பரபரப்பான போட்டியில் படுத்துகொண்டே சிக்ஸர் அடித்த ஜடேஜா

Updated: 12 April 2019 13:46 IST

ராஜஸ்தான் ராயலஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின் கடைசி ஓவரில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்றன.

RR vs CSK: Ben Stokes, Ravindra Jadeja Both Hit The Deck. See Who Comes Out On Top
அபாரமாக ஆடி அரைசதமடித்த தோனி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். © BCCI/IPL

ராஜஸ்தான் ராயலஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின் கடைசி ஓவரில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்றன. கடைசி ஓவரின் நான்காவது பந்தில் நோபால் சர்ச்சைக்கு தோனி களத்துக்குள் வந்து கோபமைடையுமளவவுக்கான நிகழ்வுகள் நடைபெற்றன. அந்த ஓவரின் முதல் பந்தில் ஜடேஜா ஒரு அபாரமான சிக்ஸரை விளாசி சென்னை அணியின் வெற்றியை எளிதாக்கினார்.

ஸ்டோக்ஸ் நன்றாக ஆஃப் சைடு வொயிடாக வீசிய முதல் பந்தை நன்கு விலகி சிக்ஸருக்கு விளாசினார் ஜடேஜா. விளாசிய அடுத்த நொடியே தடுமாறி கீழே விழுந்தார். அதேபோல பந்து வீசிய ஸ்டோக்ஸும் கிழே விழுந்தார். 

இந்த சிக்ஸர் மூலம் சென்னையின் வெற்றி எளிதானது. கடைசி பந்தில் சாண்ட்னர் சிக்ஸரடித்து அணியை வெற்றி பெற வைத்தார். 

அபாரமாக ஆடி அரைசதமடித்த தோனி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

மேலும், தோனி கேப்டனாக ஐபிஎல் தொடரில் தனது 100வது வெற்றியை பதிவு செய்தார். அதிக போட்டிகளை வெல்லும் முதல் கேப்டன் தோனிதான். இவருக்கு அடுத்த இடத்தில் 71 வெற்றிகளுடன் கம்பீர் உள்ளார்.

சென்னை அணி இந்த தொடரில் 7 போட்டிகளில் 6 போட்டிகளை வென்று 12  புள்ளிகளை பெற்றுள்ளது. 

Comments
ஹைலைட்ஸ்
  • அதிக ஐபிஎல் போட்டிகளை வெல்லும் முதல் கேப்டன் தோனிதான்
  • விளாசிய அடுத்த நொடியே தடுமாறி கீழே விழுந்தார் ஜடேஜா
  • பந்து வீசிய ஸ்டோக்ஸும் கீழே விழுந்தார்
தொடர்புடைய கட்டுரைகள்
"ஜடேஜாவின் பேட்டிங் முன்னேற்றம் இந்திய அணிக்கு முக்கியமானது" - சவுரவ் கங்குலி
"ஜடேஜாவின் பேட்டிங் முன்னேற்றம் இந்திய அணிக்கு முக்கியமானது" - சவுரவ் கங்குலி
3வது ஒருநாள் போட்டிக்கு முன் வீரர்களுடன் நேரம் கழித்த விராட் கோலி!
3வது ஒருநாள் போட்டிக்கு முன் வீரர்களுடன் நேரம் கழித்த விராட் கோலி!
ஜடேஜாவின் சர்ச்சைக்குரிய ரன் அவுட்... கொந்தளித்த விராட் கோலி!
ஜடேஜாவின் சர்ச்சைக்குரிய ரன் அவுட்... கொந்தளித்த விராட் கோலி!
India vs Ban 1st Test Highlights - வங்கதேசத்தைத் தவிடுபொடியாக்கி இந்தியா வெற்றி!
India vs Ban 1st Test Highlights - வங்கதேசத்தைத் தவிடுபொடியாக்கி இந்தியா வெற்றி!
சஞ்சய் மஞ்ச்ரேகரின் "Being A Parent" ட்விட்டுக்கு எழுந்த விமர்சனம்!
சஞ்சய் மஞ்ச்ரேகரின் "Being A Parent" ட்விட்டுக்கு எழுந்த விமர்சனம்!
Advertisement