மான்கடிங் முறையில் அவுட் செய்ய தோனியை எச்சரித்த க்ருணால் பாண்ட்யா

Updated: 04 April 2019 14:54 IST

ஆட்டத்தில் ஸ்டெம்புக்கு முன் நின்று பேட்டிங் செய்யும்போதும் சரி, பின்னால் நின்று கீப்பிங் செய்யும்போதும் சரி  எந்த தவறையும் அவ்வளவு எளிதில் செய்யமாட்டார் தோனி.

MS Dhoni Gets
க்ருணால் பாண்ட்யா தோனியை மான்கடிங் முறையில் ஆட்டமிழக்க செய்ய போவதாக எச்சரிக்கை விடுத்தார். © Screengrab: www.iplt20.com

தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் 15 ஆண்டுகளாக ஆடி வருகிறார். அனைவராலும் கவனிக்கப்படும் வீரராக இருக்கிறார். ஆட்டத்தில் ஸ்டெம்புக்கு முன் நின்று பேட்டிங் செய்யும்போதும் சரி, பின்னால் நின்று கீப்பிங் செய்யும்போதும் சரி  எந்த தவறையும் அவ்வளவு எளிதில் செய்யமாட்டார். மும்பை இந்தியன்ஸுடனான ஆட்டத்தில் தோனி எதிர்முனையில் நின்று கொண்டிருந்த போது க்ருணால் பாண்ட்யா தோனியை மான்கடிங் முறையில் ஆட்டமிழக்க செய்ய போவதாக எச்சரிக்கை விடுத்தார். ஆனால் தோனியின் பேட் முழுவதுமாக க்ரீஸுக்குள் இருந்தது. 

அப்போது வர்ணனை செய்து கொண்டிருந்த சஞ்சய் மஞ்ரேக்கர், "தோனி தவறை மிகவும் அரிதாக செய்பவர். அவர் பெரும்பாலும் அனைத்தையும் சரியாக செய்ய கூடியவர்" என்றார்.

முன்னதாக ஐபிஎல் தொடரில் பட்லரை அஷ்வின் மான்கடிங் செய்தது பெரும் சர்ச்சைக்குள்ளானது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் குவித்தது. சூர்யகுமார்யாதவ் அபாரமாக ஆடி அரைசதமடித்தார். 

க்ருணால் பாண்ட்யா 42 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பாண்ட்யா 25, பொலார்ட் 17 ரன்களை கடைசி கட்டத்தில் அதிரடியாக குவிக்க மும்பை இந்தியன்ஸ் 170 ரன்களை கடந்தது.  சென்னை தரப்பில் ப்ராவோ, சஹார், ஜடேஜா, தாஹிர், மோஹித் ஷர்மா தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. கேதர் ஜாதவ் மட்டும் அரைசதமடித்தார். மற்ற யாரும் ரன் குவிக்காததால் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

இது சென்னையின் ஐபிஎல் 2019 தொடரின் முதல் தோல்வி ஆகும். மும்பை தரப்பில் மலிங்கா, ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளையும், பெகண்ட்ராஃப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Comments
ஹைலைட்ஸ்
  • மைதானத்தில் எந்த தவறையும் அவ்வளவு எளிதில் செய்யமாட்டார் தோனி
  • தோனி சர்வதேச கிரிக்கெட்டில் 15 ஆண்டுகளாக ஆடி வருகிறார்
  • மான்கடிங் முறையில் ஆட்டமிழக்க செய்ய போவதாக எச்சரித்தார் க்ருணால்
தொடர்புடைய கட்டுரைகள்
"அவரை வெளியேற்றுவதற்கு முன், தோனியே விலகினால் நல்லது" - சுனில் கவாஸ்கர்
"அவரை வெளியேற்றுவதற்கு முன், தோனியே விலகினால் நல்லது" - சுனில் கவாஸ்கர்
"தோனியின் ஓய்வு குறித்து தேர்வுக்குழு, கோலி முடிவெடுக்க வேண்டும்": கங்குலி!
"தோனியின் ஓய்வு குறித்து தேர்வுக்குழு, கோலி முடிவெடுக்க வேண்டும்": கங்குலி!
"பாடம் கற்றுக்கொண்டேன்" - தோனி ஓய்வு வதந்திக்கு பின் கோலி!
"பாடம் கற்றுக்கொண்டேன்" - தோனி ஓய்வு வதந்திக்கு பின் கோலி!
#12YearsOfCaptainDhoni - இந்திய ட்ரண்டாக மாறிய தோனி!
#12YearsOfCaptainDhoni - இந்திய ட்ரண்டாக மாறிய தோனி!
தோனியின் ஓய்வு வதந்தி:
தோனியின் ஓய்வு வதந்தி: 'Game of Thrones' வசனம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த சிஎஸ்கே!
Advertisement