"நோபால் சர்ச்சைக்காக தோனிக்கு 3 போட்டிகளில் தடை விதிக்க வேண்டும்" - சேவாக்

Updated: 14 April 2019 12:45 IST

"தோனிக்கு 2-3 போட்டிகளுக்கு தடைவிதிக்க வேண்டும்" என்று சேவாக் வலியுறுத்தியுள்ளார். 

MS Dhoni Let Off Easily, Should Have Been Banned For 2-3 Games: Virender Sehwag
"களத்தில் இருந்த இரு வீரர்களும் நடுவரிடம் முறையிட்டு கொண்டிருக்கும்போது தோனி சென்றது தவறு" என்றார் சேவாக்.  © AFP

இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் வீரேந்திர சேவாக் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை கடுமையாக சாடியுள்ளார். ராஜஸ்தான் அணியுடனான போட்டியில் நடுவர் உல்லாஸ் கண்டேயுடன் தோனி களத்தில் வந்து நோபால் விஷயத்துக்காக வாதிட்டார். இந்த சம்பவத்துக்காக தோனிக்கு  50 சதவிகித போட்டி கட்டணத்தை அபராதமாக விதிக்கப்பட்டது. ஆனால் "தோனிக்கு 2-3 போட்டிகளுக்கு தடைவிதிக்க வேண்டும்" என்று சேவாக் வலியுறுத்தியுள்ளார். 

கிரிக் பஸ் தளத்துக்கு அளித்த பேட்டியில் சேவாக் '' தோனி இந்த விஷயத்தை எளிதாக எடுத்துக் கொண்டார். ஆனால் அவருக்கு 2-3 போட்டிகளை தடைவிதித்தால் மட்டுமே அவருக்கு அது மனதில் ஆழமாக பதியும். இவரை பார்த்து நாளை இன்னொரு கேப்டனும் இதை செய்யலாம். அதனால், தோனி தண்டிக்கப்பட வேண்டும்" என்றார்.

"அவர் இந்த விஷயத்துக்கு முறையிட நினைத்திருந்தால் நான்காவது நடுவருடன் வாக்கி டாக்கியில் பேசியிருக்கலாம். அதைவிடுத்து இப்படி அணுகுவது சரியல்ல" என்றார்.

"களத்தில் இருந்த இரு வீரர்களும் நடுவரிடம் முறையிட்டு கொண்டிருக்கும்போது தோனி சென்றது தவறு" என்றார். 

மேலும், "தோனி சென்னை அணிக்காக அதிகம் உணர்ச்சிவசப்படுகிறார். ஆனால் இந்திய அணிக்காக இவ்வளவு கோபப்ப்பட்டு அவரை நான் பார்த்ததில்லை. 

இந்திய அணிக்காக அவர் இதை செய்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பேன். அவர் சென்னை சூப்பர் கிங்ஸுக்காக அதிகம் உணர்ச்சிவசப்படுகிறார்" என்றார் சேவாக்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
IPL 2020: "காட்டின் ராணி" சாக்‌ஷி தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சிஎஸ்கே!
IPL 2020: "காட்டின் ராணி" சாக்‌ஷி தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சிஎஸ்கே!
இந்தியா vs பங்களாதேஷ்: MS Dhoni-யின் சாதனையை முறியடித்த Virat Kohli....!
இந்தியா vs பங்களாதேஷ்: MS Dhoni-யின் சாதனையை முறியடித்த Virat Kohli....!
"அணியில் இணைகிறாரா தோனி?" - வைரலாகும் பயிற்சி வீடியோ
"அணியில் இணைகிறாரா தோனி?" - வைரலாகும் பயிற்சி வீடியோ
"தோனியின் அறிவுரை தான் எனக்கு இப்போதும் உதவுகிறது" - தீபக் சஹார்
"தோனியின் அறிவுரை தான் எனக்கு இப்போதும் உதவுகிறது" - தீபக் சஹார்
நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் தோனி: தகவல்!
நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் தோனி: தகவல்!
Advertisement