ஐபிஎல் கேம் சேஞ்சர் பன்ட்டை உலகக் கோப்பை அணியில் சேர்க்காதது ஏன்?

Updated: 10 May 2019 14:52 IST

ரிஷப் பன்ட் எலிமினேட்டர் போட்டியில் 5 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகளுடன் டெல்லி அணியை வெற்றி பெற வைத்தார்.

Rishabh Pant
பன்ட் கடைசி கட்டத்தில் 21 பந்தில் 49 ரன்கள் குவித்து 163 என்ற இலக்கை எட்ட உதவினார். © AFP

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் டெல்லி வீரர்கள் பன்ட் மற்றும் ப்ரித்வி ஷாவின் ஆட்டம் டெல்லி அணியை குவாலிஃபையர் 2வுக்கு தகுதி பெற வைத்தது. ஷா 56 ரன்களை எடுத்தார். அதேசமயம் பன்ட் கடைசி கட்டத்தில் 21 பந்தில் 49 ரன்கள் குவித்து 163 என்ற இலக்கை எட்ட உதவினார். இந்த ஆட்டத்துக்கு பிறகு ட்விட்டரில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பன்ட்டை ஏன் 2019 உலகக் கோப்பை அணியில் சேர்க்கவில்லை என்று கேள்வி எழுப்பினர். இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாஹன், பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் ஆகியோரும் ரிஷப் பன்ட் இடம்பெறாததற்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.

ரிஷப் பன்ட் எலிமினேட்டர் போட்டியில் 5 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகளுடன் டெல்லி அணியை வெற்றி பெற வைத்தார். இதுவரை 2019 ஐபிஎல் தொடரில் 15 போட்டிகளில் 450 ரன்களை 3 அரைசதங்களுடன் குவித்துள்ளார்.

"இதுபோன்ற விக்கெட்டுகளில் கடைசி வரை நின்று ஆட்டத்தை முடிக்க வேண்டும். நான் ஆட்டத்தை முடிக்கும் இடத்துக்கு அருகில் சென்றேன். அடுத்த ஆட்டத்தில் வெற்றிகரமாக முடிக்க முயற்சி செய்வேன்" என்றார் பன்ட்.

மேலும், "இந்த போட்டியில் நான் பந்தை அடித்து ஆட முயற்சிக்கவில்லை. பந்தை ஆடினாலே போதும் எளிதாக வெள்ள முடியும் என்று ஆடினேன்" என்றார்.

டெல்லி அணி தனது முதல் ப்ளே ஆஃப் வெற்றியை  பதிவு செய்து குவாலிஃபையர் 2வில் சென்னையை எதிர்கொள்ளவுள்ளது. 

சென்னையை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் டெல்லி, சென்னை ஆகிய அணிகளில் வெல்லும் அணியுடன் இறுதிப்போட்டியில் ஆடும்.

Comments
ஹைலைட்ஸ்
  • பன்ட் 2019 உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்படவில்லை
  • பன்ட் 21 பந்தில் 49 ரன்கள் குவித்து 163 என்ற இலக்கை எட்ட உதவினார்
  • ஐபிஎல் தொடரில் 15 போட்டிகளில் 450 ரன்களை 3 அரைசதங்களுடன் குவித்துள்ளார்
தொடர்புடைய கட்டுரைகள்
"தவானுக்கு ரிஷப் பன்ட் சிறந்த மாற்றாக இருப்பார்" - கெவின் பீட்டர்சன்
"தவானுக்கு ரிஷப் பன்ட் சிறந்த மாற்றாக இருப்பார்" - கெவின் பீட்டர்சன்
புது விளம்பரத்தில் ராப் பாடிய கோலி மற்றும் பன்ட்... கலாய்த்த நெட்டிசன்கள்!
புது விளம்பரத்தில் ராப் பாடிய கோலி மற்றும் பன்ட்... கலாய்த்த நெட்டிசன்கள்!
"ரிஷப் பன்ட்டுக்கு பதில் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்தது ஏன்" - காரணம் சொல்லும் கோலி
"ரிஷப் பன்ட்டுக்கு பதில் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்தது ஏன்" - காரணம் சொல்லும் கோலி
ரிஷப் பன்டுக்கு ஹிந்தி கற்றுக்கொடுக்கும் ஸிவா தோனி!
ரிஷப் பன்டுக்கு ஹிந்தி கற்றுக்கொடுக்கும் ஸிவா தோனி!
டெல்லியை வென்று IPL இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது சென்னை!!
டெல்லியை வென்று IPL இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது சென்னை!!
Advertisement