ஆர்சிபி தொடர்ந்து 4வது தோல்வி... நெருக்கடியில் கோலி!

Updated: 03 April 2019 17:05 IST

2019 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அது ஆடிய நான்கு போட்டிகளிலும் தோல்வியை தழுவியது.

Virat Kohli Feels The Heat As RCB Suffer Fourth Straight Loss
ஆர்சிபி இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் பட்டத்தை வென்றதில்லை. © BCCI/IPL

2019 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அது ஆடிய நான்கு போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. நேற்று ஆடிய தனது நான்காவது போட்டியில் ராஜஸ்தானிடம் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பட்லர் 59 ரன்களை குவித்து ஆர்சிபிக்கு தலைவலியாக விளங்கினார். இந்த தொடரில் மிகவும் பரிதாபமான நிலையில் ஆர்சிபி 8வது இடத்தில் உள்ளது. ரசிகர்கள் இந்த அணியின் கேப்டனும், இந்திய கேப்டனுமான கோலியை விமர்சித்து வருகின்றனர். 

கோலி, நேற்றைய போட்டியில் ஒரு கேட்ச்சை தவறவிட்டார். அதோடு நான்கு போட்டிகளிலும் சேர்த்து 78 ரன்களை மட்டுமே குவித்துள்ளார். 

போட்டி முடிந்து கோலி கூறும் போது ''இன்னும் அணி சிறப்பான துவக்கத்தை அளிக்கவில்லை. ஆனால் அணி சீக்கிரமே மீண்டு வெற்றிப்பாதைக்கு திரும்பும்" என்று கூறியுள்ளார். 

ஆர்சிபி இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் பட்டத்தை வென்றதில்லை. கடைசி இரண்டு சீசன்களில் 8 மற்றும் 6வது இடத்தை பிடித்தது. இன்னும் சொல்லப்போனால் கோலி, ஏபிடி மற்றும் கெயில் ஆகியோர் அணியில் இருந்தே இந்த நிலை.

இந்த தொடரிலும் அதிர்ஷ்டம் கைகொடுக்கவில்லை என்றுதான் ஆர்சிபி பற்றி கூற வேண்டும் . மும்பைக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தை நோபால் வழங்கவில்லை. நடுவரின் தவரால் ஆர்சிபி தோற்றது. 

2019 சீசனில் இன்னும் ஆர்சிபிக்கு 10 போட்டிகள் உள்ள நிலையில் அணி புள்ளிப்பட்டியலில் முன்னேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • பெங்களூரு அணி அது ஆடிய நான்கு போட்டிகளிலும் தோல்வியை தழுவியது
  • 2019ம் ஆண்டு ஐபிஎல்லில் ஆர்சிபி 8வது இடத்தில் உள்ளது
  • நான்கு போட்டிகளிலும் சேர்த்து 78 ரன்களை மட்டுமே குவித்துள்ளார் கோலி
தொடர்புடைய கட்டுரைகள்
ராகுல் டிராவிட்டுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த விராட் கோலி!
ராகுல் டிராவிட்டுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த விராட் கோலி!
"எல்லாமே தவறாகிப்போனது" - இந்திய விமானத்தை தவறவிட்ட டு பிளசிஸ்
"எல்லாமே தவறாகிப்போனது" - இந்திய விமானத்தை தவறவிட்ட டு பிளசிஸ்
"கோலி சிறந்த கேப்டனாக ரோஹித் மற்றும் தோனி தான் காரணம்" - கவுதம் கம்பீர்!
"கோலி சிறந்த கேப்டனாக ரோஹித் மற்றும் தோனி தான் காரணம்" - கவுதம் கம்பீர்!
2வது டி20: "போட்டிக்கு முன்பு உந்துதல் கொடுத்த மஞ்ச்ரேகருக்கு நன்றி" - கோலி!
2வது டி20: "போட்டிக்கு முன்பு உந்துதல் கொடுத்த மஞ்ச்ரேகருக்கு நன்றி" - கோலி!
டேவிட் மில்லரின் ஒற்றை கை கேட்ச்சைப் பார்த்த கோலியின் வைரல் ரியாக்‌ஷன்!
டேவிட் மில்லரின் ஒற்றை கை கேட்ச்சைப் பார்த்த கோலியின் வைரல் ரியாக்‌ஷன்!
Advertisement