ஒரே ஓவரில் இரண்டு ஸ்டம்பிங்: "எப்படி செய்தீர்கள் சார்" தோனியை புகழும் ரசிகர்கள்!

Updated: 02 May 2019 11:28 IST

நேற்று நடந்த டெல்லிக்கு எதிரான போட்டியில், தோனி ஸ்டம்பிங் செய்து கிறிஸ் மோரிஸ் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இரண்டு விக்கெட்டுகளை ஒரே ஓவரில் வீழ்த்தினார்.

MS Dhoni Pulls Off Two Stumpings In An Over. "How Do You Do It?", Asks Twitter
போட்டிக்கு பிறகு பேசிய ஜடேஜா, "ஒரு வார்த்தையில், தோனி ஒரு ஜீனியஸ்" என புகழ்ந்தார். © Twitter

எம்.எஸ். தோனி, ஸ்டம்ப்பிங் செய்வதில் வல்லவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. நேற்று நடந்த டெல்லிக்கு எதிரான போட்டியில், தோனி ஸ்டம்பிங் செய்து கிறிஸ் மோரிஸ் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இரண்டு விக்கெட்டுகளை ஒரே ஓவரில் வீழ்த்தினார். 12வது ஓவரில், கிறிஸ் மோரிஸுக்கு  ஜடேஜா பந்து வீசினார். ஸ்டம்பிங் செய்து அவுட் ஆக்கினார் தோனி. அதே ஓவரில், இரண்டு பந்துகளுக்கு பிறகு டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்டம்பிங் செய்தார்.

தோனி, அதிரடியாக ஆடி ரன்கள் குவித்து, டெல்லி அணிக்கு  180 என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் 22 பந்தில் 44 ரன்கள் குவித்தார். ஜடேஜா 10 பந்தில் 25 ரன்கள் எடுத்தார். கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து, 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது சென்னை அணி.

போட்டி தொடங்கும் போது, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த டெல்லி அணி, 99 ரன்களில் ஆட்டம் இழந்து 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

கடிமான பிட்ச்சிலும் 44 ரன்கள் குவித்த ஷ்ரேயாஸ், சென்னை அணியின் பந்துவீச்சாளர்களின் அதிரடியால் வெற்றி பெற முடியாமல் போனது. இம்ரான் தாஹிர் 4 விக்கெட்டுகளும், ஜடேஜா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

81 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்திருந்த டெல்லி, 17 ஓவரில் எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 99 ரன்கள் மட்டுமே எடுத்தது.

'ஸ்மார்ட் கிரிக்கெட்' ஆடும் ஷ்ரேயாஸ் நேற்றைய ஆட்டத்தை இழந்தார், போட்டிக்கு பிறகு பேசிய ஜடேஜா, "ஒரு வார்த்தையில், தோனி ஒரு ஜீனியஸ்" என புகழ்ந்தார்.

டெல்லி மற்றும் சென்னை அணிகள் ஃப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. ஃப்ளேஆஃப் சுற்று அடுத்த வாரம் துவங்குகிறது

Comments
ஹைலைட்ஸ்
  • 12வது ஓவரில், கிறிஸ் மோரிஸுக்கு ஜடேஜா பந்து வீசினார்
  • ஷ்ரேயாஸ் ஐயர் 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்டம்பிங் செய்தார் தோனி
  • இந்திய அணியின் முன்னாள் கேப்டன் 22 பந்தில் 44 ரன்கள் குவித்தார்
தொடர்புடைய கட்டுரைகள்
"அவரை வெளியேற்றுவதற்கு முன், தோனியே விலகினால் நல்லது" - சுனில் கவாஸ்கர்
"அவரை வெளியேற்றுவதற்கு முன், தோனியே விலகினால் நல்லது" - சுனில் கவாஸ்கர்
"தோனியின் ஓய்வு குறித்து தேர்வுக்குழு, கோலி முடிவெடுக்க வேண்டும்": கங்குலி!
"தோனியின் ஓய்வு குறித்து தேர்வுக்குழு, கோலி முடிவெடுக்க வேண்டும்": கங்குலி!
"பாடம் கற்றுக்கொண்டேன்" - தோனி ஓய்வு வதந்திக்கு பின் கோலி!
"பாடம் கற்றுக்கொண்டேன்" - தோனி ஓய்வு வதந்திக்கு பின் கோலி!
#12YearsOfCaptainDhoni - இந்திய ட்ரண்டாக மாறிய தோனி!
#12YearsOfCaptainDhoni - இந்திய ட்ரண்டாக மாறிய தோனி!
தோனியின் ஓய்வு வதந்தி:
தோனியின் ஓய்வு வதந்தி: 'Game of Thrones' வசனம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த சிஎஸ்கே!
Advertisement