Listen to the latest songs, only on JioSaavn.com
 

கடைசி பந்தில் நோபால் சர்ச்சை... அம்பயர்களை சாடிய கோலி!

Updated: 29 March 2019 11:33 IST

மும்பை மற்றும் பெங்களூரு இடையேயான ஐபிஎல் போட்டியில் கடைசி பந்தை நடுவர் ரவி நோபால் என அறிவிக்காததால், ஆர்சிபி தோல்வியை சந்திக்கும் சூழல் உருவானது.

RCB vs MI: Virat Kohli Slams Umpire After Massive Blunder On Final Ball
71 ரன் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார் அவர் ப்ரீ ஹிட்டில் ஆர்சிபியை வெற்றி பெற வைத்திருக்க வாய்ப்பு அதிகம். © BCCI/IPL

மும்பை மற்றும் பெங்களூரு இடையேயான ஐபிஎல் போட்டியில் கடைசி பந்தை நடுவர் ரவி நோபால் என அறிவிக்காததால், ஆர்சிபி தோல்வியை சந்திக்கும் சூழல் உருவானது. போட்டி  முடிந்து மும்பை வெற்றி என்று அறிவிக்கப்பட்டதும், மலிங்கா வீசிய பந்து தெளிவாக நோபால் என்பது உறுதியானது.

கோலி மைதானத்தின் பெரிய திரையில் நோபாலை பார்த்து ஆத்திரமடைந்தார். "இது மிகப்பெரிய தவறு" என தனது கோபத்தை வெளிப்படுத்தினார். ஆட்டம் முடிந்து பரிசளிப்புக்கு முன் இயன் பிஷப்பின் பேட்டிக்கு பதிலளித்த கோலி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

"நாங்கள் ஐபிஎல் அள‌வில் போட்டிகளை ஆடுகிறோம். ஏதோ க்ளப் கிரிக்கெட் ஆடவில்லை. கடைசி பந்தில் நோபால் வழங்காதது தவறான விஷயம். நடுவர்கள் தங்கள் கண்களை அதிக விழிப்புடன் வைத்திருக்க வேண்டும். அதுவும் இவ்வளவு பெரிய நோபாலை தவறவிட்டுப்பது ஏற்கமுடியாதது. இது போட்டியை தலைகீழாக மாற்றியது" என்றார் கோலி.

கடைசி பந்தை சிவம் துபே எதிர்கொண்டார். அந்த பந்து நோபால் என்றால் அதில் ஒரு ரன் ஓடியதால் ஒரு பந்தில் 5 ரன் அடிக்க வேண்டும் என்ற சூழல் உருவாகியிருக்கும். டிவில்லியர்ஸ் அபாரமாக 41 பந்தில்; 71 ரன் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார் அவர் ப்ரீ ஹிட்டில் ஆர்சிபியை வெற்றி பெற வைத்திருக்க வாய்ப்பு அதிகம்.

நடுவரின் தவறை ரோஹித் ஷர்மாவும் விமர்சித்தார். "நான் எல்லைக்கோடை தாண்டி பிறகே இது நோபால் என அறிந்தேன். பும்ரா வீசிய பந்திலும் தவறாக ஒரு வைடு வழங்கினார்" என குற்றம் சாட்டினார். ஐபிஎல் தொடரில் ஆர்சிபி தனது இரண்டாவது போட்டியிலும் தோற்றது.

Comments
ஹைலைட்ஸ்
  • கோலி மைதானத்தின் பெரிய திரையில் நோபாலை பார்த்து ஆத்திரமடைந்தார்
  • மலிங்கா வீசிய பந்து தெளிவாக நோபால் என்பது உறுதியானது
  • மும்பை இந்தியன்ஸ் ஆர்சிபி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது
தொடர்புடைய கட்டுரைகள்
குவாரன்டைனில் கோலிக்கு புதிய ஹேர் ஸ்டைலிஸ்ட்டாக மாறிய அனுஷ்கா ஷர்மா! #வீடியோ
குவாரன்டைனில் கோலிக்கு புதிய ஹேர் ஸ்டைலிஸ்ட்டாக மாறிய அனுஷ்கா ஷர்மா! #வீடியோ
21 நாள் ஊரடங்கு: கேப்டன் விராட் கோலி வெளியிட்ட உருக்கமான வீடியோ!
21 நாள் ஊரடங்கு: கேப்டன் விராட் கோலி வெளியிட்ட உருக்கமான வீடியோ!
தொடக்க வீரராக சச்சின் டெண்டுல்கரின் முதல் நாக்... ட்விட் செய்த பிசிசிஐ! #OnThisDay
தொடக்க வீரராக சச்சின் டெண்டுல்கரின் முதல் நாக்... ட்விட் செய்த பிசிசிஐ! #OnThisDay
ஹர்திக் பாண்ட்யாவுடன் நடாசா பதிவிட்ட காதல் நிறைந்த புகைப்படம்!
ஹர்திக் பாண்ட்யாவுடன் நடாசா பதிவிட்ட காதல் நிறைந்த புகைப்படம்!
“கோலி அல்லது தோனி?” - பலரின் இதயங்களை வென்ற ஷாஹித் கபூரின் பதில்!
“கோலி அல்லது தோனி?” - பலரின் இதயங்களை வென்ற ஷாஹித் கபூரின் பதில்!
Advertisement