கொல்கத்தாவை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்குமா சென்னை?

Updated: 09 April 2019 15:24 IST

இரு அணிகளும் 5 போட்டிகளில் ஆடி நான்கை வென்றுள்ளன. சென்னை அணிக்கு ஸ்பின்னர்களும், கொல்கத்தா அணிக்கு ரஸலும் பலமாக உள்ளனர்.

CSK vs KKR Preview: Chennai Super Kings Eye Top Spot With Win Over Andre Russell-Powered Kolkata Knight Riders
சிஎஸ்கே ள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் நோக்கில் இன்று கொல்கத்தாவுடன் சென்னை எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் மோதவுள்ளது. © BCCI/IPL

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2019 தொடரின் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் நோக்கில் இன்று கொல்கத்தாவுடன் சென்னை எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் மோதவுள்ளது. தற்போது கொல்கத்தா அணி அதிக நெட் ரன்ரேட்டுடன் முதலிடத்தில் உள்ளது. இரு அணிகளும் 5 போட்டிகளில் ஆடி நான்கை வென்றுள்ளன. சென்னை அணிக்கு ஸ்பின்னர்களும், ரஸல் கொல்கத்தா அணிக்கும் பலமாக உள்ளனர்.

சிஎஸ்கே சனிக்கிழமையன்று பஞ்சாப் அணியை எளிதாக வீழ்த்தியது. அதேபோல கொல்கத்தாவுக்கு ராஜஸ்தானை எளிதில் வீழ்த்தியுள்ளது. சென்னை மைதானம் ஸ்பின்னர்களுக்கு சாதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சென்னை அணியை பொறுத்தமட்டில் கிங்ஸ் லெவனுக்கு எதிரான போட்டியை ஹர்பஜன், தாஹிர், ஜடேஜா ஆகியோர் வெற்றி பெற்றுத்தந்தனர்.அதேபோல குல்தீப் யாதவ், நரேன், சாவ்லா ஆகியோரும் கொல்கத்தாவுக்கு பலம் சேர்ப்பார்கள். 

இரு அணிகளும் பலமான ஸ்பின்னர்களை கொண்டிருந்தாலும், கொல்கத்தா ரஸல் என்ற பேட்ஸ்மேனுக்காக தோனி தனி உத்திகளை வகுக்க வேண்டியுள்ளது. 

டுப்லெசிஸ் அணிக்கு திரும்பியிருப்பது சென்னையின் பேட்டிங்கிற்கு வலு சேர்க்கிறது. 

அணி விவரம்:

சிஎஸ்கே: தோனி, ரெய்னா, ஜடேஜா, ஹர்பஜன், வாட்சன், ப்ராவோ, முரளி விஜய், கரண் ஷர்மா, கேதர் ஜாதவ், ராயுடு, வில்லி, தாஹிர், டுப்லெசிஸ், சஹார், சாம் பில்லிங்ஸ், மோஹித் ஷர்மா, ஷரதுல் தாக்கூர், ஷோரே, சாண்ட்னர், மோனு குமார், பிஷ்னோய், ஜெகதீசன், ருதுராஜ் , ஆசிப்

கேகேஆர்: தினேஷ் கார்த்திக், உத்தப்பா, லின், கீல், ரஸல், பிராத் வொயிட், வண்ணறேன், சாவ்லா, குல்தீப், ராணா, நிகில் நாயக், ஜோ டென்லை, ஸ்ரீகாந்த், சந்திப் வாரியார், பிரசித் கிருஷ்ணா , பெர்குசன், ஹாரி கார்னே, பிரித்விராஜ், காரியப்பா.

Comments
ஹைலைட்ஸ்
  • இரு அணிகளும் 5 போட்டிகளில் ஆடி நான்கு போட்டிகள் வென்றுள்ளன
  • சிஎஸ்கே பஞ்சாப் அணியை சென்னையில் வீழ்த்தியது
  • கொல்கத்தா அணி அதிக நெட் ரன்ரேட்டுடன் முதலிடத்தில் உள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
"மைதானம் இப்படி இருந்தால் ஆடமுடியாது" - சேப்பாக்கத்தை குறை சொல்லும் தோனி!
"மைதானம் இப்படி இருந்தால் ஆடமுடியாது" - சேப்பாக்கத்தை குறை சொல்லும் தோனி!
களத்துல கீப்பிங்... ஏர்போர்ட்ல ஸ்லீப்பிங்... தோனி - ஷாக்‌ஷியின் வாவ் லவ்!
களத்துல கீப்பிங்... ஏர்போர்ட்ல ஸ்லீப்பிங்... தோனி - ஷாக்‌ஷியின் வாவ் லவ்!
ஷாருக் - தோனி லவ்... சென்னை சூப்பர் கிங்ஸை சந்தித்த சென்னை எக்ஸ்ப்ரஸ்!
ஷாருக் - தோனி லவ்... சென்னை சூப்பர் கிங்ஸை சந்தித்த சென்னை எக்ஸ்ப்ரஸ்!
கொல்கத்தாவை சுழலால் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் சென்னை முதலிடம்
கொல்கத்தாவை சுழலால் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் சென்னை முதலிடம்
ஐ.பி.எல்.2019 : கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக். வித்தியாசத்தில் சி.எஸ்.கே. வெற்றி!! #Highlights
ஐ.பி.எல்.2019 : கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக். வித்தியாசத்தில் சி.எஸ்.கே. வெற்றி!! #Highlights
Advertisement