"அவரும் மனிதர்தான்" தோனி விஷயத்தில் மைக்கேல் வாகனுக்கு பதிலளித்த கங்குலி!

Updated: 13 April 2019 12:17 IST

மைக்கேல் வாகனுக்கு பதிலளிக்கும் விதமான இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி "தோனியும் மனிதர்தான்" என்று கூறியுள்ளார்.

MS Dhoni Is Human: Sourav Ganguly Comes To CSK Skippers Defence In No-Ball Controversy
நோ பாலுக்காக நடுவர்களிடம் முறையிட்ட தோனிக்கு சாதகமாக பேசிய கங்குலி, " தோனியும் மனிதர்தான்" என்று கூறியுள்ளார். © BCCI/IPL

ஐபிஎல் தொடரின் அடுத்த  சர்ச்சை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த ஆட்டத்தில் அரங்கேறியுள்ளது. ஆட்டத்தின் நடுவே தோனி களத்தில் புகுந்து நடுவர்களிடம் முறையிட்டார். ஆட்டத்தின் கடைசி ஓவரில் இடுப்பு அளவுக்கு மேலே ஜடேஜாவுக்கு பந்துவீசப்பட்டது. ஆனால் நோபாலாக அதனை அறிவிக்கவில்லை. உடனடியாக தோனி களத்தில் புகுந்து நடுவர்களிடம் வாதாடினார். ஆனால் நடுவர்கள் இருவரும் மறுக்க அங்கிருந்து கோபமாக பெவிலியன் திரும்பினார். 

இந்த செயலுக்கு கருத்து தெரிவித்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ''இது கிரிக்கெட்டுக்கு அழகல்ல. பெவிலியனிலிருந்து கேப்டன் நடுவர்களை நோக்கி இப்படி வந்து முறையிடுவது தவறு'' என்று கூறினார். ஆனால், இதற்கு பதிலளிக்கும் விதமான இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி "தோனியும் மனிதர்தான்" என்று கூறியுள்ளார்.

"எல்லோரும் மனிதர்கள்தான். இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், இதுவும் விளையாட்டின் ஒரு அங்கம்" என்று டெல்லி கேப்பிட்டல் அணியின் ஆலோசகரான சவுரவ் கங்குலி கொல்கத்த அணியுடன் மோதி வெற்றி பெற்ற பிறகு கூறியுள்ளார். டெல்லி கேப்பிட்டஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் வெள்ளியன்று எடன் கார்டன்ஸ் மைதானத்தில் மோதியது.

சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் போட்டியின் போது, ஆட்டத்தின் கடைசி ஓவரில் இடுப்பு அளவுக்கு மேலே ஜடேஜாவுக்கு பந்துவீசப்பட்டது. ஆனால் நோபாலாக அதனை அறிவிக்கவில்லை. இதனால் கோபமடைந்த தோனி களத்துக்குள் வந்து நடுவர்களிடம் முறையிட்டார். இதுவரை தோனி மைதானத்தில் கோபத்தை வெளிப்படுத்தியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்துக்கு பிறகும், சென்னை அணி ராஜஸ்தானை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால், ஐபிஎல் போட்டிகளில் 100 போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் கேப்டன் என்ற பெருமையை பெற்றார் தோனி. கவுதம் கம்பீரை விடவும் 29 போட்டிகளில் அதிகம் வென்றுள்ளார் தோனி.

ஒருபந்தில் 3 ரன்கள் தேவை என்ற போது, பென் ஸ்ட்ரோக்ஸ்  வீசிய பந்தை சாண்ட்னர் சிக்ஸர் அடித்து சென்னை அணியை வெற்றி பெற வைத்தார்.

Comments
ஹைலைட்ஸ்
  • நோபால் சர்ச்சையில் தோனிக்கு சாதகமாக பேசிய கங்குலி
  • தோனியின் விளையாட்டு திறமையை பாராட்டினார் கங்குலி
  • ஆட்டத்தின் நடுவே தோனி களத்தில் புகுந்து நடுவர்களிடம் முறையிட்டார்
தொடர்புடைய கட்டுரைகள்
மார்ச் 2ம் தேதி முதல் ஐபிஎல் பயிற்சியை தொடங்கும் எம்.எஸ்.தோனி!
மார்ச் 2ம் தேதி முதல் ஐபிஎல் பயிற்சியை தொடங்கும் எம்.எஸ்.தோனி!
“ஒரு புலி இன்னொரு புலியை சந்தித்தால்...” - தோனி ரசிகரின் வைரல் கமெண்ட்!
“ஒரு புலி இன்னொரு புலியை சந்தித்தால்...” - தோனி ரசிகரின் வைரல் கமெண்ட்!
“இந்திய கேப்டன்களில் சிறந்தவர் தோனி” - சுரேஷ் ரெய்னா
“இந்திய கேப்டன்களில் சிறந்தவர் தோனி” - சுரேஷ் ரெய்னா
ஆர்.பி. சிங் மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோருக்கு பானி பூரி பரிமாறிய தோனி!
ஆர்.பி. சிங் மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோருக்கு பானி பூரி பரிமாறிய தோனி!
“மிக சிறந்த இந்திய கேப்டன் தோனி” - புகழ்ந்த ரோஹித் ஷர்மா!
“மிக சிறந்த இந்திய கேப்டன் தோனி” - புகழ்ந்த ரோஹித் ஷர்மா!
Advertisement