அவுட் இல்லை என்ற ஷ்ரேயாஸ்; கேப்டன் மனதை மாற்றி அவுட் வாங்கி தந்த ரிஷப் பன்ட்!

Updated: 09 May 2019 11:45 IST

ஷ்ரேயாஸ், நடுவர், பன்ட் பேசிக்கொண்டிருந்தபொது தீபக் ஹூடா செய்வதறியாது நின்று கொண்டிருந்தார். ஷ்ரேயாஸ் முதலில் ஹூடாவை அனுமதித்து க்ரீஸை விட்டு செல்ல வேண்டாம் என்றுதான் கூறினார். 

Shreyas Iyer Agrees To Withdraw Run Out Appeal After Mid-Pitch Collision, Rishabh Pant Intervenes. Watch
ஹூடா, ஹீமோபால் மீது மோதி நிலை தடுமாறி பிட்ச்சில் விழுந்தார். © BCCI/IPL

ஐபிஎல் 2019 எலிமினேட்டர் சுற்று போட்டி நேற்று டெல்லி , ஹைதராபாத் அணிகளுக்கு இடையே ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன் தீபக் ஹூடாவின்  ரன் அவுட் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆட்டத்தின் 20வது கீமோ பால் வீசினார். அப்போது பந்து கீப்பரிடம் சென்றது. அதனை பன்ட் எதிர்முனைக்கு வீசி எறிந்தார். ஹூடா, ஹீமோபால் மீது மோதி நிலை தடுமாறி பிட்ச்சில் விழுந்தார். அதே நேரத்தில் பன்ட் எறிந்த பந்து ஸ்டெம்ப்பை தாக்கியது. இதனால் ஹூடா அவுட் ஆனார்.  

இது முறைப்படி அவுட் என்றாலும், நடுவர்கள் இந்த அபீலை விலக்கி கொள்கிறீர்களா என டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸிடம் கேட்க அதனை அவரும் ஏற்றுக்கொண்டார். ஆனால், கீப்பர் பன்ட் வேகமாக வந்து நடுவர் மற்றும் கேப்டன் ஷ்ரேயாஸிடம் விலக்கி பேட்ஸ்மேனை திரும்ப அழைக்கும் முடிவை மறுத்து அவுட் என அறிவிக்க வலியுறுத்தினார். 

நடுவர் ரவி அந்த பந்தை வைடாக அறிவித்ததும் ரன் ஓடும் போது இந்த நிகழ்வு நடந்தது. இருவரும் பிட்சில் நிலை குலைந்தனர். ஆனாலும் பன்ட் எறிந்த த்ரோ சரியாக ஸ்டெம்பை தாக்கியது. 

ஷ்ரேயாஸ், நடுவர், பன்ட் பேசிக்கொண்டிருந்தபொது தீபக் ஹூடா செய்வதறியாது நின்று கொண்டிருந்தார். ஷ்ரேயாஸ் முதலில் ஹூடாவை அனுமதித்து க்ரீஸை விட்டு செல்ல வேண்டாம் என்றுதான் கூறினார். 

பின்னர், பன்ட் வந்து விக்கெட் நியாயமானதுதான் என்றதும், ஷ்ரேயாஸ் தனது முடிவை மாற்றிக்கொண்டு ஹூடாவை அவுட் என அறிவிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டார்.

Comments
ஹைலைட்ஸ்
  • சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன் தீபக் ஹூடாவின் ரன் அவுட் சர்ச்சையை ஏற்படுத்தியது
  • ஷ்ரேயாஸின் செயலை நடுவர்கள் பாராட்டினர்
  • பன்ட் விக்கெட் நியாயமானது என்றதும், ஷ்ரேயாஸ் தன் முடிவை மாற்றிக்கொண்டார்
தொடர்புடைய கட்டுரைகள்
சாஹாவின் சிறப்பான விக்கெட் கீப்பிங்... பன்ட்டை காலாய்த்த ரசிகர்கள்!
சாஹாவின் சிறப்பான விக்கெட் கீப்பிங்... பன்ட்டை காலாய்த்த ரசிகர்கள்!
"நான் இங்கு தபேலா வாசிக்கவா இருக்கேன்?" - பன்ட் பிரச்னை குறித்து ரவி சாஸ்திரி!
"நான் இங்கு தபேலா வாசிக்கவா இருக்கேன்?" - பன்ட் பிரச்னை குறித்து ரவி சாஸ்திரி!
பன்ட்டை ஆதரித்த யுவராஜ் சிங்... அவருக்கு பதிலளித்த ஆஸி. வீரர் டீன் ஜோன்ஸ்
பன்ட்டை ஆதரித்த யுவராஜ் சிங்... அவருக்கு பதிலளித்த ஆஸி. வீரர் டீன் ஜோன்ஸ்
"ரிஷப் பன்ட் குறித்து மீடியாவில் கருத்து சொல்வதை நிறுத்துங்கள்" - யுவராஜ் சிங்!
"ரிஷப் பன்ட் குறித்து மீடியாவில் கருத்து சொல்வதை நிறுத்துங்கள்" - யுவராஜ் சிங்!
"4வது இடத்தில் யார் ஆட வேண்டும்?" - அமிதாப் பச்சனைப் போல் கேட்ட கவாஸ்கர்!
"4வது இடத்தில் யார் ஆட வேண்டும்?" - அமிதாப் பச்சனைப் போல் கேட்ட கவாஸ்கர்!
Advertisement