"அஷ்வின் செய்ததை, ஸ்டோக்ஸ் விராட் கோலிக்கு செய்தால் ஏற்பீர்களா?" - வார்னே

Updated: 26 March 2019 17:13 IST

முன்னாள் வீரர்கள் வாகன், ஜோன்ஸ், வார்னே ஆகியோர் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர், "இதையே ஸ்டோக்ஸ் கோலிக்கு செய்தால் இதனை ஏற்றுக்கொள்வார்களா" என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

Ravichandran Ashwin Mankad Controversy: Ben Stokes On Mankading Virat Kohli In World Cup
நானும் அவரும் எப்படியும் உலகக் கோப்பை ஆடத்தான் போகிறோம். அப்படி ஆடும் போது இது போன்ற சூழல் வந்தால் செய்யவே மாட்டேன்: பென் ஸ்டோக்ஸ் © AFP

ஐபிஎல் 2019 சீசனில் நேற்று நடைபெற்ற போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதனாத்தில் மோதின. இந்த போட்டியில் ராஜஸ்தான் சேசிங் செய்து கொண்டிருந்த போது 13வது ஓவரில் ரவிச்சந்திரன் அஷ்வின் ஜாஸ் பட்லருக்கு பந்துவீசினார். 

ராஜஸ்தான் வீரர் பட்லர் அஷ்வின் பந்து வீசும் போது பந்துவீச்சாளர் பக்கம் இருந்தார். ஆனால் பந்து வீசப்படுவதற்கு முன்பே பட்லர் க்ரீஸுக்கு வெளியே செல்வதை அறிந்த அஷ்வின் பந்தை வீசாமளேயே பந்துவீச்சாளர் எண்ட்டில் ரன் அவுட் செய்தார். இதற்கு அதிருப்தியை வெளிப்படுத்தியபடி பட்லர் வெளியேறினார்.பட்லர் களத்தில் இருக்கும் வரை ராஜஸ்தானின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. மான்கடிங் எனும் வினோதமான முறையில் பட்லரை அஷ்வின் வீழ்த்தினார்.  இதனால் ராஜஸ்தான் நிலை குலைந்து போட்டியை வெல்ல முடியாமல் போனது. 

இதற்கு முன்னாள் வீரர்கள் வாகன், ஜோன்ஸ், வார்னே ஆகியோர் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர், "இதையே ஸ்டோக்ஸ் கோலிக்கு செய்தால் இதனை ஏற்றுக்கொள்வார்களா" என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

வார்னே தனது ட்விட்டில் கோலிக்கு இதே செயலை ஸ்டோக்ஸ் செய்திருந்தால் அதனை ஏற்பீர்களா என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளிக்கும் வகையில் ஸ்டோக்ஸ் '' என்னிடம் நிறைய பேர் இதே விஷயத்தை கோலிக்கு செய்வீர்களா என்கிறார்கள். நானும் அவரும் எப்படியும் உலகக் கோப்பை ஆடத்தான் போகிறோம். அப்படி ஆடும் போது இது போன்ற சூழல் வந்தால் செய்யவே மாட்டேன்" என்று கூறியுள்ளார்.

வாகன், டியன் ஜோன்ஸ் இருவரும் இதே கருத்தை வலியுறுத்தி ட்விட் செய்துள்ளனர். முன்னதாக டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. முதலில் ஆடிய கிங்ஸ் லெவன் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது. கெயில் 79 ரன்களும், அகர்வால் 22 ரன்களும் எடுத்தனர். சர்ஃப்ராஸ் 46 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கிங்ஸ் லெவன் சார்பில் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளையும், குல்கர்னி, கெளதம் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று ஆடிய ராஜஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்தது. பட்லர் 69 ரன் எடுத்து வித்தியாசமான முறையில் அவுட் ஆனார். ரஹானே 27, சாம்சன் 30, ஸ்மித் 20 என அவுட் ஆக ராஜஸ்தான் 17 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கிங்ஸ் லெவம் தரப்பில் முஜிப், கான், ராஜ்புத் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அஷ்வின் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"ஆர்ச்சரிடமிருந்து ஆஸ்திரேலியா அதிக பவுன்ஸர்களை எதிர்பார்க்கலாம்" - ஸ்டோக்ஸ்
"ஆர்ச்சரிடமிருந்து ஆஸ்திரேலியா அதிக பவுன்ஸர்களை எதிர்பார்க்கலாம்" - ஸ்டோக்ஸ்
'உலகக் கோப்பை ஃபைனல் ஓவர்த்ரோ சர்ச்சை': மீண்டும் ஆய்வு; என்ன நடக்கும்?
"ரன்களை திரும்ப பெறும்படி நான் சொல்லவில்லை" - ஓவர்த்ரோ சர்ச்சை குறித்து பென் ஸ்ட்ரோக்ஸ்!
"ரன்களை திரும்ப பெறும்படி நான் சொல்லவில்லை" - ஓவர்த்ரோ சர்ச்சை குறித்து பென் ஸ்ட்ரோக்ஸ்!
என்னை விட வில்லியம்சன் தான் பெஸ்ட் - பென் ஸ்டோக்ஸ் புகழாரம்
என்னை விட வில்லியம்சன் தான் பெஸ்ட் - பென் ஸ்டோக்ஸ் புகழாரம்
நியூசிலாந்தை வீழ்த்திய பென் ஸ்டோக்ஸுக்கு நியூசிலாந்து நாட்டவர் விருது!
நியூசிலாந்தை வீழ்த்திய பென் ஸ்டோக்ஸுக்கு நியூசிலாந்து நாட்டவர் விருது!
Advertisement