தோனி, ரெய்னா, ஃப்ளெமிங்கை கெளரவித்த சென்னை சூப்பர் கிங்ஸ்

Updated: 22 March 2019 12:37 IST

அனுபவமிக்க வீரர்கள் அதிகம் இருப்பது சென்னையின் கூடுதல் பலம் என பயிற்சியாளர் ஃப்ளெமிங் தெரிவித்துள்ளார்.

MS Dhoni, Suresh Raina, Stephen Fleming Felicitated By CSK
தோனி, ரெய்னா மற்றும் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் ஆகியோருக்கு விருது வழங்கி கவுரவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. © Twitter

தோனி, ரெய்னா மற்றும் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் ஆகியோருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நீண்ட நாட்கள் அணியில் பணியாற்றியவர்களுக்கான விருது வழங்கி கவுரவித்தது. தோனியும், ரெய்னாவும் முதல் ஐபிஎல் சீசனிலிருந்து சென்னை அணிக்காக ஆடி வருகிறார்கள். சிஎஸ்கே அணியின் வீரராக ஆரம்பித்து 2009ம் ஆண்டிலிருந்து பயிற்சியாளராக அணியில் தொடர்கிறார் ஸ்டீபன் ஃப்ளெமிங். இவர்கள் மூவரும் 2010,2011,2018 ஆண்டுகளில் ஐபிஎல் வென்ற அணியிலும், 2010,2014 சாம்பியன் லீக் கோப்பையை வென்ற அணியிலும் இடம் பெற்றிருந்தனர்.

2018ம் ஆண்டு மும்பையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிராக வென்று கோப்பையை கைப்பற்றியது. 

அனுபவமிக்க வீரர்கள் அதிகம் இருப்பது சென்னையின் கூடுதல் பலம் என பயிற்சியாளர் ஃப்ளெமிங் தெரிவித்துள்ளார். எங்களின் பெரிய சவால், "கோப்பையை வெல்வது. அது கடினம் என்றாலும் அதற்காக அதிகம் உழைக்க வேண்டும்" என்றார். 

"நாங்கள் திறமையின் அடிப்படையில் தொடரில் நிலையான வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்று செயல்படுகிறோம்" என்றார் ஃப்ளெமிங்.

சென்னை தனது முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை சந்திக்கிறது.

Comments
ஹைலைட்ஸ்
  • அனுபவமிக்க வீரர்கள் அதிகம் இருப்பது சென்னையின் கூடுதல் பலம்: ஃப்ளெமிங்
  • சிஎஸ்கே மூன்றாவது ஐபிஎல் கோப்பையை சன்ரைசர்ஸ் உடன் மோதி வென்றது
  • சென்னை தனது முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை சந்திக்கிறது
தொடர்புடைய கட்டுரைகள்
"கோலி சிறந்த கேப்டனாக ரோஹித் மற்றும் தோனி தான் காரணம்" - கவுதம் கம்பீர்!
"கோலி சிறந்த கேப்டனாக ரோஹித் மற்றும் தோனி தான் காரணம்" - கவுதம் கம்பீர்!
"அவரை வெளியேற்றுவதற்கு முன், தோனியே விலகினால் நல்லது" - சுனில் கவாஸ்கர்
"அவரை வெளியேற்றுவதற்கு முன், தோனியே விலகினால் நல்லது" - சுனில் கவாஸ்கர்
"தோனியின் ஓய்வு குறித்து தேர்வுக்குழு, கோலி முடிவெடுக்க வேண்டும்": கங்குலி!
"தோனியின் ஓய்வு குறித்து தேர்வுக்குழு, கோலி முடிவெடுக்க வேண்டும்": கங்குலி!
"பாடம் கற்றுக்கொண்டேன்" - தோனி ஓய்வு வதந்திக்கு பின் கோலி!
"பாடம் கற்றுக்கொண்டேன்" - தோனி ஓய்வு வதந்திக்கு பின் கோலி!
#12YearsOfCaptainDhoni - இந்திய ட்ரண்டாக மாறிய தோனி!
#12YearsOfCaptainDhoni - இந்திய ட்ரண்டாக மாறிய தோனி!
Advertisement