சச்சின், லட்சுமணனுக்கு நோட்டிஸ் வழங்கிய பிசிசிஐ ஆம்பட்ஸ்மன்

Updated: 25 April 2019 13:13 IST

"அவர்கள் கிரிக்கெட் ஆலோசனை குழுவிலும், ஐபிஎல் அணிக்கு ஆலோசகராகவும் எப்படி இருக்க முடியும்" என்று கேள்வி எழுப்பியுள்ளார் டி.கே.ஜெயின்.

Sachin Tendulkar, VVS Laxman Served Notice Over "Conflict Of Interest"
சச்சின் மும்பை அணிக்கும், லட்சுமணன் ஹைதராபாத் அணிக்கும் ஆலோசகர்களாக உள்ளனர்.  © AFP

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விவிஎஸ் லட்சுமணனுக்கு பிசிசிஐ நோட்டிஸ் அனுப்பியுள்ளது. ஆம்பட்ஸ்மனின் தலைவர் டி.கே.ஜெயின் இவர்களுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளார். காரணம், "அவர்கள் கிரிக்கெட் ஆலோசனை குழுவிலும், ஐபிஎல் அணிக்கு ஆலோசகராகவும் எப்படி இருக்க முடியும்" என்று கேள்வி எழுப்பியுள்ளார். சச்சின் மும்பை அணிக்கும், லட்சுமணன் ஹைதராபாத் அணிக்கும் ஆலோசகர்களாக உள்ளனர். 

இது ஓம்பட்ஸ்மன் விசாரிக்கும்  மூன்றாவது வழக்காகும். ஏற்கெனவே, முன்னாள் கேப்டன் கங்குலி மீது மூன்று பதவிகளை வகிக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. பெங்கால் கிரிக்கெட் வாரிய தலைவர், டெல்லி கேப்பிட்டல் ஆலோசகர், கிரிக்கெட் ஆலோசனைக்குழு உறுப்பினர் என மூன்று பதவிகளை கங்குலி வகிக்கிறார் என்ற சாட்டு எழுந்தது. 

கங்குலி, சச்சின், லட்சுமணன் இணைந்து தான் 2017ல் ரவி சாஸ்திரியை பயிற்சியாளராக நியமித்தனர். பிசிசிஐ அதிகாரிகளின் தகவல்படி சச்சின் மும்பை அணியிடமிருந்து எந்த பணத்தையும் சம்பளமாக பெறவில்லை. பணம் ஏதும் வாங்காமல் தான் மும்பை அணிக்கு ஆலோசனை வழங்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த மூவரும் கிரிக்கெட் ஆலோசனை குழுவுக்கு எந்த நிதி பயனும் இலாமல் உதவி வருவதாக கூறப்படுகிறது. 

ஏப்ரல் 28ம் தேதிக்குள் சச்சின், லட்சுமணன் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

இந்த குற்றச்சாட்டை மத்திய பிரதேச கிரிக்கெட் வாரிய உறுப்பினர் சஞ்சீவ் குப்தா பதிவு செய்துள்ளார். 

சட்டப்பிரிவு 39ன் படி இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கு உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. 

சச்சின் தனது 46வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருந்ததாலும், லட்சுமணனை தொடர்பு கொள்ள முடியாததாலும் இது குறித்த அவர்களது கருத்துக்களை பெற முடியவில்லை.

Comments
ஹைலைட்ஸ்
  • சச்சின், விவிஎஸ் லட்சுமணனுக்கு பிசிசிஐ நோட்டிஸ் அனுப்பியுள்ளது
  • கங்குலி மீது 'மூன்று பதவிகளை வகிக்கிறார்' என்ற குற்றச்சாட்டு எழுந்தது
  • ஏப்ரல் 28ம் தேதிக்குள் சச்சின், லட்சுமணன் பதிலளிக்க வேண்டும்
தொடர்புடைய கட்டுரைகள்
"சவுரவ் கங்குலி டெஸ்ட் கிரிக்கெட்டை இறக்க விட மாட்டார்" - சோயிப் அக்தர்
"சவுரவ் கங்குலி டெஸ்ட் கிரிக்கெட்டை இறக்க விட மாட்டார்" - சோயிப் அக்தர்
ஐபிஎல் திறப்பு விழாவை நடத்தப்போவதில்லை என பிசிசிஐ அறிவிப்பு: தகவல்
ஐபிஎல் திறப்பு விழாவை நடத்தப்போவதில்லை என பிசிசிஐ அறிவிப்பு: தகவல்
பெங்களூரு ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துகொண்ட சவுரவ் கங்குலி!
பெங்களூரு ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துகொண்ட சவுரவ் கங்குலி!
"கங்குலி பிசிசிஐ தலைவராவார் என்று எனக்கு முன்பே தெரியும்" - வீரேந்தர் சேவாக்
"கங்குலி பிசிசிஐ தலைவராவார் என்று எனக்கு முன்பே தெரியும்" - வீரேந்தர் சேவாக்
பிசிசிஐ தலைவராகும் போது கங்குலி அணிந்திருந்த பிளேஸரில் என்ன ஸ்பெஷல்?
பிசிசிஐ தலைவராகும் போது கங்குலி அணிந்திருந்த பிளேஸரில் என்ன ஸ்பெஷல்?
Advertisement