ஆர்சிபியிடம் தோற்ற சன் ரைசர்ஸை மீம்ஸ்களால் வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

Updated: 05 May 2019 13:15 IST

ராயல் சேலஞ்சர்ஸ் அணி சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தியதில் இருந்து, டிவிட்டரில் பல்வேறு மீம்ஸ்கள் வைரலாகி வருகிறது.

RCB vs SRH: Fan Comes Up With Brilliant
விராத் கோலியின் ஆர்சிபி அணி சன் ரைசர்ஸ் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. © BCCI/IPL

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் இந்த வாரத்துடன் முடிவடைகிறது. இதில், முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்டன.

இதனிடையே நேற்று நடந்த போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஆனால் ஐதராபாத் அணிக்கு இன்னும் வாய்ப்புகள் உள்ளன. இன்று கொல்கத்தா மற்றும் மும்பை அணி இடையே நடைபெறக்கூடிய போட்டியை பொறுத்து ஐதராபாத் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது முடிவாகும்.

பெங்களூர் அணி ஏற்கனவே வெளியேறிவிட்ட நிலையில், இந்த ஐபிஎல்லின் தனது கடைசி போட்டியை வெற்றியுடன் முடித்துள்ளது. இந்நிலையில், சன் ரைசர்ஸ் அணியை சமூகவலைதளங்களில், கடுமையாக விமர்சிக்கப்பட்டன.இதேபோல், பல மீம்ஸ்கள் சன் ரைசர்ஸ் தோல்வியை விமர்சிக்கும் வகையில் வைரலானது.

சிம்ரோன் (75) மற்றும் குர்கீத் சிங் (65) இருவரின் பார்ட்னர்சிப் பெங்களூர் அணி ரன்கள் குவிக்க பெரிதும் உதவியது. ஐதராபாத் அணி (175/7) ரன்கள் பெற்ற நிலையில், 4 விக்கெட் வித்தியாசத்தில் (178/6) ரன்கள் பெற்று பெங்களூர் அணி வெற்றி பெற்றது. பார்டனர்சிப்பில் பெங்களூர் அணி 144 ரன்கள் அடித்தது இந்த தொடரில் இதுவே முதல்முறையாகும். 2013 போட்டியில், கோலி மற்றும் டிவில்லர்ஸ் இதுபோன்ற பார்ட்னர்சிப்பில் இறங்கிய நிலையில், தற்போது ஆர்சிபி மறக்க முடியாத போட்டியை அளித்துள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஐபிஎல் ஏலத்தில் விற்கப்படாத யூசுப் பதானுக்கு இர்பான் பதானின் சிறப்பு செய்தி!
ஐபிஎல் ஏலத்தில் விற்கப்படாத யூசுப் பதானுக்கு இர்பான் பதானின் சிறப்பு செய்தி!
நான்காம் நிலை வீரர் குறித்த யூகங்களுக்கு பதில் இல்லை - விஜய் ஷங்கர்
நான்காம் நிலை வீரர் குறித்த யூகங்களுக்கு பதில் இல்லை - விஜய் ஷங்கர்
"என்னுடைய ஆட்டத்தை மேம்படுத்திக்கொள்ள ஐபிஎல் உதவியது" - ஜானி பாரிஸ்ட்டோ
"என்னுடைய ஆட்டத்தை மேம்படுத்திக்கொள்ள ஐபிஎல் உதவியது" - ஜானி பாரிஸ்ட்டோ
ஐபிஎல் கேம் சேஞ்சர் பன்ட்டை உலகக் கோப்பை அணியில் சேர்க்காதது ஏன்?
ஐபிஎல் கேம் சேஞ்சர் பன்ட்டை உலகக் கோப்பை அணியில் சேர்க்காதது ஏன்?
எலிமினேட்டர் சுற்றில் வெற்றி: "எல்லார் முகத்திலும் மகிழ்ச்சியை பார்க்கிறேன்" - ஷ்ரேயாஸ்
எலிமினேட்டர் சுற்றில் வெற்றி: "எல்லார் முகத்திலும் மகிழ்ச்சியை பார்க்கிறேன்" - ஷ்ரேயாஸ்
Advertisement