ஷாருக் - தோனி லவ்... சென்னை சூப்பர் கிங்ஸை சந்தித்த சென்னை எக்ஸ்ப்ரஸ்!

Updated: 10 April 2019 13:01 IST

கொல்கத்தா அணியை வென்ற சிஎஸ்கே புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

MS Dhoni, Shah Rukh Khan Captured In One Frame During CSK vs KKR IPL 2019 Match
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதி வெற்றி பெற்றது. © Twitter

தோனியும், ஷாருக்கானும் இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்கள். சேப்பாக்கத்தில் நடைபெற்ற சென்னை, கொல்கத்தா இடையிலான ஐபிஎல் போட்டியில் பால்கனியில் இருந்த ஷாருக்கை, தோனி பார்த்து புன்னகைத்தது வைரலாகியுள்ளது. இதனை சென்னை சூப்பர் கிங்ஸின் ட்விட்டர் பக்கம் புகைப்படத்துடன் பகிர்ந்தது. அதில் சென்னை எக்ஸ்ப்ரஸ் சூப்பர் என்றும் பதிவிட்டிருந்தது. இந்த படன் சில நிமிடங்களில் வைரலானது.  

முன்னதாக ஃபாப் டுப்ளெசிஸ் ஆட்டமிழக்காமல் 43 ரன்கள் எடுத்து சென்னையில் நடைபெற்ற கொல்கத்தாவுடனான ஆட்டத்தில் சி.எஸ்.கே வை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். இந்த வெற்றி மூலம் ஐபிஎல் 2019 புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.  டாஸ் வென்று பந்துவீச்சை தேர்ந்தெடுத்த சிஎஸ்கே கொல்கத்தாவை 20 ஓவர்களில் 108 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது. ரஸல் மட்டும் அரைசதமடித்தார். 109 என்ற இலக்கை துரத்திய சிஎஸ்கே டுப்ளெசிஸின் பொறுப்பான ஆட்டத்தால் 18 பந்துகள் மீதமிருக்கையில் போட்டியை வென்றது சிஎஸ்கே.

கொல்கத்தா அணி ஆறு ஆட்டங்களில் தனது 2வது தோல்வியை சந்தித்துள்ளது. நேற்றைய போட்டியை தவிர்த்து அனைத்து போட்டிகளிலுமே சிறப்பாக ஆடியுள்ளது கொல்கத்தா.

109 என்ற எளிதான இலக்கில்  2 பவுண்டரி ஒரு சிக்சர் அடித்து அதிரடியாக துவங்கிய வாட்சன் 9  பந்தில் 17 ரன் எடுத்து நரேன் பந்தில் ஆட்டமிழந்தார்.

சுரேஷ் ரெய்னா 14 ரன்னில் ஆட்டமிழக்க 5 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 35 ரன்கள் எடுத்தது சிஎஸ்கே.

குறைவான ரன்களை சேஸ் செய்ததால் எந்தவித பதட்டமும் இன்றி ஆடியது சென்னை அணி. டுப்ளெசிஸ் 45 பந்தில் 43 ரன்கள் சேர்த்தார். ராயுடு 21 ரன்கள் குவித்தார். 

முன்னதாக கொல்கத்தா பேட்டிங்கில் ரஸல் மட்டும் 5 பவுண்டரி , 3 சிக்ஸருடன் அரைசதமடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.

தீபக் சஹார் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹர்பஜன் 2/15, தாஹிர் 2/21, ஜடேஜா 1/17 என கொல்கத்தாவை சுழலில் சிக்கி திணறடித்தனர். 

கிறிஸ் லின் மற்றும் நரேனை 5 பந்துகள் இடைவெளியில் அவுட் ஆக்கியது சென்னை அணிக்கு சாதகமாக அமைந்தது. 

லின் மற்றும் ரானாவை டக் அவுட் ஆக்கி அதிர்ச்சி தந்தார் சஹார். கொல்கத்தா 50 ரன்களை 12வது ஓவரில் தான் கடந்தது. சென்னை மைதானத்தில் வீரர்கள் ரன் குவிக்க தவறுவது தொடர்ந்து வருகிறது.

Comments
ஹைலைட்ஸ்
  • சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியின் போது தோனி மற்றும் ஷாருக் சந்தித்தனர்
  • ஷாருக்கை , தோனி பார்த்து புன்னகைத்தது வைரலாகியுள்ளது
  • கொல்கத்தா இரண்டாவது தோல்வியை சந்தித்துள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
“ஒரு புலி இன்னொரு புலியை சந்தித்தால்...” - தோனி ரசிகரின் வைரல் கமெண்ட்!
“ஒரு புலி இன்னொரு புலியை சந்தித்தால்...” - தோனி ரசிகரின் வைரல் கமெண்ட்!
“இந்திய கேப்டன்களில் சிறந்தவர் தோனி” - சுரேஷ் ரெய்னா
“இந்திய கேப்டன்களில் சிறந்தவர் தோனி” - சுரேஷ் ரெய்னா
ஆர்.பி. சிங் மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோருக்கு பானி பூரி பரிமாறிய தோனி!
ஆர்.பி. சிங் மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோருக்கு பானி பூரி பரிமாறிய தோனி!
“மிக சிறந்த இந்திய கேப்டன் தோனி” - புகழ்ந்த ரோஹித் ஷர்மா!
“மிக சிறந்த இந்திய கேப்டன் தோனி” - புகழ்ந்த ரோஹித் ஷர்மா!
"ஃபாலோவர்ஸை அதிகரிக்க நீ இதை செய்கிறாய்" - சாக்‌ஷியை ட்ரோல் செய்த தோனி!
"ஃபாலோவர்ஸை அதிகரிக்க நீ இதை செய்கிறாய்" - சாக்‌ஷியை ட்ரோல் செய்த தோனி!
Advertisement