ஐபிஎல் தொடரில் 200 சிக்ஸர்களை கடந்த முதல் இந்தியர் தோனி!

Updated: 22 April 2019 13:35 IST

தோனி, ஐபிஎல் தொடரில் 200 சிக்ஸர்களை அடிக்கும் 3வது வீரராவார். கெயில் 323 சிக்சர்களையும், டிவில்லியர்ஸ் 204 சிக்சர்களையும் விளாசி முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். 

RCB vs CSK: MS Dhoni Becomes 1st Indian To Achieve Remarkable IPL Feat
தோனி முதல் முறையாக 200 சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.  © BCCI/IPL

ஆர்சிபி அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஆடிய தோனியின் அதிரடியான ஆட்டம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. கடைசி பந்தில் தக்கூர் ரன் அவுட் ஆகி சென்னை ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்றது. எனினும், தோனியின் ஆட்டம் ஒரு நிமிடம் ஆர்சிபியின் வெற்றியை பறிக்கும் விதமாக மாறியிருந்தது. 48 பந்தில் 84 ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதுதான் ஐபிஎல் போட்டிகளில் தோனியின் அதிகபட்ச ஸ்கோராகும். அதுமட்டுமின்றி தோனி முதல் முறையாக 200 சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். 

தோனி, ஐபிஎல் தொடரில் 200 சிக்ஸர்களை அடிக்கும் 3வது வீரராவார். கெயில் 323 சிக்சர்களையும், டிவில்லியர்ஸ் 204 சிக்சர்களையும் விளாசி முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். 

நேற்றைய போட்டியில் தோனி 7 சிக்சர்களை விளாசினார். இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் 203 சிக்ஸர்களை அடித்து, அதிக சிக்ஸர் அடித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்தார்.

இந்திய வீரர்களில் முதலிடத்தில் தோனி உள்ளார். அதற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் ரோஹித் மற்றும் ரெய்னா 190 சிக்ஸர்களுடனும், கோலி 186 சிக்சர்களுடனும் உள்ளனர். 

முன்னதாக 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணி, கடைசி ஓவரில் 26 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலைக்கு வந்தது. உமேஷ் யாதவ் வீசிய பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களை விளாசினார். கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. உமேஷ் அந்த பந்தை ஸ்லோ பாலாக வீசினார்.

கடைசி பந்து நேராக கீப்பரிடம் செல்ல தோனி மறுமுனைக்கு ஓடினார். ஆனால் எதிர் முனையில் இருந்த ஷரதுல் தக்கூர் ரன் அவுட் ஆனார். இதனால் ஆர்சிபி 1 ரன் வித்தியாசத்தில் வென்றது.

பார்த்திவ் பட்டேலின் அரைசதத்தால் ஆர்சிபி 20 ஓவரில் 161 ரன்கள் குவித்திருந்தது. இது ஆர்சிபியின் மூன்றாவது ஐபிஎல் வெற்றியாகும்.

Comments
ஹைலைட்ஸ்
  • 200 சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார் தோனி
  • ஐபிஎல் தொடரில் 200 சிக்ஸர்களை அடிக்கும் 3வது வீரராவார்
  • மொத்தமாக ஐபிஎல் போட்டிகளில் 203 சிக்ஸர்களை அடித்துள்ளார் தோனி
தொடர்புடைய கட்டுரைகள்
இந்தியா vs பங்களாதேஷ்: MS Dhoni-யின் சாதனையை முறியடித்த Virat Kohli....!
இந்தியா vs பங்களாதேஷ்: MS Dhoni-யின் சாதனையை முறியடித்த Virat Kohli....!
"அணியில் இணைகிறாரா தோனி?" - வைரலாகும் பயிற்சி வீடியோ
"அணியில் இணைகிறாரா தோனி?" - வைரலாகும் பயிற்சி வீடியோ
"தோனியின் அறிவுரை தான் எனக்கு இப்போதும் உதவுகிறது" - தீபக் சஹார்
"தோனியின் அறிவுரை தான் எனக்கு இப்போதும் உதவுகிறது" - தீபக் சஹார்
நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் தோனி: தகவல்!
நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் தோனி: தகவல்!
தோனியை குறித்து சிஎஸ்கே வெளியிட்ட பதிவு !!
தோனியை குறித்து சிஎஸ்கே வெளியிட்ட பதிவு !!
Advertisement