Listen to the latest songs, only on JioSaavn.com
 

ரஸல், ஐபிஎல் தொடரின் 'பாகுபலி' என புகழ்ந்த ஷாருக்!

Updated: 06 April 2019 15:00 IST

இந்த அதிரடி ஆட்டத்தை கொல்கத்தா அணி உரிமையாளரும், பாலிவுட் நடிகருமான ஷாருக் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஸலை பாகுபலியாக சித்தரித்து வந்த புகைப்படத்தை பகிர்ந்தார்.

RCB vs KKR: Shah Rukh Khan Salutes Andre Russell Heroics With Baahubali Tribute
3 பந்தில் 48 ரன்களை அடித்து 206 ரன்னை சேஸ் செய்ய உதவினார் ஆண்ட்ரு ரஸல். © BCCI/IPL

ஆண்ட்ரு ரஸல், தனி ஒருவனாக கொல்கத்தாவை வெற்றிப்பாதைக்கு நேற்றைய போட்டியில் அழைத்து சென்றார். ஐபிஎல் 2019ல் ஒரு போட்டியை கூட வெல்ல முடியாத ஆர்சிபி மீண்டும் கொல்கத்தாவிடம் வீழ்ந்தது. அதற்கு ரஸல் பெரும் உதவியாக இருந்தார். 13 பந்தில் 48 ரன்களை அடித்து 206 ரன்னை சேஸ் செய்ய உதவினார்.  இந்த அதிரடி ஆட்டத்தை கொல்கத்தா அணி உரிமையாளரும், பாலிவுட் நடிகருமான ஷாருக் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஸலை பாகுபலியாக சித்தரித்து வந்த புகைப்படத்தை பகிர்ந்தார்.

அணியை பாராட்டிய ஷாருக்கான் ரஸலுக்கு சிறப்பு வாழ்த்துகளை தெரிவித்தார்.

ரஸலின் அதிரடியால் ஆட்டத்தை வென்ற கொல்கத்தா புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை பிடித்தது.

ரஸல் களமிறங்கும் போது கொல்கத்தா வெற்றி பெற 26 பந்தில் 68 ரன்கள் தேவை என்றிருந்தது.

ரஸலின் அதிரடிக்கு பதிலளிக்க முடியாமல் ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் திணறினர். தனது இன்னிங்ஸில் ஒரு பவுண்டரி மற்றும் ஏழு சிக்ஸர்களை விளாசினார்.

முன்னதாக கோலி 84, டிவில்லியர்ஸ் 63 அதிரடியில் ஆர்சிபி 205 ரன்களை குவித்தது. ரஸலின் அதிரடியால் ஆட்டத்தை இழந்தது ஆர்சிபி. ஆர்சிபி தனது அடுத்த போட்டியில் டெல்லியை சந்திக்கிறது

Comments
ஹைலைட்ஸ்
  • ரஸலை பாகுபலியாக சித்தரித்து வந்த புகைப்படத்தை பகிர்ந்தார் ஷாருக் கான்
  • 13 பந்தில் 48 ரன்களை அடித்து 206 ரன்னை சேஸ் செய்ய உதவினார் ரஸல்
  • கொல்கத்தா, புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை பிடித்தது
தொடர்புடைய கட்டுரைகள்
முதல் குழந்தையை எதிர்பார்க்கும் ஆன்ரே ரஸல் தம்பதியினர்!
முதல் குழந்தையை எதிர்பார்க்கும் ஆன்ரே ரஸல் தம்பதியினர்!
‘யுவராஜ் ரிட்டர்ன்ஸ்!’- ஓய்வுக்குப் பின்னர் கிரிக்கெட்டுக்கு கம்-பேக் கொடுக்கிறார்
‘யுவராஜ் ரிட்டர்ன்ஸ்!’- ஓய்வுக்குப் பின்னர் கிரிக்கெட்டுக்கு கம்-பேக் கொடுக்கிறார்
உலகக்கோப்பை தொடரில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ரஸல் விலகல்!!
உலகக்கோப்பை தொடரில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ரஸல் விலகல்!!
கொல்கத்தாவை வென்று ப்ளே ஆஃபை உறுதி செய்யுமா மும்பை!
கொல்கத்தாவை வென்று ப்ளே ஆஃபை உறுதி செய்யுமா மும்பை!
2019 உலகக் கோப்பைக்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு!
2019 உலகக் கோப்பைக்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு!
Advertisement