வாட்சனை முறைத்த ரஷித்கானை கலாய்த்த நெட்டிசன்கள்!

Updated: 24 April 2019 12:07 IST

37 வயதான வாட்சன் 9 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 96 ரன்கள் குவித்து சி.எஸ்.கேவின் தொடர் இரண்டு தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

CSK vs SRH: Rashid Khan Tries To Intimidate Shane Watson, Turns Into Viral Memes
ரஷித் கான், 4 ஓவரில் 44 ரன்கள் கொடுத்தார். © Screengrab: www.iplt20.com

சென்னை அணியின் துவக்க வீரர் ஷேன் வாட்சன் 53 பந்தில் 96 ரன்கள் எடுத்து ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை மீண்டும் கைப்பற்றியது. ஐபிஎல் 2019 தொடரில் பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் திணறி வந்த வாட்சன், இந்த போட்டியில் அதிரடியாக ஆடி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை பெற்றி பெற வைத்தார். இதன் நடுவே சன்ரைசர்ஸ் வீரர் ரஷித்கான் களத்தில் வாட்சனுடன் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டார். ரஷித் கானின் இரண்டாவது பந்தை பவுண்டரிக்கு விளாசிய வாட்சனை ரஷித் கான் தோளில் உரசி முறைத்தார். நேற்றைய போட்டியில் 4 ஓவர்கள் வீசி 44 ரன்களை விட்டுக் கொடுத்தார் ரஷித் கான்.  ஐபிஎல் 2019ல் இது அவரது மோசமான பந்துவீச்சாகும். 

இந்த செயலை பலரும் மீம்ஸ்கள் மூலம் இணையதளத்தில் விமர்சித்தனர். 

37 வயதான வாட்சன் 9 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 96 ரன்கள் குவித்து சி.எஸ்.கேவின் தொடர் இரண்டு தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார். போட்டி முடிந்து பேசிய வாட்சன் ''நான் ரன் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். அதை இன்று சிறப்பாக செய்ததாக கருதுகிறேன்" என்றார். 

ஐபிஎல் 2019ல் 11 போட்டிகளில் ஆடி வாட்சனின் முதல் அரைசதம் இது. "இந்த மாற்றத்துக்காக அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெம்மிங், தோனி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார். "அவர்கள் என்ன அணியிலிருந்து ஃபார்மை காரணம் காட்டி நீக்கியிருக்கலாம். ஆனால் அவர்கள் என்மீது வைத்த நம்பிக்கை பெரிது" என்றார். 

இறுதியில் 18வது ஓவரில் புவனேஷ்வர் குமார் பந்தில் பாரிஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இந்த சீசனில் தனது முதல் சதத்தை தவறவிட்டார்.

Comments
ஹைலைட்ஸ்
  • ஷேன் வாட்சன் 53 பந்தில் 96 ரன்கள் எடுத்தார்
  • பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் திணறி வந்தார் வாட்சன்
  • 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை பெற்றி பெற வைத்தார் வாட்சன்
தொடர்புடைய கட்டுரைகள்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் தலைவரானார் ஷேன் வாட்சன்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் தலைவரானார் ஷேன் வாட்சன்
ட்விட்டரை தொடர்ந்து இன்ஸ்டாகிராம்... ஹேக் செய்யப்பட்ட வாட்சன் கணக்குகள்
ட்விட்டரை தொடர்ந்து இன்ஸ்டாகிராம்... ஹேக் செய்யப்பட்ட வாட்சன் கணக்குகள்
"அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி" - வாட்சனின் இன்ஸ்டாகிராம் பதிவு!
"அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி" - வாட்சனின் இன்ஸ்டாகிராம் பதிவு!
ஆறு தையல்... ரத்தம் சொட்ட ஆடிய வாட்சனுக்காக உருகிய ஹர்பஜன்!
ஆறு தையல்... ரத்தம் சொட்ட ஆடிய வாட்சனுக்காக உருகிய ஹர்பஜன்!
வாட்சனை ரன் அவுட்டாக்கிய ஜடேஜாவை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!
வாட்சனை ரன் அவுட்டாக்கிய ஜடேஜாவை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!
Advertisement