கொல்கத்தாவை ஈடன் கார்டனில் மிரட்டுமா சி.எஸ்.கே?

Updated: 14 April 2019 10:57 IST

சென்னை அணி 4 புள்ளிகள் முன்னிலையில் முதலிடத்தில் உள்ளதால் சென்னை அணி பதட்டமில்லாமல் இந்த போட்டியை எதிர்கொள்ளும்.

KKR vs CSK Preview: Kolkata Knight Riders Under Pressure Against Chennai Super Kings With Doubts Over Andre Russell
சென்னையுடனும், டெல்லியுடன் சொந்த மண்ணிலும் தோல்வியை தழுவியதால் இந்த போட்டியை வெல்லும் முனைப்பில் உள்ளது கொல்கத்தா. © BCCI/IPL

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதலிடத்தை விட்டுத்தரக்கூடாது என்ற மனநிலையுடன் இன்று ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சந்திக்கிறது. சென்னை அணி 4 புள்ளிகள் முன்னிலையில் முதலிடத்தில் உள்ளதால் சென்னை அணி பதட்டமில்லாமல் இந்த போட்டியை எதிர்கொள்ளும். அதே சமயம் கொல்கத்தா தொடர்ந்து இரண்டு போட்டிகளை தோற்றுள்ளதால் இந்த போட்டியை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. சென்னையுடனும், டெல்லியுடன் சொந்த மண்ணிலும் தோல்வியை தழுவியதால் இந்த போட்டியை வெல்லும் முனைப்பில் உள்ளது கொல்கத்தா. இதில் இன்னும் கவலையளிக்கு விதமாக ரஸலின் காயம் கொல்கத்தாவுக்கு தலைவலியாகியுள்ளது. 

கொல்கத்தாவின் தோல்விகள் ரஸலை அதிகம் நம்பியிருப்பதை தெளிவாக காட்டின. இவருக்கு மாற்றாக இன்னொரு வீரரை கொல்கத்தா எடுப்பது கடினமானது. சென்னையுடனான போட்டியில் காயமடைந்தாலும், அதோடு ஆடி டெல்லியோடு 21 பந்தில் 45 ரன் குவித்தார்.

ஆனால், பரிசளிப்பின் போது ரஸல் களத்தில் இல்லை, என்பதால் காயம் பற்றிய கவலை அதிகரித்துள்ளது. ரஸல், கொல்கத்தா வென்ற 4 போட்டிகளில் 3 போட்டிகளில் ஆட்டநாயகன் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆறு போட்டிகளிலும் 40க்கு அதிகமான ரன்களை குவித்தார்.

கொல்கத்தா அணிக்கு புதிய நம்பிக்கையாக உருவெடுத்துள்ளார் கில். டெல்லிக்கு அதிராக 39 பந்தில் 65 ரன் குவித்து அசத்தினார். ஆனாலும் கொல்கத்தாவின் பேட்டிங் கவலையளிப்பதாக உள்ளது. கேப்டன் கார்த்திக் மொத்த தொடரிலும் சேர்த்தே 93 ரன்கள் தான் குவித்துள்ளார்,

ஈடன் கார்டன் பொதுவாக ஸ்பின்னர்களுக்கு கைகொடுக்காது என்பதால் வேகப்பந்துவீச்சில் பெர்குசன், பிரசித் கிருஷ்ணா கொல்கத்தாவுக்கு வலு சேர்ப்பார்கள்.

தினேஷ் கார்த்திக் தன்னை உலகக் கோப்பைக்கும் சேர்த்து நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அதேசமயம் சென்னை அணி அனைத்து துறைகளிலும் வலுவாக உள்ளது. ஆடிய 7 போட்டிகளில் 6 போட்டிகளை வென்றுள்ளது.

கடைசி போட்டியில் தோனி கள நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது விமர்சனத்துக்குள்ளானது. இந்த சமவத்துக்காக தோனிக்கு 50 சதவிகித போட்டி கட்டணம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

அணி விவரம்:

சிஎஸ்கே:

தோனி, ரெய்னா, ஜடேஜா, ஹர்பஜன், வாட்சன், ப்ராவோ, முரளி விஜய், கரண் ஷர்மா, கேதர் ஜாதவ், ராயுடு, வில்லி, தாஹிர், டூப்ளெஸிஸ், சஹார், சாம் பில்லிங்ஸ், மோஹித் ஷர்மா, ஷரதுல் தாக்கூர், ஷோரே, சாண்ட்னர், மோனு குமார், பிஷ்னோய், ஜெகதீசன், ருதுராஜ் , ஆசிப்

கேகேஆர்:

தினேஷ் கார்த்திக், உத்தப்பா, லின், கீல், ரஸல், பிராத் வொயிட், வண்ணறேன், சாவ்லா, குல்தீப், ராணா, நிகில் நாயக், ஜோ டென்லை, ஸ்ரீகாந்த், சந்திப் வாரியார், பிரசித் கிருஷ்ணா , பெர்குசன், ஹாரி கார்னே, பிரித்விராஜ், காரியப்பா.

Comments
ஹைலைட்ஸ்
  • இந்த தொடரில் ரஸல் இருப்பாரா என்பது இன்னும் உறுதி செய்யபடவில்லை
  • கொல்கத்தா அணிக்கு புதிய நம்பிக்கையாக உருவெடுத்துள்ளார் கில்
  • கடந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கேவிடம் தோற்றது கேகேஆர்
தொடர்புடைய கட்டுரைகள்
''தொப்பி எப்படி போடணும்'' ப்ராவோவுக்கு க்ளாஸ் எடுத்த தோனி மகள் ஸிவா!
சென்னை அணி ஐந்து விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி #Highlights
சென்னை அணி ஐந்து விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி #Highlights
சிஎஸ்கே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆட்டம் எங்கு, எப்போது, எதில் பார்க்கலாம்?
சிஎஸ்கே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆட்டம் எங்கு, எப்போது, எதில் பார்க்கலாம்?
கொல்கத்தாவை ஈடன் கார்டனில் மிரட்டுமா சி.எஸ்.கே?
கொல்கத்தாவை ஈடன் கார்டனில் மிரட்டுமா சி.எஸ்.கே?
Advertisement