"ஓய்வு பெறும் வரை வெற்றி ரகசியத்தை சொல்ல மாட்டேன்" - தோனி

Updated: 24 April 2019 13:01 IST

சன்ரைசர்ஸ் அணியுடனான போட்டியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வென்று ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்தது சிஎஸ்கே.

CSK Success: MS Dhoni Puts A Humorous Spin To The Mantra - Watch
37 வயதான தோனி சி.எஸ்.கேவுக்கு மூன்று ஐபிஎல் கோப்பைகளை வென்று தந்துள்ளார். © BCCI/IPL

மின்னல் வேக கீப்பிங், அதிரடியான ஃபினிஷிங் இதற்கு பெயர் போன எம்.எஸ். தோனி, சர்காஸம் செய்வதிலும் சற்றும் சளைத்தவர் அல்ல. சன்ரைசர்ஸ் அணியுடனான போட்டியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வென்று ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்தது. போட்டி முடிந்து பரிசளிப்பு விழாவில் தோனியிடம் ஹர்ஷா போக்லே,  சி.எஸ்.கேவின் வெற்றி ரகசியம் பற்றி கேட்டார். அதற்கு தோனி கூலாக ''நான் அந்த ரகசியத்தை கூறினால், என்னை யாரும் ஏலத்தில் எடுக்கமாட்டார்கள். அது வியாபார உத்தி" என்று கூறி சென்றார்.

37 வயதான தோனி சி.எஸ்.கேவுக்கு மூன்று கோப்பைகளை வென்று தந்துள்ளார். அவர் ஓய்வு பெறும் வரை அந்த ரகசியத்தை சொல்லப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

ரசிகர்களும், அணி நிர்வாகமும் அதிக உற்சாகம் அளிப்பதாகவும், அணிக்கு வீரர்கள் அல்லாத ஒவ்வொருவரும் ஆற்றும் பணியின் வெளிப்பாடு தான் களத்தில் அணியின் செயல்பாடு இருப்பதாகவும் கூறினார்.  ஓய்வு பெறும் வரை ரகசியத்தை சொல்ல மாட்டேன் என்ற தோனி, "உலகக் கோப்பை வரை கவனமாக ஆட வேண்டும்" என்றார்.

சென்னை அணியின் துவக்க வீரர் ஷேன் வாட்சன் 53 பந்தில் 96 ரன்கள் எடுத்து ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை மீண்டும் கைப்பற்றியது. ஐபிஎல் 2019 தொடரில் பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் திணறி வந்த வாட்சன் இந்த போட்டியில் அதிரடியாக ஆடி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை பெற்றி பெற வைத்தார்.

37 வயதான வாட்சன் 9 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 96 ரன்கள் குவித்து சி.எஸ்.கேவின் தொடர் இரண்டு தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதன் மூலம் 2 பந்துகளை மீதம் வைத்து சென்னை அணி 176 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்றது. 

முன்னதாக வார்னர்- மணீஷ் பாண்டேயின் 115 பார்ட்னர் ஷிப் மற்றும் மனீஷ் பாண்டேவின் 87 ரன்கள் சன்ரைசர்ஸ் அணியை 175/3 என்ற நிலையை எட்ட வைத்தது.

Comments
ஹைலைட்ஸ்
  • நான் அந்த ரகசியத்தை கூறினால். என்ன ஏலத்தில் எடுக்கமாட்டார்கள்" தோனி
  • ஓய்வு பெறும் வரை அந்த ரகசியத்தை சொல்லப்போவதில்லை என்றார் தோனி
  • வாட்சன், 53 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 96 ரன்கள்
தொடர்புடைய கட்டுரைகள்
"தோனியின் அறிவுரை தான் எனக்கு இப்போதும் உதவுகிறது" - தீபக் சஹார்
"தோனியின் அறிவுரை தான் எனக்கு இப்போதும் உதவுகிறது" - தீபக் சஹார்
நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் தோனி: தகவல்!
நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் தோனி: தகவல்!
தோனியை குறித்து சிஎஸ்கே வெளியிட்ட பதிவு !!
தோனியை குறித்து சிஎஸ்கே வெளியிட்ட பதிவு !!
ரிஷப் பன்ட்டின் விக்கெட் கீப்பிங்கை விமர்சித்து ரசிகர்கள் பதிவிட்ட மீம்ஸ்!
ரிஷப் பன்ட்டின் விக்கெட் கீப்பிங்கை விமர்சித்து ரசிகர்கள் பதிவிட்ட மீம்ஸ்!
"இரவு-பகல் டெஸ்ட்டில் தோனி வர்ணனையாளராக வாய்ப்பில்லை": தகவல்!
"இரவு-பகல் டெஸ்ட்டில் தோனி வர்ணனையாளராக வாய்ப்பில்லை": தகவல்!
Advertisement