களத்தில் கோபப்பட்ட தோனியை விமர்சித்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன்!

Updated: 12 April 2019 17:23 IST

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த ஆட்டத்தின் நடுவே தோனி களத்தில் புகுந்து நடுவர்களிடம் முறையிட்டார்.

MS Dhoni Slammed By Michael Vaughan For Entering The Field In RR vs CSK IPL 2019 Match
நோ பாலுக்காக நடுவர்களிடம் முறையிட்ட தோனிக்கு 50 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. © BCCI/IPL

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த ஆட்டத்தின் நடுவே தோனி களத்தில் புகுந்து நடுவர்களிடம் முறையிட்டார். ஆட்டத்தின் கடைசி ஓவரில் இடுப்பு அளவுக்கு மேலே ஜடேஜாவுக்கு பந்துவீசப்பட்டது. ஆனால் நோபாலாக அதனை அறிவிக்கவில்லை. உடனடியாக தோனி களத்தில் புகுந்து நடுவர்களிடம் வாதாடினார். ஆனால் நடுவர்கள் இருவரும் மறுக்க அங்கிருந்து கோபமாக பெவிலியன் திரும்பினார்.

இந்த செயலுக்கு கருத்து தெரிவித்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ''இது கிரிக்கெட்டுக்கு அழகல்ல. பெவிலியனிலிருந்து கேப்டன் நடுவர்களை நோக்கி இப்படி வந்து முறையிடுவது தவறு'' என்று கூறினார். 

'தோனி செய்தது சரி" என்று பதல் அளித்த ரசிகருக்கு வாகன் அளித்துள்ள பதிலில் ''தோனி தவறான விஷயத்தை முன்னிறுத்தியுள்ளார்" என்றார்.

ஆட்டத்தின் கடைசி ஓவரை ஸ்டோக்ஸ் வீசினார். அந்த ஓவரில் சி.எஸ்.கே வெற்றி பெற 18 ரன்கள் தேவை. முதல் பந்தில் ஜடேஜா சிக்சர் அடிக்க ஆட்டம் எளிதானது. 3வது பந்தில் தோனி அவுட் ஆக ஆட்டம் பதட்டமானது. கடைசி 3 பந்தில் 8 ரன்கள் தேவை என்ற போது. ஜடேஜாவின் இடுப்புக்கு மேலே பந்துவீசப்பட்டது.

முதலில் கள நடுவர் கையை உயர்த்தினார். ஆனால், ஸ்கொயர் லெக் நடுவர் அனுமதி மறுத்ததால் கள நடுவர் உல்லாஸ் கண்டேவும் நோபால் இல்லை என்றார்.

முதலில் ஜடேஜா நடுவரிடம் முறையிட்டார். பெவிலியனில் அதிருப்தியை வெளிப்படுத்தியபடி இருந்த தோனி களத்துக்குள் கோபமாக நுழைந்து முறையிட்டார். பின்னர் அவர்கள் மறுக்க கோபமாக வெளியேறினார். ஒருபந்தில் 3 ரன்கள் தேவை என்ற போது சாண்ட்னர் சிக்ஸர் அடித்து சென்னை அணியை வெற்றி பெற வைத்தார். தோனி கூலாக ரியாக்ட் செய்தது மட்டுமின்றி ஆட்டநாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.

Comments
ஹைலைட்ஸ்
  • மைதனாத்துக்குள் தோனி வந்தது தவறு என மைக்கேல் வாகன் கூறியுள்ளார்
  • தோனி தவறான விஷயத்தை முன்னிறுத்தியுள்ளார்: மைக்கேல் வாகன்
  • இதற்காக தோனிக்கு 50 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
IPL 2020: "காட்டின் ராணி" சாக்‌ஷி தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சிஎஸ்கே!
IPL 2020: "காட்டின் ராணி" சாக்‌ஷி தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சிஎஸ்கே!
இந்தியா vs பங்களாதேஷ்: MS Dhoni-யின் சாதனையை முறியடித்த Virat Kohli....!
இந்தியா vs பங்களாதேஷ்: MS Dhoni-யின் சாதனையை முறியடித்த Virat Kohli....!
"அணியில் இணைகிறாரா தோனி?" - வைரலாகும் பயிற்சி வீடியோ
"அணியில் இணைகிறாரா தோனி?" - வைரலாகும் பயிற்சி வீடியோ
"தோனியின் அறிவுரை தான் எனக்கு இப்போதும் உதவுகிறது" - தீபக் சஹார்
"தோனியின் அறிவுரை தான் எனக்கு இப்போதும் உதவுகிறது" - தீபக் சஹார்
நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் தோனி: தகவல்!
நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் தோனி: தகவல்!
Advertisement