கொல்கத்தா தோல்விக்கு பிறகு கங்குலிக்கு ஸ்பெஷல் மெசேஜ் அனுப்பிய ஷாருக் கான்!

Updated: 13 April 2019 14:55 IST

கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, கொல்கத்தா அணியில் பங்காற்றியுள்ளார். சவுரவ் கங்குலி இப்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஆலோசகராக உள்ளார்.

KKR vs DC: Shah Rukh Khan
கொல்கத்தா அணி தோல்வியுற்றதில் உள்ள ஒரே நல்ல விஷயம், "வெற்றி பெற்ற அணியில் தாதா இருப்பது மட்டுமே" என்று பதிவிட்டார் ஷாருக் கான். © BCCI/IPL

டெல்லி கேப்பிட்டல்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எடன் கார்டன்ஸ் மைதானத்தில் வீழ்த்தியது. கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, கொல்கத்தா அணியில் பங்காற்றியுள்ளார். சவுரவ் கங்குலி இப்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஆலோசகராக உள்ளார். கொல்கத்தா உரிமையாளர் ஷாருக் கான், அந்த அணியின் முன்னாள் கேப்டனான கங்குலிக்காக ட்விட் செய்தார். அதில், கொல்கத்தா அணி தோல்வியுற்றதில் உள்ள ஒரே நல்ல விஷயம், "வெற்றி பெற்ற அணியில் தாதா இருப்பது மட்டுமே" என்று பதிவிட்டிருந்தார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் மீது வருத்தம் தெரிவித்தார் ஷாருக் கான்.

சும்பன் கில் 39 பந்தில் 65 ரன்களும், ரஸல் 21 பந்தில் 45 ரன்களும் எடுத்தனர். இதனால் கொல்கத்தா 171 ரன்கள் எட்டியது. 

இலக்கை நோக்கி ஆட்டத்தை தொடங்கியது டெல்லி கேப்பிட்டல். ஷிகர் தவான் 63 பந்தில் 97 ரன்கள் எடுத்தார். அதில் 11 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடங்கும். பன்ட் 31 பந்தில் 46 ரன்கள் எடுத்து இலக்கை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

கொல்கத்தா அணியின் பந்துவீச்சு டெல்லி அணிக்கு சாதகமாக அமைந்தது.

நித்திஷ் ராணா, இரண்டு ஓவர்களில் ஒரு விக்கெட் வீழ்த்தி, 12 ரன்கள் கொடுத்தார். குல்தீப் யாதவ் விக்கெட் எதுவும் வீழ்த்தாமல்  நான்கு ஓவர்களில் 28 ரன்கள் கொடுத்தார். பந்துவீச்சாளர்களின் சொதப்பல் கொல்கத்தா தோல்வியடைய காரணமாக அமைந்தது.

புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சென்னை அணியை வரும் ஞாயறன்று எடன் கார்டன்ஸில் சந்திக்கிறது கொல்கத்தா அணி. இதில் கேகேஆர் வெற்றி பெறும் என்று ஷாருக் கான் நம்பிக்கை தெரிவிதுள்ளார். 

Comments
ஹைலைட்ஸ்
  • வெற்றி பெற்ற அணியில் தாதா இருப்பதுதான் ஒரே நல்ல விஷயம்: ஹாருக் கான்
  • கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்கள் மீது வருத்தம் தெரிவித்தார் ஷாருக்
  • டெல்லி கேப்பிட்டல் 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வென்றது
தொடர்புடைய கட்டுரைகள்
"இந்திய அணியில் தோனி தன்னை திணித்துகொள்ள மாட்டார்" - ரவி சாஸ்திரி!
"இந்திய அணியில் தோனி தன்னை திணித்துகொள்ள மாட்டார்" - ரவி சாஸ்திரி!
"தொடரில் ஒரு பிங்க் பந்து டெஸ்ட்டாவது நடத்தபட வேண்டும்" - சவுரவ் கங்குலி
"தொடரில் ஒரு பிங்க் பந்து டெஸ்ட்டாவது நடத்தபட வேண்டும்" - சவுரவ் கங்குலி
"டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து தோனியிடம் கேளுங்கள்" - சவுரவ் கங்குலி
"டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து தோனியிடம் கேளுங்கள்" - சவுரவ் கங்குலி
மகளுடன் வேடிக்கையான உரையாடலில் ஈடுபட்ட சவுரவ் கங்குலி!
மகளுடன் வேடிக்கையான உரையாடலில் ஈடுபட்ட சவுரவ் கங்குலி!
"வலிமையான நபர்கள் தேவை" - தேர்வுக்குழுவினரை சாடிய ஹர்பஜன் சிங்!
"வலிமையான நபர்கள் தேவை" - தேர்வுக்குழுவினரை சாடிய ஹர்பஜன் சிங்!
Advertisement