ஐபிஎல் 2019ல் சேப்பாக்கத்தில் மோதும் தோனி, அஷ்வின்!

Updated: 06 April 2019 13:06 IST

Chennai Super Kings vs Kings XI Punjab: தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ஐபிஎல் 2019ம் ஆண்டு தொடரின் 18வது ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளன.

IPL 2019, CSK vs KXIP Preview: MS Dhoni, Ravichandran Ashwin Battle In Focus As Chennai Super Kings Host Kings XI Punjab
நடப்பு சாம்பியனான சிஎஸ்கே ஹாட்ரிக் வெற்றிக்கு பிறகு மும்பையுடன் தோல்வியை சந்தித்தது. அதிலிருந்து மீண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. © BCCI/IPL

CSK vs KXIP: தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ஐபிஎல் 2019ம் ஆண்டு தொடரின் 18வது ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளன. தோனியின் கேப்டன் கூல் குணமும், அஷ்வினின் அவுட் ஆஃப் தி பாக்ஸ் முடிவுகளுக்குமான போட்டியாக இது அமையும். சிஎஸ்கே , கிங்ஸ் லெவன் இடையே வெற்றி என்பது 11-8 என்ற அளவில் உள்ளது. இரு அணிகளும் ஆறு புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.

நடப்பு சாம்பியனான  சிஎஸ்கே ஹாட்ரிக் வெற்றிக்கு பிறகு மும்பையுடன் தோல்வியை சந்தித்தது. அதிலிருந்து மீண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கு முன்பு சேப்பாக்கத்தில் சென்னை ஆடிய இரு ஆட்டங்களும் வெவ்வேறு விதமாக அமைந்தன. ராயல் சேலஞ்சரஸ் அணி 70 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ராஜஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. 

சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதமான மைதானத்தில் கிங்ஸ் லெவனும் வளமான சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது. முஜீப், எம்.அஷ்வின், ஆர்.அஷ்வின் என பலம் பொருந்திய அணியாக உள்ளது. கெயில் அணிக்கு திரும்பியிருப்பது கிங்ஸ் லெவனுக்கு பலம் சேர்க்கும்.

கிங்ஸ் லெவன் அணியில் ராகுல், அகர்வால் பேட்டிங் சிறப்பாக உள்ளது. ராயுடு தடுமாறி வருவதால், சென்னை அணி விஜய்க்கு வாய்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிஎஸ்கே (CSK):

தோனி, ரெய்னா,ராயுடு, ஜடேஜா, ஹர்பஜன், வாட்சன், ப்ராவோ, முரளி விஜய், கரண் ஷர்மா, கேதர் ஜாதவ், ராயுடு, வில்லி, தாஹிர், டூப்ளெஸிஸ், சஹார், சாம் பில்லிங்ஸ், மோஹித் ஷர்மா, ஷரதுல் தாக்கூர், ஷோரே, சாண்ட்னர், மோனு குமார், பிஷ்னோய், ஜெகதீசன், ருதுராஜ் , ஆசிப்

கிங்ஸ் லெவன் (KXIP):

ஆர்.அஷ்வின், கெயில், ராகுல் , ஷமி, மயங்க, கருண் நாயர், முஜீப், மில்லர், சாம் குரான், வருண் சக்கரவர்த்தி, போரான், ஹென்றிக்கஸ், விலஜோன், நல்கண்டே, சர்ஃபிராஸ் , அர்ஷ்திப் , அயாசி, ஹர்ப்ரித் பிரர், எம்.அஷ்வின், ஆன்ட்ரூ டை, ராஜ்புத், மன்தீப், சிம்ரான் சிங்.

Comments
ஹைலைட்ஸ்
  • சிஎஸ்கே மற்றும் கிங்ஸ் லெவன் 4 போட்டிகளுக்கு பிறகு 6 புள்ளிகள் பெற்றுள்ளன
  • இன்று ஜெயிக்கும் அணி புள்ளி பட்டியலில் முன்னிலை பெறும்
  • முன்னாள் சிஎஸ்கே வீரர், இன்னொரு அணியின் கேப்டனாக சென்னை திரும்புகிறார்
தொடர்புடைய கட்டுரைகள்
சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி #Highlights
சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி #Highlights
ஐபிஎல் 2019ல் சேப்பாக்கத்தில் மோதும் தோனி, அஷ்வின்!
ஐபிஎல் 2019ல் சேப்பாக்கத்தில் மோதும் தோனி, அஷ்வின்!
Advertisement