசிலாந்தின் முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் "அவர் சொன்னது சரிதான்" என்று நக்கலாக ட்விட் செய்திருந்தார்.

dh42fhoo

Photo Credit: Twitter

சில ரசிகர்கள் ட்விட்டரில் சைமன் டவுலுக்கு ஆறுதலாக தங்களது கருத்தை பதிவு செய்தனர். இது போன்ற செய்திகளை தவிருங்கள். உங்கள் வேலையை மகிழ்ச்சியாக பாருங்கள் என்றனர்.

அந்த ரசிகர் எந்த சம்பவத்தையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. ஆனால் ஆர்சிபியின் மோசமான தோல்வியை விமர்சித்தது காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

நான்கு ஆட்டங்களில் ஆடி இன்னும் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் உள்ளது ஆர்சிபி.

Comments
ஹைலைட்ஸ்
  • நான்கு ஆட்டங்களில் ஆடி, ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை ஆர்சிபி
  • சைமன் டவுல் ஃபேஸ்புக் பக்கத்துக்கு ஒரு கொலை மிரட்டல் வந்துள்ளது
  • "இது வெறும் கிரிக்கெட் நண்பா.. அமைதியாக இருங்கள்" - டவுல்
தொடர்புடைய கட்டுரைகள்
கோலி மற்றும் ஆர்சிபியை விமர்சித்த விஜய் மல்லையா
கோலி மற்றும் ஆர்சிபியை விமர்சித்த விஜய் மல்லையா
கோலியுடன் வாக்குவாதம் செய்த நடுவர் மீது விசாரணை!
கோலியுடன் வாக்குவாதம் செய்த நடுவர் மீது விசாரணை!
கோலியின் டி20 கேப்டன்ஸி பற்றி கூறும் டேனியல் வெட்டோரி
கோலியின் டி20 கேப்டன்ஸி பற்றி கூறும் டேனியல் வெட்டோரி
ஆர்சிபியிடம் தோற்ற சன் ரைசர்ஸை மீம்ஸ்களால் வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!
ஆர்சிபியிடம் தோற்ற சன் ரைசர்ஸை மீம்ஸ்களால் வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!
ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா ஐதராபாத்? - பெங்களூருவுடன் பலப்பரீட்சை!!
ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா ஐதராபாத்? - பெங்களூருவுடன் பலப்பரீட்சை!!
Advertisement